விளையும் நிலத்தில் விதைகள் சுகம்
வீணையின் நரம்பில் விரல்கள் சுகம்
களைகள் களைந்த வயல்கள் சுகம்
கனவுகள் நிறைந்த கண்கள் சுகம்

முயல்வதில் வருகிற முனைப்பு சுகம்
முத்திரை பதிக்கும் உழைப்பு சுகம்
தயக்கங்கள் உடைக்கும் நினைப்பு சுகம்
தொடரும் பணிகளின் களைப்பு சுகம்

கனிவில் நெகிழ்கிற இதயம் சுகம்
காலைதோறும் உதயம் சுகம்
தனிமையில் வருகிற தெளிவு சுகம்
தடைகளை உடைக்கும் வலிவு சுகம்

திட்டங்கள் தீட்டும் கூர்மை சுகம்
தனக்கே தெரியும் நேர்மை சுகம்
வட்டங்கள் தாண்டும் வேகம் சுகம்
வாழ்க்கை தருகிற ஞானம் சுகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *