Blog

/Blog

பாணன் ஒருவனின் பயணமிது-மரபின் மைந்தன் முத்தையா

( இசைக்கவி ரமணன் அவர்களின் நதியில் விழுந்த மலர் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை) பயணம் போகும் பாணன் ஒருவன், பகல் பொழுதொன்றில் மரநிழலில் ஒதுங்கி,கட்டு சோற்றினைப் பிரித்துண்டு,நீரருந்திசௌகரியமான சாய்மானத்தில் ஏட்டுச்சுவடியில் எழுதிப்பார்த்த வரிகள் இவை.அகம்கூட்டும் அவதானிப்பில் முகம்காட்டும் பல்லவிகளின் காது திருகி இழுத்துவந்து கவிதைகளாக்கிய எக்காளம் எல்லாப் பக்கங்களிலும் ஒலிக்கிறது.வாழ்க்கையின் மூலம் தேடித்திரியும் சாதகன் ஒருவனின் வாக்குமூலங்கள் இவை.எனவே வடிவம் குறித்தோ அடர்த்தி குறித்தோ அச்சமின்றி அவை வெடித்துக் கிளம்பி வெளிவருகின்றன. இசைக்கவி ரமணனை நன்கறிந்தவர்கள் ...

ம.பொ.சி-வாழ்வியல் சித்திரம்

தன்னுடைய தலைமையில் ஓர் இயக்கமே உருவான பிறகு கூட சின்னஞ்சிறிய இல்லமொன்றில் அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த ஒரு தலைவரைக் காண ஒரு தொண்டர் கோவையிலிருந்து செல்கிறார். தனக்கு நன்கு அறிமுகமான அந்தத் தொண்டரை,உள்ளே அழைத்து அமரவைத்துப் பேசுகிறார். அந்தத் தலைவர்,ம.பொ.சி.கோவையில் கழகப் பணிகள் எப்படி நடக்கின்றன என்று கேட்கிறார். “குடந்தை பாலுவைஅழைத்து ரெண்டு கூட்டம் நடத்துனோங்கையா,ரெண்டு கிளைகளும் தொடங்கினோம்” என்கிறார் தொண்டர். அடுத்து ம.பொ.சி. கேட்கிறார்,”ஆமாம்,புவியரசு எப்படியிருக்கிறார்?” வந்த தொண்டர் அதிர்ச்சியுடன் “அய்யா” என்றதும்,ம.பொ.சி. அதிர்ச்சியாகி, ” ...

கம்பனில் மேலாண்மை-3

(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) ஒரு நிறுவனம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் குறிப்பிட்ட வணிக வாய்ப்பைப் பெற வேண்டுமென்றால் அதற்கென்று சில நியதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். அந்த நிறுவனத்தின் உயரத்திற்குப் பொருந்தாதவாறு மிக எளிய மனிதர்களிடம் சில சான்றாவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தால் அதனைச் செய்தே ஆக வேண்டும். சுக்ரீவனின் நட்பினை வேண்டிப் பெறுதல் இராமனின் தகுதிக்கு உகந்ததல்ல என்பதை வாலியே சொல்கிறான். இராமன் யாருடைய துணையும் ...

கம்பனில் மேலாண்மை-2

(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குண இயல்பை எடைபோடும் ஆற்றல் என்று வரும்போது அனுமனை தாண்டிச் செல்ல இயலாது.முதன்முதலாக இராம இலக்குவரைப் பார்த்ததுமே, ” தருமமும் தகவுமிவர் தனமெனும் தகையரிவர் கருமமும் பிறிதொரு பொருள் கருதியன்று;அது கருதின் அருமருந்து அனையது;இடை அழிவு வந்துளது,அதனை இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்” என அனுமனால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது. இடர்நிலைப் பேராண்மை என்னு ...

கம்பனில் மேலாண்மை-1

(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் முதல்பகுதி) மேலாண்மை என்னும் சொல்,கடந்த நூற்றாண்டில் குறுகிய எல்லையில் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது .பலரும் அலுவலக மேலாண்மை என்பது கோப்புகளுடனும் நிறுவனவிதிகளுடனும் தொடர்புள்ள ஒன்றென்றே கருடியிருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் விளிம்பெல்லையிலும்,இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் மனித வளத்துறை புத்தொளி கொண்டு புறப்பட்ட போதுதான் மேலாண்மை என்பது மனிதர்கள் சார்ந்தது, உளவியல் சார்ந்தது, தகவல்கள் சார்ந்தது என்றெல்லாம் உணரத் தொடங்கினர். இந்தத் துறைகளில் மேலாண்மை குறித்து ...

அந்த பள்ளிச் சிறுவன்….

பரந்து விரிந்த அந்தப் பள்ளி மைதானத்தின் நடுநாயகமாய், அந்த மேடை இருந்தது. மைதானத்தில் மக்கள் அமர மிகப்பெரிய பந்தல் இடப்பட்டிருந்தது.மைதானத்தில் நிறையபேர் குழுமியிருந்தனர். பெரும்பாலும் பெரியவர்கள்.நடுத்தர வயதினர். கொஞ்சம் இளைஞர்கள். அதே பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்கள் மைதானத்தின் நடுவே அமர்ந்திருந்தனர். காக்கி டிரவுசர். வெண்ணிற அரைக்கை சட்டை. அவர்களில் ஒருவனின் பற்களில் கிளிப் மாட்டப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த சிறுவன் சிறு வேப்பங்குச்சியால் கீழே அமர விரிக்கப்பட்டிருந்த சாக்குப் படுதாவை நோண்டிக் கொண்டிருந்தான். மேடையில் பலரும் வந்து ...
More...More...More...More...