Blog

/Blog

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-34

சமயங்கள், மனித உயிரை உய்விப்பதற்கான ஏற்பாடுகள். ஆனால் காலப்போக்கில் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டு மதங்களையும் மகான்களையும் மதிப்பிடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. யோகப் பயிற்சியை ஒருவர் கையாள்கிறபோது அந்தக் கலையில் ஏற்படுகின்ற சில சித்திகள் காரணமாய் சில அபூர்வமான சக்திகள் பிறப்பதுண்டு. பக்தி நிலையிலேயும் அது சாத்தியம். அவை ஒரு மனிதனின் ஆன்மீக முயற்சியில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள். அதேபோல் சத்திமிக்க அதிர்வுகள் நிரம்பிய ஆலயங்களில் சில பிரார்த்தனைகள் பலிக்கின்றன. ஆனால் பிரார்த்தனைகளுடைய நோக்கம் ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-33

அறிவுக்கான அளவுகோல்கள் கால மாற்றத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். முறை சார்ந்த கல்வி முறை சாறாக் கல்வி என்றெல்லாம் பலவகையாக இன்றைய சமூகம் பேசுகின்றது. ஒரு மனிதனின் மிகப் பெரிய பலம் அவனுக்கு இருக்கிற இயல்பான நுண்ணறிவு. ஒருவன் எவ்வளவு புத்தகங்களைப் படித்தாலும் அவனுடைய இயல்பான அறிவுதான் மேம்பட்டு வெளிப்படும் என்கிறார் திருவள்ளுவர். “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுமதன் உண்மை அறிவே மிகும்”என்பது திருக்குறள். பட்டம் என்பதுதான் இன்று கல்விக்கான அடையாளமாய் ஆகி இருக்கிறது. ஒரு பல்கலைக்கழகம் தருகிற ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-32

அறிவு என்கிற சொல்லை திருவள்ளுவர் எங்கெல்லாம் கையாள்கிறார் என்று பார்த்து அந்த குறட்பாக்களைக் கொண்டு வந்து கண்ணப்ப நாயனார் வரலாற்றோடு பொருத்திப் பார்த்தால் அத்தனையும் ஆங்கே ஆழகாகப் பொருந்துகின்றன. எடுத்துக்காட்டாக சிலவற்றை நாம் பார்க்கலாம். கண்ணப்பர் தோன்றியது கல்வியறிவு இல்லாத வேட்டுவர் குலம். பிறந்த சூழல் பேதமை நிறைந்ததாக இருந்தாலும் இறைவனை அவர் கண்டுணர்கிறார். இங்கே ஒரு திருக்குறள் பொருத்தமாக அமைகிறது. “பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு” கண்ணப்பர் சென்றதோ பன்றிவேட்டை. கண்டு ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-31

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பரமனுக்கு இப்படி ஒரு துன்பம் நிகழ்ந்துவிட்டதே. என் உயிரினும் இனிய இறைவனுக்கு என்ன ஊறு நேர்ந்ததோ என்றெல்லாம் அவர் பதறுகிறார். “பாவியேன் கண்ட வண்ணம் பரமானார்க்கு அடுத்ததென்னோ ஆவியேன் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்ததென்னோ” என்று திண்ணனார் மனம் பதறுகிறார். பச்சிலைகளைக் கொண்டு வந்து பிழிந்தார். இறைவனுடைய திருக்கண்களில் இருந்து பாய்ந்த ஊதிரம் நின்ற பாடில்லை. வெவ்வேறு வழிகளையெல்லாம் யோசித்துவிட்டு தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து இறைவனுக்கு அப்ப நினைத்தார். ‘ஊனுக்கு ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-30

பொத்தப்பி என்கிற நாட்டில் வேடுவர் குலத்திற்கு தலைவராக நாகன் என்றொரு வேடுவ மன்னன் இருந்தான். அவனுடைய மனைவியின் பெயர் தத்தை. குழந்தைப் பேறு இல்லாமல் முருகப் பெருமானிடம் வேண்டினார்கள். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை கையில் ஏந்தியபோது கனமாக திண் என்று இருந்ததால் திண்ணன் என்று பெயர் வைத்தனராம். இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். எழுத்தறிவில்லாத வேடர்கள்கூட தங்கள் குழந்தைகளுக்கு பெயரிடும் போது ஏதோ ஒரு காரணம் பற்றிப் பெயரிடுகிறார்கள். இன்று நவீன யுகத்தில் ...

காளிநின் உளம்கண்டு கொண்டேன்

மொத்தப் பிரபஞ்சங்கள் எத்தனையோ அத்தனைக்கும் மூச்சாகி நின்றவளே வாழ்க பித்தனின் நடனத்தைப் பக்கத் திருந்தபடி பார்க்கின்ற பேரழகி வாழ்க வித்தைகள் அனைத்துக்கும் வித்தாகி நிற்கின்ற வித்தக சக்தியே வாழ்க யுத்தங்கள் நிகழ்த்திடும் இடதுகால் சிறுவிரல் எய்திடும் வெற்றிகள் வாழ்க   திருவிழி ஓரத்தில் தென்படும் பேற்றுக்காய் திருக்கோவில் தினம்தேடி வந்தேன் வருவினை எரிக்கின்ற வகையேதுந் தெரியாமல் வலிநூறு தினங்கொண்டு நொந்தேன் ஒருமுறை உன்நாமம் உரைத்ததும் பராசக்தி உறுகின்ற சுமைநீங்கக் கண்டேன் கருவெனும் வலைவீழும் காரியம் இனியில்லை காளிநின் ...
More...More...More...More...