Blog

/Blog

ராஜீவ் கொலை வழக்கு-சில நியாயங்கள்! சில தர்மங்கள்!

ராஜீவ் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாகவும் திட்டத்திற்கு உடந்தையாகவும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவர்,23 ஆண்டுகள் சிறையிலிருந்ததாலும் கருணைமனு மீது முடிவெடுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதாலும் அவர்களின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் ரத்து செய்தது. கூடுதலாக தண்டனை அனுபவித்ததால் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.தமிழக முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களுடன் ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையிலிருப்பவர்களையும் ...

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-3(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)

பட்சி சொன்னதில் ஒன்று மட்டும் தவறிப்போய் விட்டது.மகாத்மா காந்தி நிறுவனத்தின் புல்வெளி அழகைப் பார்த்து,பசுமை பார்த்து,குளிர்சாதன வசதி இல்லாமலே சமாளித்துக் கொள்ளலாம் என்னுமெண்ணம் பொய்த்து விட்டது. அதிகாலை ஏழு மணியளவில் தொடங்கும் கடும் வெய்யில் மாலை வரை பின்னியெடுக்கிறது.எனவே ஓய்வு நேரங்களை புல்வெளி மரத்தடிகளில் போடப்பட்டிருக்கும் மர பெஞ்சுகளில் செலவிடத் தொடங்கினேன். ஆனாலும் பரந்து விரிந்த அந்தப் புல்வெளிகளில் காலை நடை மற்றும் மாலைநடை மேற்கொள்வதொரு சுகமான அனுபவம்.துளி கூட மாசில்லாத காற்று. அப்பழுக்கில்லாத அழகான தார்ச்சாலைகள். ...

குறிஞ்சி மலர்விழும் பாதையிலே….

தொலைபேசியில் ஒரு நண்பர் அழைத்து வாழ்த்தினார்.”சார்! கவிஞருக்கு பத்மபூஷண் கிடைச்சிருக்கு.ரொம்ப சந்தோஷம்.என் வாழ்த்துகளை சொல்லுங்க!” “நன்றிங்க! கண்டிப்பா சொல்லிடறேன்!” “சார்..ஒரு சந்தேகம். “அவருக்கு பத்மபூஷண் எத்தனாவது தடவையா தர்றாங்க?” நான் அதிர்ந்து போய்…..”அதெல்லாம் ஒருதடவை தாங்க தருவாங்க” “ஓஓ…அப்ப பத்மஸ்ரீதான் நெறைய தடவ வாங்கியிருக்காரு!இல்லீங்களா?” “இல்லீங்க ! அதுவும் ஒருமுறைதான் தருவாங்க!” எதிர்முனையில் இருப்பவர் குழம்பிப்போய்,”இல்லீங்க! பலமுறை வாங்கியிருக்காருன்னு நீங்களே மேடைகள்லே சொல்லியிருக்கீங்க!மறந்துட்டீங்கன்னு நெனைக்கறேன்.எதுக்கும் ஒருதடவை கவிஞர்கிட்டேயே கேட்டு சொல்லுங்க!” “ஹலோ! ஹலோ!” நான் மீண்டும் விளக்குவதற்குள் ...

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-2(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)

மும்பை விமான நிலையத்தில் குடியேற்றம் பகுதியில் இருந்த இளம் அலுவலர், என் கடவுச்சீட்டைப் பார்த்தபடி, “விஸா ஆன் அரய்வல்?” என்று கேட்டார். நானும் ஆமென்று சொன்னேன். ஆனால் மொரீஷியஸில் இந்தியர்களுக்கு விஸா தேவையில்லை என்று அங்கே சென்ற பின்தான் தெரிந்தது. என்னை அழைத்திருக்கும் மகாத்மா காந்தி நிறுவனம் எவ்வளவு செல்வாக்குள்ள நிறுவனம் என்று மொரீஷியஸில் இறங்கி சில நிமிடங்களிலேயே புரிந்தது.அவர்களின் கடிதத்தைக் காண்பிட்தவுடன் குடியேற்றம் பகுதியில் தொடங்கி, சுங்க இலாகா வரை எல்லோருமே மரியாதையுடன் வழியனுப்பினர் MGI ...

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-1(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)

“மொரீஷியஸில் இருந்து ஒரு பெண்மணி வந்துள்ளார். ஆர்ய வைத்திய சாலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அவருடைய ஆங்கிலக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமாம்.உங்களால் அவரை சந்திக்க முடியுமா?”டாக்டர் லஷ்மி தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோதே “ஒத்துக்கொள்”என்று பட்சி சொல்லியது.”இன்று மாலை ஆறு மணிக்குப் பார்க்கலாம்”என்றேன். கோவையில் எங்கள் வீட்டிலிருந்து நடந்து போய்விடுகிற தொலைவில்தான் ஆர்ய வைத்திய சாலை அமைந்துள்ளது.அங்கேதான் பிரசித்தி பெற்ற தன்வந்த்ரி கோவில் அமைந்துள்ளது.நான் பள்ளி மாணவனாக இருந்த போது  மாலை நேர பூஜையின் அடையாளமாக பம்பை செண்டை ...

நாலு பேருக்கு நன்றி!

“எப்போ வருவாரோ” ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக கடந்த சில ஆண்டுகளாகவே கோவையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆன்மீகத் தொடர் நிகழ்ச்சி .இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 14 வரை ஆன்மீக அருளாளர்கள் குறித்து அறிஞர்கள் பலர் உரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு ஆன்மீக அதிர்வுகளில் லயிப்பார்கள். ஒவ்வோர் ஆண்டும்,உரைகளின் ஒலிப்பதிவு வேண்டுவோர்,ஒரு சிறு தொகை செலுத்தினால் குறுந்தகடுகள் அவர்கள் இல்லம் தேடி வரும்.இந்தத் தொகை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு ...
More...More...More...More...