Blog

/Blog

இறைவன் விரும்பினால்…

என்முன் வருகிற காலங்களை இன்னும் திடமாய் எதிர்கொள்வேன் பொன்னினும் விலைமிகு பொருளென்றே பொழுதுகள் தம்மை மதித்திருப்பேன் இன்னமும் செய்ய ஏராளம் என்பதை உணர்ந்தே உழைத்திருப்பேன் இன்னொரு மனிதரை எண்ணாமல் என்னை நானே ஜெயித்திருப்பேன் எவர்க்கும் தந்தது போலேநான் எனக்கும் நேரம் ஒதுக்கிடுவேன் கவிதைக் கணங்களை சேகரித்து கருவூலத்தில் காத்திடுவேன் தவங்கள் முயல்கையில் வாழ்விங்கே தளிர்க்கும் என்பதை உணர்ந்திடுவேன் தவறுகள் செய்தால் பதறாமல் தாண்டி வரவே முயன்றிடுவேன் உள்ளம் பதறும் போதெல்லாம் உயிர்ப்பூ வாடும் என்றுணர்வேன் வெள்ளம் போலே ...

சூர்ய குண்டம்

சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் கங்கையுடன் காவிரியும் சங்கமமாய் பொங்கும் எங்குமுள்ள தீர்த்தங்களும் இங்குவந்து தங்கும் வானமழை வந்துவந்து தேனமுதம் சிந்தும் ஞானியெங்கள் சத்குருவும் தந்தருளும் குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் மூழ்கவரும் யாவருக்கும் நன்மைதரும் லிங்கம் பாதரசம் சக்திதரும் தூயரச லிங்கம் ஏழுலகும் காணவரும் காட்சியிந்த குண்டம் தீர்த்தமென்னும் அற்புதத்தின் சாட்சிசூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய ...

ஆருத்ரா நடனம்

ஆடும் திருவடி தெரிகிறது ஆனந்தம் அலைபோல் எழுகிறது பாடும் திருமுறை ஒலிக்கிறது பரமனின் திருவருள் இனிக்கிறது ராவணன் தோள்களில் பதிந்தபதம் ஜாமத்தில் சுடலையில் உலவும் பதம் ஆரூர் வீதியில் நடந்த பதம் ஆடிய பாதமே சாசுவதம் தீயென எழுந்தது திருமேனி தாமரைப் பதந்தனில் இவன்தேனீ தாயென்றும் வருவான் சிவஞானி தாண்டவ ஜதிசொல்லு மனமேநீ காலனை உதைத்தது சிவபதமே காசியில் நடந்ததும் சிவபதமே மூலமும் முடிவும் சிவபதமே முக்தி தருவதும் சிவபதமே ...

முனைவர் குடவாயில் பாலசுப்பிர​மணியன் உரை

என்னுடைய 50ஆவது நூலாகிய திருக்கடவூர் பற்றி தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவராகிய முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்அவர்கள் நிகழ்த்திய திறனாய்வுரையினை இக்காணொளியில் காணலாம்.இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர் தஞ்சை செழியன் அவர்களுக்கு நன்றி. http://www.youtube.com/watch?v=5M1kn-mpTdw ...

சத்குரு கருத்தோட்டத்தில் இந்தத் தமிழோட்டம்

(சத்குரு தந்த கருத்தோட்டத்தின் அடிப்படையில் சூர்ய குண்டம் பிரதிஷ்டைக்காக எழுதிய பாடல் இது) பல்லவி தண்ணீரே தண்ணீரே பூமியின் உயிரே நீதானே மண்ணோடும் விண்ணோடும் ஆள்கிற அழகே நீதானே தாகம்தீர தாகம்தீர உன்னைக் குடித்தேனே தீர்த்தமென்று தேடிவந்து உன்னில் குளித்தேனே மூழ்கி மூழ்கி எழுகிறேன் மீண்டும் உன்னில் விழுகிறேன் மடியில் என்னை ஏந்திக் கொள்ளுவாயே அலைகளாக வந்து துள்ளுவாயே சரணம்-1 மீன்களின் தாயகம் நீயென்று நினைந்தேன் எனக்கும் தாய்மடி நீயென்று தெளிந்தேன் உன்னில் தானே உயிர்வரை நனைந்தேன் மலராய் இலையாய் உன்மேல் ...

நாகப்பாம்பே- சத்குரு கவிதை-தமிழில்

(நாகப்பாம்பு பற்றிய சத்குருவின் ஆங்கிலக் கவிதையை வாசித்தேன். அதைத் தமிழில் எழுத முயன்றேன்) பூமியிலே தவழ்ந்து போகும் நாகப்பாம்பே- நீ புற்றுக்குள்ளே ஒளிந்திருப்பாய் நாகப்பாம்பே மேனியெங்கும் கோடுகொண்டாய் நாகப்பாம்பே-நீ நீலநஞ்சை சேர்த்துவைத்தாய் நாகப்பாம்பே சாம்பசிவன்தலையிலேஏறும் மாயமென்னவோ-அட நாகப்பாம்பே உனக்கிருக்கும் மேன்மை என்னவோ உன்னிடத்தில் உள்ள்ள ஏதோ தன்மையைக் கண்டே-அட பொன்னுடலில் ஆடிவர பரமன் அழைத்தான் ஆபரணம் ஆக உன்னை அய்யன் அணிந்தான் -நீ ஆசையுடன் அவன்தலைமேல் ஏறியமர்ந்தாய் ஊர்ந்துபோகும் சின்னஞ்சிறு ஜீவனல்லவா-இந்த உயர்ந்தநிலை அடைந்ததென்ன? சொல்ல நீயும்வா ...
More...More...More...More...