கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பாக 2011 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களும், கவியரசர் கண்ணதாசனின் உதவியாளரும்-“என் அண்ணன் கண்ணதாசன்” நூலின் ஆசிரியருமான திரு.இராம.முத்தையா அவர்களும் விருதுகள் ஏற்கின்றனர்.

ரூ.50,000/ பணமுடிப்பும்,பட்டயமும் கொண்ட இந்த விருதுகளை, இலக்கிய ஆர்வலர் திரு.கிருஷ்ணக்குமார் தன் சொந்தப் பொறுப்பில் வழங்கி வருகிறார்.

இந்த விருதுகள் 26.06.2011 ஞாயிறன்று கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நிகழவுள்ள முழு நாள் விழாவின்போது வழங்கப்படவுள்ளன.

2009 ஆம் ஆண்டுக்கான விருது,திரு.நாஞ்சில் நாடன்,பாடகி திருமதி.டி.ஆர்.எம் சாவித்திரி ஆகியோருக்கும்,2010 ஆம் ஆண்டுக்கான விருது திரு.கல்யாண்ஜி,பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன

Comments

  1. சென்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டபோழுதே முடிவு செய்து விட்டேன்.
    இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.
    விருது அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
    விழாவினை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்

  2. உங்களை தொடர்ந்து வாசிக்கும் ரசிகன் அல்ல என்றாலும், கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவன்!
    (வல்லமை தாராயோ !- நினைவிருக்கலாம்:நீங்கள் விருந்தினரை நோக்கி ஒரு தேதி குறிப்பிட்டு சம்பவம் கேட்ட போழ்தில், மும்பை குண்டு வெடிப்பு நாள் என்று கூறி உங்கள் பாராட்டு பெற்றேன்!!)
    இப்போது கோவைவாசி ஆன போதும் உங்கள் 22ம் தேதி நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போகிறதே என்று வருத்தம்.. சென்னை செல்வதால்!

    சரி ஏன் நீங்கள் இந்நிகழ்ச்சி குறித்து இந்த வலைப்பூவில் எழுதவில்லை? தினசரி விளம்பரம் பாராத எவ்வளவோ பேர் வந்து ரசித்திருக்கலாமே? – ரோமிங் ராமன்

  3. நன்றி திரு.சிவசங்கர்.
    அவசியம் வருக.
    திரு.ராமன் உங்கள் யோசனை எனக்குத் தோன்றவில்லை.ஆனபோதும்
    அத்தனை நாளிதழ்களிலும் விளம்பரங்கள் வந்திருப்பதால் அவை மக்களை சென்று சேர்ந்திருக்கும்.எனினும் அடுத்த முறையிலிருந்து வலையேற்றமும் செய்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *