+2 தேர்வு  முடிவுகள் வெளிவந்ததுமே பெற்றோர்களும் மணவர்களும் கூட்டணி அமைத்து உடனடியாக செய்ய வேண்டிய செயல்கள் சில உண்டு. 1) வருகிற தேர்வு முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.மிக மிக அரிதாக,மறு மதிப்பீட்டுக்கு தேவையான…

(முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் கண்ணனைப் பற்றி எழுதிக் கொண்டே வந்த வரிகள் கைகோர்த்து கவிதையாயின) வெண்ணெய் கனவில் கண்ணன் புரள கண்ணன் நினைவில் குழலும் உருள எழுந்த சங்கீதம் எவர்செய் ததுவோ கண்ணன் செவ்வாய்…

பெரிதாய் எதையும் சொல்வதற்கில்லை பெரிதென எதையும் சொல்வதுமில்லை சிறிதாய் எதுவும் தோன்றவுமில்லை சிறுமையும் பெருமையும் அவரவர் எல்லை பொதுவாய் எதையும் சொல்வதற்கில்லை பொதுவெனசொல்பவை பொதுவும் இல்லை நதிநிலம் கடலெதும்நமக்கென இல்லை நாமில்லாமலும் நதிநிலம் இல்லை…

“வீணைகள்” என்னும்சொல்லில் தொடங்கும் விடுகதைகள் எழுதிக் குவிக்கிறேன் ராவண குணத்தின் உருவகமாய் ராட்சச அதிர்வின் எதிரொலியாய் ஆணவத்தால் கயிலாயத்தை அசைத்தவன் சிக்கிய அழுகையாய் மாளிகை தன்னில் மண்டோதரியின் மஞ்சத்தில் எழுகிற விசும்பலாய் அபசுரம் கூட…

திரளும் முகில்கள் தயங்கி நடக்கும் உருளும் தேர்களாய் உயரே அசையும். எந்தப் பரப்பில் எந்த நொடியில் விழுவதென்றே வியூகம் அமைக்கும். சொந்த முடிவா?சந்தர்ப்ப வசமா? எந்த வகையிலோ இறங்கத் தவிக்கும். எம்மழை எவ்விடம்…என்பது எவர்வசம்…

குமுதம் வார இதழில் ‘வைரமுத்து சிறுகதைகள்’ எனும் நெடுந்தொடரைப் பாராட்டி ஜெயகாந்தன் அவர்களின் பெயரிலான கடிதம் வெளிவந்தது தொடர்பான சர்ச்சையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். நான் ஜெ.கே. மீது வழிபாட்டுணர்வு…

முழக்கங்கள் முனகலாகும் முனகலும் ஓய்ந்து போகும் விளக்கங்கள் விவாதமாகும் விவாதமும் மறந்து போகும் கலக்கங்கள் தெளியலாகும் கேள்விகள் தோன்றும் போகும் நிலைக்கொள விரும்பும் நெஞ்சே நித்தியன் பெயரைப் பாடு மகுடங்கள் களவு போகும் மகிமைகள்…

புவனம் ஆள்பவள் ஈஸ்வரியாம்-அடப் போடா அதனால் எனக்கென்ன குவளைத் தண்ணீர் நான்கேட்டால்-அவள் குடுகுடு எனவந்து நீட்டுகிறாள் கவலை கொஞ்சம் படிந்தாலும்-அவள் கைகளில் அள்ளித் தேற்றுகிறாள் “துவள வேண்டாம் எப்போதும்-நல்ல துணை நான்” என்று காட்டுகிறாள்…

மூடிக் கிடந்த குளிர்பெட்டி-அதில் மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே பாடி முடிந்த கீர்த்தனையாய்- எங்கள் பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே மேடுகள் ஏறிய ஜீவநதி -நெடும் மௌனத்தில் தூங்கிய தருணமிது கூடு கிடத்தி சிறகடித்தான் -ஒரு கனல்பறவை…

ஜெயகாந்தன் எழுதாத நேரங்களிலும் ஓர் எழுத்தாளராய் ஒளிர்ந்தவர்.தொழில் சார்ந்த முழுநேர எழுத்தாளர்கள் பலருண்டு. ஆனால் அவர் நுண்ணுணர்வின் ஓயாச் சுடரால் ஒளிவீசிக் கொண்டேயிருந்தவர். இரவுப் பொழுதுகளில் கதிரவன் நம் கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்கோ ஒளிவீசியதைப்…