கம்பன் – என் காதலி
(2002இல் சென்னை கம்பன் விழாக் கவியரங்கில் பாடிய கவிதை -கவியரங்கத் தலைமை – கவிஞர் வாலி) பத்துத் தலைகொண்ட ராவணன் நெஞ்சில் படர்ந்த காதல் ஒருதலைக் காதல் கெட்ட மனம் கொண்ட சூர்ப்பநகைக்குள் கிளர்ந்த காதல் தறுதலைக் காதல் சுத்த வீரன் ராமன் மீது சீதை கொண்டதே சுந்தரக் காதல் இத்தனை காதலும் எழுதிய கம்பன்மேல் எனக்குப் பிறந்தது இலக்கியக் காதல்! பாலகாண்டத்தில் பார்வை கலந்தது அயோத்யா காண்டத்தில் அன்பு மலர்ந்தது ஆரண்ய காண்டத்தில் ஆசை கனிந்தது ...
அரிய ஆயுதங்கள் – மௌனம்
(24.07.2005 ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை 27ஆவது ஆண்டுவிழாக் கவியரங்கம் – தலைமை கவியரசர் இளந்தேவன்) கவியரங்கில் என் தலைப்பு வரும் முன்னால் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருகிறேன் ஓர வஞ்சனை ஒன்று செய்தீர்களே – இது நீதியா என்று நின்று கேட்கிறேன். அன்பு, புன்னகை, கண்ணீர், அழகு, பார்வை என்று பாடுவதற்காக அரங்கில் உள்ளனர் அருமைக் கவிஞர்கள் அவரவர் கைகளில் அவரவர் ஆயுதம்! நான் மட்டும் இங்கே நிராயுதபாணியாய் நிற்கின்றேனே நியாயமா இது! கவிதைத் தாள்களைக் ...
முதுமை
(சித்திரைத் திருநாளில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக் கவியரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் பாடிய கவிதை. உடன்பாடிய கவிஞர்கள் – கபிலன், புகழேந்தி, ஆண்டாள் பிரியதர்ஷினி, கனிமொழி) அன்றொரு நாளெங்கள் வள்ளுவக் கிழவனின் அகந்தனில் புகுந்தவள் யார்? அவன்பின்னர் இளங்கோ வழங்கிய சிலம்பினில் அறங்கள் மொழிந்தது யார்? கந்தல் உடை கொண்ட சங்கப் புலவனின் நெஞ்சினில் எழுந்தவள் யார்? அவன் கவிதைகள் முன்னர் சிவிகையும் மகுடமும் பணிந்திடச் செய்தவள் யார்? முந்துபல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் பிறந்தவள் ...
கம்பன் சொன்ன கதை
(விழுப்புரம் கம்பன் விழாக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) அன்றும் இன்றும் நடப்பதெல்லாம் ஆம். எங்கள் கம்பன் சொன்ன கதை. அங்கும் இங்குமாய் மாறுதல்கள் ஆனால் அடிப்படை மாறவில்லை. பிரியம் மணக்கும் காதல்முன் பெரிய தனுசொரு பொருட்டில்லை அரசகுமாரன் மட்டுமல்ல, ஆண்டியின் மகனும் விலக்கில்லை மந்தரை சூழ்ச்சிகள் செய்வதனால் மகுடங்கள் உருள்வதும் நிற்கவில்லை. தந்திரம் வல்ல தலைவர்களும் & இதைத் தடுக்கிற வழிகள் கற்கவில்லை. அரண்மனைக்குள்ளே மோதல்கள் அடுத்தவன் மனை மேல் காதல்கள் அனுதினம் எங்கள் ஏட்டினிலே ...
நதிகளின் சங்கமம் – கிருஷ்ணா
(2003ல் திருக்கோவலூர் கபிலர் விழாவில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் சொ.சொ.மீ. சுந்தரம்) மகாராஷ்டிரத்தின் மகளாய்ப் பிறந்தாய்! கர்நாடகத்தில் கால் வைத்துக் கடந்தாய்! ஆந்திர வெளிகளில் ஆடித் திரிந்தாய்! விரிகுடாக் கடலில் விரும்பிக் கலந்தாய்! நதிகளின் நீயரு ரதியெனச் சிறந்தாய்! தமிழ் மண்ணை மட்டும் ஏனடி மறந்தாய்! துச்சாதனன் அன்று துகிலுரிய முயலுகையில் அச்சோ கிருஷ்ணா என அலறினாள் பாஞ்சாலி! பச்சை வயல் பெண்ணின் பசுமைத் துகில் பிடித்து பஞ்சம் உரிகிறதே! பாய்ந்து வரவில்லையா நீ! ஆந்திர ...
பாரதியின் பன்முகங்கள்- வீரசுதந்திரம்
அரங்கம் (கவியரங்கக் கவிதைகள்) (சென்னை பாரதியார் சங்கம் நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் டாக்டர்.பொன்மணி வைரமுத்து) ஏங்கிக் கிடக்கிற இந்தியருக்கு ஏழ்மையும் பிணியும் என்றும் நிரந்தரம்; தேங்கிக் கிடக்கிற அரசியல் குட்டையில் தீய கிருமிகள் தினமும் பிறந்திடும்; தூங்கி வழிகிற தலைவரை நம்பியே துவண்டு விழுகிற தொண்டர்கள் ஆயிரம்! – நீ வாங்கச் சொன்னது வீர சுதந்திரம்; வாங்கி வந்ததோ வேறு சுதந்திரம்… பாரதி! எரிப்பது குறித்த நெருப்பினுக்கும் வகுப்புகள் எடுத்த வீரியப் புலவனே! ...