1. உங்கள் வாழ்வின் மூன்று சக்திகள்!
வாழ்க்கையைப்பற்றி ஆழமாக யோசித்தால், உங்களை சக்திமிக்க மனிதராக ஆக்கக்கூடிய அம்சங்கள் மூன்று என்று சொல்லத் தோன்றுகிறது. நமது நம்பிக்கை மாத இதழின் மனிதவள மேம்பாட்டு இயக்கமாகிய ‘சிகரம் உங்கள் உயரம்’ தொடங்கப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் வேண்டிய அந்த மூன்று அம்சங்களையே அமைப்பின் நோக்கமாக ஆக்கினோம். அந்த மூன்று அம்சங்கள் இவைதான்: பணம், பரிவு, பக்குவம். உங்களுக்கு வருகிற பணம், அடுத்தவர்களின் பொறாமையைத்தானே அதிகரிக்க முடியும்? உங்கள் ஆளுமையை எப்படி அதிகரிக்கும்? என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம். பணம் ...
நினைத்தது போலவே வெற்றி!-1
உங்களையே நீங்கள் கேட்டுப்பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். “ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்தான்” என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை, உங்களுக்குள் இருக்கும் ஆளுமைப்பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான். இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில், ...
36. மாபெரும் சபையினில் நீ நடந்தால்…
சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம் மீது கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது. நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், “இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்பட்டதைப் பார்ப்பவர்கள், “அய்யோ! சரியான சிடுமூஞ்சி” என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். மொத்தத்தில், நம்மீதான ...
35. இடம் இருக்கிறதா உங்களுக்குள்?
“மரணத்துக்குப் பிறகு மக்கள் உங்களை மறந்துவிடாமல் இருக்க வேண்டுமா? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று பிறர் படிக்கும்படியான விஷயங்களை எழுதுங்கள். அல்லது பிறர் எழுதி வைக்கும்படியான விஷயங்களைச் செய்யுங்கள்” என்றார் பெஞ்சமின் பிராங்க்ளின். சாதாரண மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்கும் இருக்கிற வேறுபாடே இதுதான். சாதனைகள் அற்றதாய் வாழ்க்கை அமையும்போது, சாரமற்றும் போகிறது வாழ்க்கை. வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிடங்களை நிறையப்பேர் நிரப்புவதேயில்லை. மூங்கிலில் உள்ள முழுமையான வெற்றிடம் அழகானது. அது இசையின் கருவறை. ஆனால், அரைகுறையாய் நிரப்பப்பட்ட ஜாடிகள் ...
34. தேர்வுக்குத் தயாராக வேண்டியவர்கள்…. பெற்றோர்களா? பிள்ளைகளா?
பட்டிமண்டபத் தலைப்பு என்று கருதி இதை அப்படியே சாலமன் பாப்பையாவுக்கு அனுப்பி விடாதீர்கள்! தேர்வுக் காலம் நெருங்க நெருங்க பிள்ளைகளை விடவும் பெற்றோர்கள்தான் பதற்றத்தோடு வலம் வருவார்கள். தேர்வெழுதப் போவதென்னவோ பிள்ளைகள்தான் என்றாலும் அக்கறை காரணமாய் பெற்றோர்களும் பாடம் படிக்கத் தொடங்குவது வழக்கமாகி வருகிறது. ஒருவேளை பெற்றோர்களும் டியூசன் கற்றுக் கொள்ளத் துவங்கலாம். இந்த அக்கறையை – ஆர்வத்தை இன்னும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால், உங்கள் பிள்ளைகள் தேர்வில் சிறந்து விளங்கப்போவது உறுதி. சிறுபிள்ளைகள் தொடங்கி, 10, 12 ...
33. நேர்காணலுக்குப் போகிறீர்களா?
வேலை கேட்டுவரும் விண்ணப்பங்களுடன் தன்விவரக் குறிப்புகள் இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு வருபவரின் பழக்க வழக்கங்களுக்கும் பேச்சு முறைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பிம்பம் அதில் இருக்கும். எவ்வளவு படித்திருந்தாலும், என்னென்ன தகுதிகள் பெற்றிருந்தாலும், நேர்முகத் தேர்வில் தன்னை சரியாக வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள் வெற்றிபெறுவது கடினம்தான். நேர்முகத் தேர்வு நடைபெறும்போது உரையாடலின் தொனி இப்படித்தான் இருக்கும் என்று நீங்களாக முடிவுசெய்வது நல்லதல்ல. கேள்வி கேட்பவர் சம்பிரதாய ரீதியில் ஒரு நேர்காணலை நடத்தும் மனநிலையில் இருப்பாரேயானால் அதனை கலகலப்பான ஒன்றாக ...