Blog

/Blog

34.சம்பாத்தியம் உங்கள் சாமர்த்தியம்!

பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!! “குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கும் வரை சிறிது காலம் மட்டும் சிரமப்பட்டேன். பிறகு அந்தத் தொகையை சாமர்த்தியாக முதலீடு செய்தேன். முதலீடு வளர்ந்தபோது என் நிலையும் பல மடங்கு உயர்ந்தது” என்கிறார்கள். இதை நாம் குருட்டு அதிர்ஷ்டம் என்று கூறிவிட்டு போகலாம். சாமர்த்தியம் என்று அடையாளம் கண்டு பின்பற்றியும் பார்க்கலாம். சரியாக முதலீடு ...

33.கேட்கத் தெரிகிறதா உங்களுக்கு?

“கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன. பொதுவாக நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து வெளிப்படும் இயல்புகளை, வயதாக வயதாக, குலத்துடன் வளர்ந்து வரும்போது அது நமக்குப் பலவகைகளில் உறுதுணையாய் இருக்கிறது. கேள்வி கேட்கிற குணம் அப்படியரு குணம். உங்களுக்கு என்னத் தேவையோ, அதை வெளிப்படையாய் கேட்கிற குணம் ஒவ்வொரு குழந்தையிடமும் உண்டு. சில வேளையில் பொறுமை ...

32. உங்களைக் கொஞ்சம் பாருங்கள்

‘வேலை இழக்க நேர்கிறதா’ என்ற தலைப்பில், வெளிவந்த கட்டுரை என்னை அசைத்துப் போட்டது. காலத்தின் தேவையுணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது என்று பலரும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். பணச்சிரமமாய் இருந்தாலும், மனச்சிரமமாய், அதிலிருந்து மீண்டு வருவதற்கென்று சில அடிப்படையான மன உணர்வுகளும் உறுதியும் அவசியம். முதலில் பணத்தை எடுத்துக் கொள்வோம். பணம் குறைவாக இருப்பாதால் உங்களைக் குறைவாகவோ, அதிகம் இருப்பதால் உங்களை அதிகமாகவோ மதிப்பிடவேண்டியதில்லை. இந்த அடிப்படையில் மதிப்பிடும்போது, உங்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்புதான் உங்களின் மதிப்பு என்ற முடிவுக்கு வந்து ...

31. கண்ணதாசன் ஊற்றெடுக்கும் நம்பிக்கை

வாழ்வில் வரும் நம்பிக்கை இரண்டு வகை. திட்டமிட்ட வாழ்ந்து தெளிவிலே ஆழ்ந்து, இலக்குகள் நிர்ணயித்து, பற்பல நுல்களையும் படித்தறிந்து வருகிற நம்பிக்கை முதல்வகை. அறியாப் பருவம் தொட்டு அடிமேல் அடி வாங்கி, வாழ்க்கை தந்த பாடங்களைப் படித்து, வாழ்வின் அனுபவங்களை வாங்கிச் செரித்து, புகழ் – இகழ் – வெகுமானம் – அவமானம், மகிழ்ச்சி – துயரம் அனைத்தையும் கண்டறிந்து கடந்தும் நின்று, பட்டறிவில் நம்பிக்கை இரண்டாவது வகை. கவியரசு கண்ணதாசன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். அனுபவங்களின் ...

30. உங்கள் வாழ்க்கை…. உங்கள் வழியில்!!

நம்முடைய வாழ்க்கைநாம் விரும்புவது போல் நடக்கிறபோது வாழ்க்கையும் சுகமாய் இருக்கிறது. வெற்றியும் வசமாய் ஆகிறது. உங்கள் வாழ்க்கையை உங்கள் வழியில் நடத்திச் செல்லத் தடையாய் இருப்பவை என்ன என்று யோசிங்கள். “தயக்கம்” என்று தான் பதில் வரும். ஒரு வேளை நாம் கேட்டிருந்தால் ஒன்று நமக்கு மாற்றித் தரப்பட்டிருக்கும். ஒரு கப் காபி சூடாக இல்லை என்றாலும் கூட, ‘விதியே’ என்று விழுங்கிவிட்டு வருபவர்கள் சில பேர். வாதிட்டு வேறு கப் காபி கொண்டுவரச் செய்பவர்கள் சில ...

29. நீங்கள் சந்தையா பங்குச் சந்தை?

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என்று நம் முதலீடுகள் உள்ள துறைகள் மந்த கதியில் இருப்பதைப் பார்த்துப் பலரும் மனம் கலங்கி இருக்கிறார்கள். “இதற்குத்தான் பங்குச் சந்தையே வேண்டாம் என்பது” என்று சிலரும், இதுவரை பங்குச் சந்தை பக்கமே போனதில்லை? இனிமேலும் போகமாட்டேன்” என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிற நேரம் இது. இப்போது உண்மையில் என்ன செய்யலாம் என்பது பற்றி பல நிதி ஆலோசகர்கள் நிறையவே சொல்கிறார்கள். அவற்றினுடைய சாரம் இது! பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறபோது மட்டுமில்லை. ...
More...More...More...More...