சிறப்புரை-திரு.புத்தர்!
பொன்னுக்கு வீங்கிகள் பூமியில் ஒருநாள் புத்தன் வந்து சேர்ந்தானாம் கண்ணுக்குள் ஏதோ வெளிச்சம் கண்டவர் கைகள் கூப்பித் தொழுதாராம் இனனமும் தங்கம் சேர்க்கும் வழிகள் இவரே சொல்வார் என்றாராம் மண்ணைப் பொன்னாய் மாற்றிட நமக்கு மந்திரம் தருவார் என்றாராம் மன்றத்தில் ஒருநாள் புத்தனை அமர்த்தி மாலைகள் எல்லாம் போட்டாராம் பொன்னாடைகள் பலப்பல ரகங்களில்… புத்தன் மிரண்டு போனானாம் “இன்னும் ஒருசில நொடிகளில் அய்யா இன்னுரை நிகழும்” என்றாராம் மின்னல் போலே வெளியிலிருந்து மக்கள் மேலும் வந்தாராம் ஆசையே ...
நதியின் மறுபெயர் ஆறு
( இன்று சர்வதேசமருத்துவ நிபுணர்களாகத் திகழும் டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோரின் தந்தை மருத்துவர் சண்முகநாதன். தாயார் திருமதி கனகவல்லி. இவர்களின் முயற்சியில் எழுந்ததே கோவை கங்கா மருத்துவமனை. இது உருவான விதம் பற்றி “ஓர் அன்னையின் கனவு” என்றொரு நூல் எழுதினேன். நூலின் நாயகிக்கு கடிதமாக எழுதியதே நூலின் முன்னுரையானது) மதிப்பிற்குரிய கனகவல்லி அம்மா அவர்களுக்கு, மரபின்மைந்தன் எழுதுகிறேன். வணக்கம்.கடிதம் எழுதும் கலையில் நீங்கள் கைதேர்ந்தவராம்.உங்கள் புதல்வர்கள் சொல்லியிருக்கிறார்கள். உங்களுக்கொரு கடிதம் எழுதத் தோன்றியது.இன்று ...
உற்சாகத்தின் தொழிற்சாலை-ரிஷபாரூடன்
பிறவிக் குணமல்ல உற்சாகம்.பழக்கத்தாலும் பயிற்சியாலும் வருவதுதான்.இந்த உண்மையை முதலில் ஒப்புக் கொள்வோம். எல்லோருக்கும்,எல்லாச் சூழலும் உற்சாகமாய் உள்ளத்தை வைத்திருக்கும் வாய்ப்பை வழங்காது.ஆனால்,உற்சாகமாய் இருப்பது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் வெளிச்சூழல் அதை மாற்றவே முடியாது.ஏன் தெரியுமா?வெளியேயிருந்து வருவதல்ல உற்சாகம். உள்ளே இருந்து உருவாவது அது. உங்கள் அழகுக்கும் உற்சாகத்துக்கும் சம்பந்தமில்லை.உங்கள் பணத்துக்கும் உற்சாகத்துக்கும் சம்பந்தமில்லை.உங்கள் வேலைக்கும் உங்கள் உற்சாகத்துக்கும் சம்பந்தமில்லை.இவையெல்லாம் மிக சாதாரணமாக இருந்தாலும் நீங்கள் அசாதாரணமானவராக,அதீத உற்சாகம் உள்ளவராக இருக்க முடியும். நீங்கள் யார் என்கிற ...
புள்ளிகளை இணையுங்கள் ! பெரும்புள்ளி ஆவீர்கள்
“வீட்டில் ஏன் இருக்கிறாய்?ஊரில் இரு. ஊரில் ஏன் இருக்கிறாய்?நாட்டில் இரு. நாட்டில் ஏன் இருக்கிறாய்?உலகத்தில் இரு. உலகத்தில் ஏன் இருக்கிறாய்?பிரபஞ்சத்தில் இரு. பிரபஞ்சத்தில் ஏன் இருக்கிறாய்?பிரபஞ்சமாய் இரு!!” இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை. ஒரு மனிதன் தன்னுடைய வட்டத்தைப் பெருக்கிக் கொண்டே போகிற போது,அவனுடைய சக்தி வட்டமும் பெருகி விரிகிறது என்பதை இந்தக் கவிதை சொல்லாமல் சொல்கிறது.தன்னை பிரபஞ்சத்தில் ஒரு துளியாகப் பார்ப்பவர்கள் சாதாரண மனிதர்கள்.தங்களை பிரபஞ்சத்தின் ஒளியாகப் பார்ப்பவர்களே சாதனை மனிதர்கள். ...
சில வியூகங்கள்..சில விநோதங்கள்
ஆயுத சாத்திரம் அறத்தை மறந்தது பாய்கிற கணையோ பின்வழி வந்தது * நேர்வழி அபிமன்யு தேர்வழி எனினும் போர்வழி ஏனோ பாதை புரண்டது * துள்ளி யெழுந்த தூயனுக்கெதிராய் வெள்ளிகள் தானே விரைவாய்ப் பாய்ந்தன; * ஒற்றை இரவில் ஓங்கிய துரோகம் உற்றவர் வகுத்தனர் ஊழலின் வியூகம் * துரோணர் தடுத்தும் துரோகம் சூழ்ந்தது வரலாறு இதனை வெட்கமென்றது * சரியாய் உடைத்தான் சக்கர வியூகம் நரியார் நுழைத்த சூழ்ச்சிகள் ஏகம்! * தரையைத் தொட்டது தற்காலிகமே ...
பாணன் ஒருவனின் பயணமிது-மரபின் மைந்தன் முத்தையா
( இசைக்கவி ரமணன் அவர்களின் நதியில் விழுந்த மலர் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை) பயணம் போகும் பாணன் ஒருவன், பகல் பொழுதொன்றில் மரநிழலில் ஒதுங்கி,கட்டு சோற்றினைப் பிரித்துண்டு,நீரருந்திசௌகரியமான சாய்மானத்தில் ஏட்டுச்சுவடியில் எழுதிப்பார்த்த வரிகள் இவை.அகம்கூட்டும் அவதானிப்பில் முகம்காட்டும் பல்லவிகளின் காது திருகி இழுத்துவந்து கவிதைகளாக்கிய எக்காளம் எல்லாப் பக்கங்களிலும் ஒலிக்கிறது.வாழ்க்கையின் மூலம் தேடித்திரியும் சாதகன் ஒருவனின் வாக்குமூலங்கள் இவை.எனவே வடிவம் குறித்தோ அடர்த்தி குறித்தோ அச்சமின்றி அவை வெடித்துக் கிளம்பி வெளிவருகின்றன. இசைக்கவி ரமணனை நன்கறிந்தவர்கள் ...