புகார்கள் மற்றும் ஆலோசனைகள்
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சுற்றுச் சூழலில் நடப்பது பற்றி கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் மதுக்கடை வாசலில் மல்லாந்திருக்கும் குடிகாரனைப் போல் வாய்பிளந்திருக்கும் பெட்டியின் வயிற்றில் கொட்டை எழுத்தில் “புகார்கள் மற்றும் ஆலோசனைகள்.” அருகிலோர் அலுவலர் அரைத்தூக்கத்தில். என்ன எதிர்பார்க்கிறீர்கள் எம்மிடம்-? எந்தப் புகாரும் இல்லையென்றில்லை எழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள் உங்களுக்குள்ள ஒரு நூறு வேலையில் எங்கள் புகார்கள் எட்டணா பெறுமா? குடிநீர் வரவில்லை; குழாய் இணைப்புக்காய் மடியைத் தோண்டிய மண்ணில் பள்ளம்; வெய்யில் கொளுத்தும் ...
மான்களுக்கும் கோபம் வரும்
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… கூச்சல் நிரம்பிய காட்டில் எப்போதும் மான்கள் மட்டும் மௌனமாயிருக்கும்; மௌனமாயிருப்பதை அமைதியென்று தவறாய்ப் புரிந்து கொள்பவர் அதிகம்; முட்டி மோதும் மூர்க்க மார்க்கம் புத்தியில் உறைக்கும் பொழுதில் எல்லாம் அன்பின் வடிவாய் அமைந்த மான்கள் கொம்பு சிலிர்த்துக் கிளம்புவதுண்டு; சாந்தம் ததும்பும் சின்னக் கண்கள் ஏந்தும் நெருப்பில் எரியும் காடு; எல்லையில்லாத யுகங்களாய் இங்கு அம்புமுனையும் குண்டும் பட்டுத் துள்ளிச் செத்த துக்க நினைவில்தான் புள்ளிகள் உடம்பில் பெற்றன மான்கள்; அவற்றைக் ...
சாயம் படிந்த வாழ்வு
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சித்திரக்காரனின் தூரிகை முனையாய்க் குழம்பி நனைந்து கிடக்குதென் இதயம்; ஒப்ப முடியா நிறங்களிலெல்லாம் தப்ப முடியாதென் தலையைத் திணித்துக் கழுத்தை அழுத்தும் சித்திரக்காரனாய்க் காலம் என்னை வேலை வாங்கும்; நேற்றைய சாயம் நீங்கும் முன்னரே மாற்றுச் சாயம் மூச்சை அழுத்தும்; மையம் உலர்ந்தும், முனைகள் நனைந்தும், வறண்ட ஈரத்தில் வாழ்க்கை நடக்கும். கோலப் புள்ளிகள், கோடுகள், விளைவுகள், ஜாலம் காட்டும் சித்திர நேர்த்திகள், தவறி விழுந்த துளிகளைக் கூட சுழித்துக் காட்டும் ...
ரயில் பயணங்களில்…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… பசித்த பயணிகள் நிரம்பிய ரயிலில் எவர்சில்வர் தட்டு முகத்தை மறைக்க “பூரி கிழங்கு மசால்வடை” என்று கூவியபடியே, கூப்பிடும் முன்னர் நேர்த்திக் கடன் போல் நடந்தார் கிழவர்; அழைக்க நினைத்த பலரும் அவரின் அலட்சியம் உணர்ந்து அமைதி ஆயினர்; கட்டி வந்த பொட்டலங்களை விற்க மறுக்கும் வீம்பும் கோபமும் பூரிகள் சுட்ட மருமகள் மீதா? பொட்டலம் கட்டிய பிள்ளையின் மீதா? தடதடக்கின்ற ரயில் சத்தத்தில் ஒருமணி நேரம் தூங்கிய திருப்தியில் எழுந்து ...
பாத பூஜை
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… ஆலயம் ஒன்றின் குட முழுக்குக்குப் போய் வருகின்ற பாதையில் தனது பூர்வாசிரம வீடு தென்பட காரை நிறுத்தக் கட்டளை பிறந்தது! பீடாதிபதியாய்ப் பட்டம் தாங்கி ஆண்டுகள் இரண்டே ஆகியிருந்த இளம் சந்நியாசி, இல்ல வாசலில் “எழுந்தருளியதும்” ஒரே பரபரப்பு; “சித்தப்பா”! என சிலிர்த்த சிறுவனின் வாய் பொத்திற்று வளைக்கரமொன்று “வரணும் சாமி வரணும்” மெதுவாய் முனகிய கிழவரை “அப்பா” என்று அழைக்க நினைத்து அடங்கிய சாமியால் அபயஹஸ்தம் உயர்த்த முடிந்தது; பாத ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-24
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… ஃபிலடெல்ஃபியாவிலிருந்து பாஸ்டன் திரும்ப விமானநிலையம் வந்தேன். பாஸ்டனில் இருந்துதான் இந்தியா திரும்புவதாகத் திட்டம். பாஸ்டன்ஃபிலெடல்ஃபியாவுக்கு ஏர்டிரான்ஸ் என்கிற உள்ளூர் விமானம், நம்மூர் ரயில்கள் போல் இரண்டு மணி நேரத் தாமதம். அதைவிட வேடிக்கை, வெவ்வேறு ஊர்களுக்காக அருகருகே நிற்கிற விமானங்களில், நம் கிராமத்துப் பேருந்துகளில் நடப்பது மாதிரி விமானம் மாறி ஏறுகிற கூத்துகளும் நடந்தன. விமானி பலமுறை அறிவித்தபிறகு “ஓ! காட்” என்று இறங்கி அடுத்த விமானத்தில் தொற்றிக் கொண்டவர்களும் ...