Blog

/Blog

கம்பனில் தவம்

சென்னை அம்பத்தூர் கம்பன் கழகத்தில் “கம்பனில் தவம்”என்று பேசவும்,அவர்கள் அன்புடன் வழங்கும் “தமிழ்ச்சுடர்” விருது பெறவும் வருகிறேன்.24.08.2014 ஞாயிறு மாலை 6.15 மணி திருமால் திருமண மண்டபம் அம்பத்தூர் சென்னை. வாய்ப்பிருப்போர் வருகை புரிய அழைக்கிறேன்.. ...

அந்தச் சிறுமி

அங்கே நிற்கிறாள் அந்தச் சிறுமி அடமாய் அடம்பிடித்து “இங்கே வாயேன்”என்றே திசைகள் எல்லாம் குரல்கொடுத்து எங்கே என்ன நடக்கிற தென்றே எல்லாம் அறிந்தவளாம் பொங்கும் குறும்பை மறைத்தபடி ஒரு மூலையில் ஒளிந்தவளாம் பத்துக் கைகள் போதாதாம் அவள் “பரபர” சேட்டைக்கு சித்திர வேலைப் பாடுகளாம் அந்த சிறுமியின் கோட்டைக்கு தத்துவப் பாம்பின் தலையின்மேல் அவள் தாண்டவக் கூத்துக்கு சித்தர்கள் கைகளைத் தட்டினர் நந்தியின் மத்தளப் பாட்டுக்கு ஒளிரும் தீபங்கள் எல்லாம் அவளிடம் ஒவ்வொரு கதைகூறும் புலரும் விடியலின் ...

கொடிகாக்கும் கோவை

பந்தயச் சாலை முழுவதும் பார்த்தால் பச்சைப் பிள்ளையாய் இருந்தது முந்தானை கொண்டு பாரத மாதா மூடி அணைத்தது தெரிந்தது வந்தவர் போனவர் கண்களில் எல்லாம் வியப்பின் கண்ணீர் நிறைந்தது “வந்தே மாதரம்” வந்தே மாதரம்” வெய்யிலும் கானம் பொழிந்தது கண்ணன் கொடுத்த சேலையின் நீளம் கோவையின் கொடிமுன் சிறியது எண்ணம் தோய்ந்து இழையிழையாக ஏந்திய கொடிதான் பெரியது வண்ணங்கள் மூன்றிடை வெற்றிச் சக்கரம் விரிந்த காட்சி அரியது “கிண்”ணெனநின்றனர் குழந்தைகள் பெரியோர் கண்முன் வானகம் மலர்ந்தது கொடியைக் ...

சொல்லும் நன்றி போதாது

பிறந்ததினம் என்பதொரு நினைவூட்டல்தான் பிறந்தபயன் என்னவென்று தேடச் சொல்லும் பிறந்ததினம் என்பதுமே உணர்வூட்டல்தான் பிரியமுள்ள இதயங்கள் வாழ்த்துச் சொல்லும் திறந்தமனம் கொண்டவர்கள் நல்கும் வாழ்த்து தினம்புதிதாய் கனவுகளை வளர்க்கச் செய்யும் சிறந்தபல இலக்குகளை வகுக்கச் செய்யும் சிலிர்ப்போடு வேலைகளைத் தொடரச் செய்யும் வான்பிறந்த தேதியினை அறிந்தாரில்லை விரிகடலும் வந்ததினம் உணர்ந்தாரில்லை கான்பிறந்த நாளெதுவோ?அறிந்தாரில்லை காலத்தின் பேரேடோ கொஞ்சமில்லை நான்பிறந்த சேதியொரு துகளின் தூசு நேசமுள்ளோர் வாழ்த்துவதோ அன்பின் ஊட்டம் ஏன்பிறந்தோம் எனும்நோக்கம் தேடிச் செல்ல இந்ததினம் கைகொடுக்கும் ...

கள்வன் சொல்லும் கதை

வான்மீக உயரத்தில் ஒரு வாக்கியத்தையேனும் வடித்துக் கொடுக்கும் விருப்பத்தோடு தான்கண்ட வாழ்வைத் திறந்து வைக்க எத்தனித்தஅதே நேரத்தில், தெய்வ மாக்கவி பட்டம் எல்லாம் எட்டா உயரம் என்பதை உணர்ந்து… பெயருக்கு முன்னால் திருடன் என்று பெருமையும் பணிவும் பொங்கப் பொங்க போட்டுக் கொள்ளும் பக்குவம் கருதியே…. பாராட்டு விழாவும் பட்டமளிப்பும் பார்த்துப் பார்த்து செய்யலாம் தானே…. திருடன் மணியன் பிள்ளைக்கு… ...

அதிரா நரம்பு

மகர யாழொன்று மீட்டக் கிடைக்கையில் விரல்கள் ஏனோ வித்தை மறந்தன; கவிழும் மௌனம் கனன்று கனன்று சுரங்கள் நடுவே சலன பேதம்; நொடிகளின் தளர்நடை நீண்டுகொண்டிருக்க முடிவுறாக் காலம்முனகிக் கடந்தது; சிகர நுனியில் சீறும் மேகம் அடிவாரத்தில் புல்வெளித் தாகம்; கொன்றை செண்பகம் கொஞ்சும் வனத்தில் நின்று தவித்தது நிலைகொளாத் தனிமை; துயிலின் விளிம்பில் நழுவும் பொம்மையைப் பற்றுமுன் சோரும் பிஞ்சு விரல்கள் பற்றியிழுத்துப் புறப்படுமென்று அலங்காரத்தேர் அங்கே நின்றது… இழுத்துப் போர்த்திய இருளை உதற அழுத  ...
More...More...More...More...