Blog

/Blog

இங்கே அவர்கள் இருந்தார்கள்

கைரேகை படிந்த கல் கவிதை நூலின் ஆசிரியர் யாழி,அவ்வப்போது குறுஞ்செய்திகளாய் சில கவிதைகள் அனுப்புவார். பெரும்பாலும் அவருடைய கவிதைகள்.மற்றபடி அவர் ரசித்த வரிகள்-யார் எழுதினார் என்ற குறிப்புடன். எனவே அவர் அனுப்பும் குறுஞ்செய்திகளை, “இது யார் கவிதை”என்று அறிந்து கொள்ள முதலில் கீழே பார்ப்பேன். இன்று காலை அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில் க.முருகனுக்கு கண்ணீர் அஞ்சலி என்ற குறிப்பும் இருந்தது.யாழியை அழைத்து , க.முருகன்  யாரென்று கேட்டேன். திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞராம். குறுஞ்செய்தியில் கவிதை அனுப்பும் வட்டத்தைச் ...

அந்த ரசிகர்கள் அப்படித்தான் -எஸ்பிபி குட்டி-நூல் விமர்சனம்

இசை,இலக்கியம்,இயக்கம்.இந்தத் திரிவேணி சங்கமத்தில் கால் நனைத்துசில சமயம் கடலிலிறங்கி,அலைகள் காலுக்குக் கீழ் பள்ளம் பறிப்பதைப்போல் உணர்ந்தால் கரைக்கு வந்து சுண்டல் சாப்பிட்டபடியே ஏக்கமாய்முக்கடலின்உப்புக்காற்றுக்கு முகங்காட்டி அமரும் விதமாகத்தான் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. ஆலைப்பணியாளர்கள் குடும்பத்திலிருந்து வந்த காரணத்தால் மார்க்சீயப் பார்வையும்,அரையிரவு-முழு இரவு பணிநேர மாற்றங்கள் தரும் போதிய கால அவகாசமும்,அதிலெழுந்த வாசிப்புப் பழக்கமும், தொலைக்காட்சி முழு ஆட்சி செய்யாத எண்பது-தொண்ணூறுகளில் இடையறாமல் கேட்டுக்கொண்டிருந்த திரையிசையும் சேர்ந்து ஒரு ரசிகனாய், ஒரு படைப்பாளனாய், சமூக ...

நிகழ்வதாகுக

கதவைத் திறந்து கோடை நுழைந்து கனலால் கோலம் போடும் நேரம் மதகைத் திறந்து பெருகும் வியர்வை முதுகில் பாடும் கவிதை ஈரம் கண்னை உறுத்தும் காலை வெய்யில் மண்ணைக் கொளுத்தும் மதிய வெய்யில் சாலை தகிக்கும் மாலை வெய்யில் காலம் சுருளும் இரவின் கையில்! தாகம் எடுத்த தாவர வகைகள் ஈழத் தமிழராய் எரிந்து கருகும்! விரித்த பாயை சுருட்டியதைப் போல் வறண்ட நீர்நிலை வாடிச் சுருங்கும் தேகம் வற்றிய கணிகையின் மீது மோகம் வற்றிய வாடிக்கையாளனாய் ...

கள்ள ஓட்டு போட்டேன்

“அண்ணே ! எங்க கட்சிக்கு ஓட்டு போட்டுடுங்க!” உறவோடும் உரிமையோடும் கேட்ட அந்தக் கட்சித் தொண்டர் எனக்கு நன்குஅறிமுகமானவர்.எப்போதும் லுங்கியிலும் எப்போதாவது எட்டுமுழ வேட்டியிலும் தென்படுவார்.தழையத் தழைய எட்டுமுழ வேட்டியில் எதிர்ப்பட்டால் கட்சி வேலையாய் வெளியே போகிறார் என்று பொருள்.கான்ஸ்டபிள் யாராவது எதிரே வந்தால், வணங்கிவிட்டு, மரியாதையி ன் அடையாளமாய் தன் வேட்டியின் முன்புறத்தைப் பற்றிக் கொண்டு ஒதுங்கி நிற்பார். வீடுகளுக்கு வண்ணம் பூசுவது, தண்ணீர் குழாய்களைப் பழுது பார்ப்பது என்று பலவிதமான வேலைகள் பார்ப்பார் என்றாலும் ...

அவள் ஒரு தொடர்கதை

குணச்சித்திர வேடம் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற முகங்களில் நடிகை சுஜாதாவின் முகமும் ஒன்று. தளும்பாத உணர்ச்சிகளும் தரமான நடிப்பும் அவருடைய பலங்கள். அளந்து ஊற்றின மாதிரி அளவான முகபாவங்களைக் காட்டக்கூடியவர் சுஜாதா. காதல் காட்சிகளில் கூட நாணமோ, மோகமோ பொங்கி வழிந்ததில்லை. அதீத  முகபாவனைகளால் சில  நடிகைகள் படுத்தியெடுப்பார்கள். அப்படியொரு நடிகை பற்றி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு கிருஷ்ணன்  ஒருமுறை   சொன்னார், “அந்த அம்மா பாட்டுப் பாடி நடிச்சா கண்ணை மூடீட்டு பார்க்கலாம் சார்”. மிகையம்சம் இல்லாத மிதமான நடிப்பு சுஜாதாவின் சிறப்பம்சம். நிறைய பாடல்களை வானொலியில் கேட்டு நமக்குள் சில கற்பனைகள் வரும். அந்தக் கற்பனைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத காட்சி அமைப்பைக் கண்டால்  “சப்” பென்று ...

அம்பின் கண்ணீர்

கூடு திரும்பிய பறவையின் மனதில் நிரம்பிக்கிடக்கும் ஆகாயம்போல் நிர்மலமாய் இருந்தது இராமனின் திருமுகம். சிரசை அலங்கரித்த மகுடமும் திசைகளை அதிரச்செய்த எக்காளமும் அன்னையர் தூவிய அட்சதைகளும் அந்த நிர்க்குணனைச் சலனப்படுத்தவில்லை. வசிட்ட மகான் வாழ்த்திய மொழிகள் எந்தக் கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தார்கள் அலங்கரித்த தடந்தோள்களில் மீதமிருந்தது அனுமனின் அணைப்பில் விளைந்த சிலிர்ப்பு. ஒரு குழந்தையின் தீண்டல் மென்மையும் தந்தையின் பரிவும் பக்தனின் பணிவும் கலந்த கலவையாய் அமைந்திருந்தது அனுமனின் தொடுகை. “பொருந்துறப்புல்லுக” என்று தான் அழைத்தபோது இராம ...
More...More...More...More...