அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
இறைவன் மீது நாம் பக்தி செலுத்த வேண்டுமென்பது கூட இறைவன் மேற்கொள்கிற முடிவேயன்றி நம் முடிவல்ல. பக்குவப்பட்ட உயிரை வலிய வந்து ஆட்கொள்ளும் பெருங்கருணை கடவுளின் இயல்பு. உமையும் சிவனும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தில் காட்சியருளி அபிராமி பட்டரை ஆட்கொண்டு அவரையும் பக்தி செலுத்த வைத்து விட்டார்கள். அதனால் என்னென்ன விடுதலைகள் ஏற்படுகின்றன என்ற பட்டியலைத் தருகிறார் அபிராமிபட்டர். எந்த நெறி நமக்கு முக்தி தருமோ என்று தேடியலைய வேண்டியதில்லை.உமையும் உமையொரு பாகனும் இந்தப் பிறவியிலேயே வினைகளைநீக்கப்போவதால் வேறொரு ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
வாழ்வில் நமக்கிருக்கும் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான வேறுபாடு நம் அணுகுமுறையிலிருந்தே புரியும்.தொடர்பிலிருக்கும் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சந்திப்பதாகக் கூறியிருந்தால் நாம் அந்த நேரத்தை அவருகென ஒதுக்கி வைப்போம். ஆனால் அவர் வராவிட்டால் அதற்காகப் பெரிதாய் அலட்டிக் கொள்ளமாட்டோம். ஆனால் நெருக்கமான உறவில் இருக்கும் ஒருவர் வருவதாகச் சொன்னாலோ அவர் சொன்ன நேரத்திற்கு முன்பிருந்தே மனதில் எதிர்பார்ப்பு பெருகத் தொடங்கும்.காலந் தாழ்த்தினால் பதட்டம் பரவும். உறவின் அணுக்கமே உணர்வின் பெருக்கத்தைத் தீர்மானிக்கிறது. அம்பிகையை சரணடைந்த அபிராமி பட்டருக்கு ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
சித்தி என்ற சொல்லுக்கு பல்வேறு நிலைகளில் விதம்விதமான பொருள் சொல்வது வழக்கம். எனினும் அடிப்படையில் பார்த்தால் ஒருவருக்கு எது இயல்பாக எளிதாகக் கைவருகிறதோ அதற்கு சித்தி என்று பெயர்.கைவரப்பெற்ற திறமைக்கு சித்தி என்று பெயர். ஒரு மருத்துவர், நாளொன்றுக்கு பத்து அறுவை சிகிச்சைகள் செய்கிறார்என்றால் பத்தும் வெற்றியடைகின்றன என்றால் அந்த நிபுணத்துவம் அவருக்கு சித்தியாகி இருப்பதாகப் பொருள். உலகவாழ்வில் பெறும் இத்தகைய திறன் சார்ந்த சித்திகளுக்கும் ஆன்மீகத்தில் கைவரப் பெறும் சித்திகளுக்கும் அவற்றின் அடிப்படைத் தன்மையில் வேறுபாடில்லை. ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
தமிழிலக்கணத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று நிரல்நிறையணி. ராமுவும் சோமுவும் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் வந்தார்கள் என்றால் ராமு சைக்கிளிலும் சோமு ஸ்கூட்டரிலும் வந்ததாகப் பொருள். நடனமாடக்கூடிய சிவபெருமானுடன் சொல்லோடு பொருள்போல பின்னிப் பிணைந்திருக்கும் அபிராமியே என்பதன்மூலம், சொல்-சிவபெருமான்,சொல்லின் பொருள்-அபிராமி என்று நயம்பட விளக்குகிறார் அபிராமிபட்டர். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தினுள்ள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து”” என்பது மணிவாசகர் வாக்கு. “சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே! என்னும்போது சிவம் என்ற சொல்லுக்கு ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
மனிதனிடம் இருக்கும் சில குணக்குறைபாடுகள்,பிறவிகளின் தொடர்ச்சியாய் வருபவை.சிலருக்கு மற்றவர்கள்மேல் இனந்தெரியாத வெறுப்பு தோன்றும்.யாருடனும் கலந்து பழக மாட்டார்கள்.தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் பார்ப்பார்கள். இப்படி தங்கள் மனத்தடைகளிலேயே சிக்கிப்போகிற சூழல் முந்தைய பிறவிகளின் வினைத்தொடர்பால் வருபவை. அந்தத் தடைகளை அகற்றுகிற வரையில் யார்மீதும் அன்பு காட்ட முடியாது. பிறவியிலேயே வரும் இந்தக் குணவிசித்திரங்கள் இந்தப் பிறவியிலும் நன்கு வேர்விட்டு அடுத்தடுத்த பிறவிகளுக்கும் வழிவகுக்கும். அதனாலேயே இதை வஞ்சப்பிறவி என்கிறார் அபிராமிபட்டர். முந்தைய பிறவிகளின் சாரமெடுத்து ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அபிராமியை வணங்குவதால் ஏதேதோ பெருமைகள் எல்லாம் சேரும் என்கிறீர்களே?அப்பட் பெருமைகள் சேரப் பெற்றவர்களை எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று அபிராமி பட்டரிடம் ஒருவர் கேட்டாரோ என்னவோ! எங்கள் அன்னையை வணங்கும் அடியவர்களைப் பார்க்க வேண்டுமா? பதினான்கு உலகங்களையும் படைத்துக் கொண்டும் காத்துக் கொண்டும் அழித்துக் கொண்டும் திரிகிறார்களே! அவர்களைப் போய் பாருங்கள் என்கிறார் அபிராமி பட்டர். அந்த விநாடியே அவருக்கொரு சிந்தனை ஏற்படுகிறது.அம்பிகையின்கூந்தலில் பூங்கடம்பு மலர்கள் மணக்கின்றன. அவளுடைய திருவடித்தாமரைகளோ நறுமணம் கொன்டவையாய்த் திகழ்கின்றன.அவளுடைய அடியவர்களோ முதல் ...