நேர்க்கோடுகளாய் நிமிர்ந்த வாழ்க்கையை யாரோ வளைத்தால் அது அகங்காரம்! நீயாய் வளைத்தால் அது அலங்காரம்! வளைந்து கிடந்த வில்லை இராமன் நிமிர்த்த முயன்றான் அதுவரை நியாயம். ஒடித்தான்: என்செய்? அவன் அவதாரம்!! வளைந்து கிடக்கும்…

கடல்

August 12, 2016 0

தனித்தனியாய் நாமொரு துளி துளித்துளியாய் நாமொரு கடல் தனித்தனியாய் நாமொரு கனி கனி கனியாய் நாமொரு வனம் தனித்தனியாய் அனுபவங்கள் தொகுத்துவைத்தால் சரித்திரங்கள் தனித்தனியாய் சம்பவங்கள் தொகுத்துச் சொன்னால் சாதனைகள் தனித்தனியாய் தவத்திலிரு வரம்கிடைத்தால்…

இதுநேரம்

August 11, 2016 0

காற்று நடக்கிற வான்வெளியில் – உன் கனவுகள் இருக்கும் பத்திரமாய் நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் – உன் நினைவில் இருக்கும் சித்திரமாய் கீற்று வெளிச்சம் படிந்தபின்னே – இருள் கூடாரங்கள் கலைத்துவிடும் ஆற்றல் அரும்பி…

சுகம்

August 10, 2016 0

விளையும் நிலத்தில் விதைகள் சுகம் வீணையின் நரம்பில் விரல்கள் சுகம் களைகள் களைந்த வயல்கள் சுகம் கனவுகள் நிறைந்த கண்கள் சுகம் முயல்வதில் வருகிற முனைப்பு சுகம் முத்திரை பதிக்கும் உழைப்பு சுகம் தயக்கங்கள்…

வரைபடம்

August 9, 2016 0

வானம் எனக்கென வரைந்து கொடுத்த வரைபடம் ஒன்றுண்டு நானே என்னைத் தேடி அடைந்திட நேர்வழி அதிலுண்டு ஊனெனும் வாகனம் ஒட்டி மகிழ்வது ஒருதுளி உயிராகும் ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது எங்கோ அதுபோகும் மாற்று…

குவளைத் தண்ணீர் குடித்துக் கிளம்பு குறிக்கோள் நோக்கிச் செல்ல கவலைக் கண்ணீர் துடைத்துக் கிளம்பு கருதிய எல்லாம் வெல்ல தவறுகள் தந்த தழும்புகள் எல்லாம் தத்துவம் சொல்லும் மெல்ல தவம்போல் உந்தன் தொழிலைத் தொடர்ந்தால்…

வானப் பரப்பிடையே – கரு வண்ணக் கருமுகில்கள் தேனைப் பொழிகையிலே – மணி திமிறிச் சிலிர்க்கிறது ஏனோ கடும்வெய்யில் – என ஏங்கிய ஏக்கம்போய் தானாய் குழைகிறது – விதை தாங்கி மலர்கிறது நேற்றைய…

வானமுகில் கதைபேசி ஓய்ந்தால் – சொன்ன வார்த்தைசொல்லி சலசலக்கும் ஆறு! தேனீக்கள் கதைபேசி ஓய்ந்தால் – நல்ல தேன்துளிகள் சேமிக்கும் கூடு கானங்கள் கதைபேசி ஓய்ந்தால் – அந்த காருண்யம் சுமந்திருக்கும் காற்று மனிதர்கள்…

  சிறகுகள் இருந்தும் என்னபயன் – அந்த சேவல்பறக்க மறந்துவிட்டால் உறவுகள் இருந்தும் என்னபயன் – உன் உணர்வுகள் மதிக்க மறந்துவிட்டால் பிறவி எடுத்தும் என்னபயன் – நீ பயனுற வாழ மறந்துவிட்டால் மறதி…

நாற்றுகளின் தலைகலைத்து நடக்கும் தென்றல் நாளைகளின் மெல்லரும்பை சீண்டிப் பார்க்கும் கீற்றுகளைக் கொட்டுகிற முழுவெண் திங்கள் குளத்திலுள்ள அல்லிகளை சீண்டிப் பார்க்கும் நேற்றுகளின் நினைவுகளோ இன்று வந்து நிகழ்கணத்தை மெதுவாக சீண்டிப் பார்க்கும் ஊற்றெடுக்கும்…