Blog

/Blog

சிரித்து நிறைகின்றாள்

மலைமகள் இரவுகள் நிகழ்ந்திடும் பொழுதுகள் மலேய நாட்டினிலே கலைமகள் அலைமகள் கடைவிழி பதிந்திடும் காவிய வீட்டினிலே நலம்பல வழங்கிடும் நாயகி எங்கெங்கும் நின்று ஜொலிக்கின்றாள்! சிலைகளில் மலர்களில் பனியினில் வெயிலினில் சிரித்து நிறைகின்றாள்   மங்கலத் திருவடி நடமிடும் கொலுசொலி மழைவரும் ஒலிதானே! பங்கயத் திருமுகம் பொலிந்திடும் கலைநயம் பகலவன் ஒளிதானே! அங்கென இங்கென ஆயிரம் மாயைகள் அவளது களிதானே! எங்களின் அன்னையின் கைவிரல் தாயங்கள் எழுகடல் புவிதானே!   வீசிய பாதங்கள் விசைகொள்ளும் விதமே வருகிற ...

சத்குரு ஞானோதயத் திருநாள்

தேதியிது !சாமுண்டி தேவி திருமலையில் ஆதி குருவின் அருளாலே-யாதுமாய் தன்னை உணருகிற தன்மையிலே சத்குருவும் பொன்னாய் மிளிர்ந்த பொழுது. பாறை மடியினிலே பூப்பூத்த நாளினிலே ஊறும் அமுதத்தின் ஊற்றொன்று-மீறும் புனலாய்ப் பெருகி புனிதத்தின் தூய அனலாய் எழுந்த அருள். பேசா மவுனத்தில் பேரருளின் அற்புதத்தில் ஈஷா உதயத்தின் இன்பநாள்- நேசத்தால் மானுடத்தைக் காக்கும் மகத்துவம் பொங்கவே வானிறங்கி வந்த வகை. சத்குரு என்றதுமே சட்டென்று கண்கலங்கி பக்தி பெருகுகிற பாங்கெல்லாம்-சக்தி வடிவாக வந்தவரின் வற்றாத அன்பு நடமாடும் ...

பாரதி வீட்டில் ஒரு மரம்

21.09.2013. திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் “மண்வாசனை” கூட்டத்தில் கவியரசு கண்ணதாசன் குறித்து உரை நிகழ்த்தப் போயிருந்தேன்.மண்வாசனையை எழுப்பும் விதமாய் மழை வெளுத்து வாங்கியது.கூட்ட அரங்கில் மேடைக்கு இடதுபுறம்நெடிய்துயர்ந்த மரமொன்றின் நிமிர்வுக்கு வாகாய் இடம்விட்டுக் கட்டியிருந்தார்கள். அந்த மரத்தை சுட்டிக்காட்டி திரு.இல.கணேசன் என்னிடம் சொன்னார்: “இந்த மரம் பாரதியார் காலத்திலிருந்தே இருக்கிறது”என்று. பாரதி பார்த்த மரம்.பாரதியைப் பார்த்த மரம் என்ற எண்ணம் மனதை மலர்த்தியது. பாரதியுடன் ஒரேவீட்டில் வாழ்ந்த உயிரல்லவா அது!! மேடையில் பேசும்போது குறிப்பிட்டேன்.”பாரதி வாழ்ந்த வீட்டில் ...

தாடிகளை நம்புவது…?

தாடிகளை நம்புவதே தேசத்துக்கு நல்லது மூடிவைத்துப் பேசவில்லை;மனம்திறந்து சொல்வது பாடினதார் திருக்குறளை? படத்தைநல்லாப் பாருங்க பாரதத்தின் நாட்டுப்பண்ணைப் படைத்தவர்யார் கூறுங்க குறுந்தாடி வளர்த்தவங்க கம்யூனிசம் வளர்த்தாங்க கைத்தடியும் எடுத்தவங்க பகுத்தறிவை வளர்த்தாங்க வெறுந்தாடி வளர்த்தவங்க வருத்தமுன்னு சொன்னாங்க வளரச்சொல்லி விட்டவங்க பரமஹம்சர் ஆனாங்க வெள்ளியலை தாடிக்காரர் யோக நெறி தந்தாங்க உள்ளம் அலை பாயாம வாழவழி சொன்னாங்க டெல்லியில தாடிக்காரர் தலைவருன்னு சொல்றாங்க உள்ளவரும் தாடியோட  உலவுறதைப் பாருங்க நாட்டுக்குள்ளே ஒண்ணுரெண்டு தாடி தப்பாப் போகலாம் வீட்டுக்குள்ளே ...

லிங்க பைரவி

தூரத்து வெளிச்சம் நீதானா-எனைத் துரத்திடும் கருணை நீதானா பாரத்தில் தவிக்கிற நேரத்திலே சுமை தீர்ப்பது பைரவி நீதானா -என் திசைகளைத் திறந்தவள் நீதானா வழித்துணை யானவள் நீதானா விழுத்துணை யானவள் நீதானா பழிகள் நிறைந்தஎன் வழியினிலேஒளி தருபவள் பைரவி நீதானா-உடன் வருகிற திருவருள் நீதானா போகிற வழியெது தெரியாதே-இந்தப் பேதைக்கு வாழ்க்கை புரியாதே வேகிற விறகென ஆகிற தருணம் பாய்கிற கங்கை நீதானா-எனைப் பவித்திரம் செய்பவள் நீதானா நான்கொண்ட பந்தங்கள் வேதனைதான் -இந்த நாடக வாழ்க்கையும் வேதனைதான் வான்கொண்ட நிறமே ஆனந்த ஸ்வரமே ஆட்கொண்ட கருணை நீதானா-எனை ஆள்வது ...

பாரதிக்கு முந்தைய பாரதிகள்

மகாகவி பாரதிக்கு முன்பும் சமகாலத்திலும் பாரதி பட்டத்துடன் திகழ்ந்தவர்கள் குறித்து உவமைக்கவிஞர் சுரதா ஒரு பாட்டுப் பட்டியலை வழங்கியிருக்கிறார். 1) திருவதிகைக் கலம்பகம் எழுதிய வேலாயுத பாரதி 2)திருவிளையாடல் நாடகம் எழுதிய கிருஷ்ண பாரதி 3)சூடாமணி நிகண்டு இயற்றிய ஈஸ்வர பாரதி 4)ஆத்திசூடி வெண்பா வடித்த இராம பாரதி 5) விஸ்வபுராணம் இயற்றிய முத்துச்சாமி பாரதி 6)திருத்தொண்டர் மாலை,தேசிகர் தோத்திரம் போன்ற நூல்கள்   தந்த புதுவை குமார பாரதி 7)கூடல் பதிகம் பாடிய குணங்குடி கோவிந்த பாரதி ...
More...More...More...More...