Blog

/Blog

யோகம்… தியானம்.. வாழ்வின் வாகனங்கள்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பலருக்குத் தெரிந்த ஒரே தியானம், மத்தியானம். பொதுப்புத்தியில் யோகா என்றால் நோய் குணமாக என்றும் தியானம் என்றால் வயதானவர்கள் செய்ய வேண்டியதென்றும் பதிவாகி இருக்கிறது. உடலும், மனமும் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் இருக்கும் மற்ற அம்சங்களும் புதிதுபோல் உயிர்ப்புடன் இருக்கவே யோகாவும் தியானமும்! நோய் குணமாவதற்கல்ல யோகா. நோயேவராமல் இருப்பதற்குத்தான் யோகா வயதான பின் செய்வதற்கல்ல தியானம். மனதுக்கு வயதாகாமல் இருப்பதற்கே தியானம். வாழ்க்கைப் பயணத்தில் பாதை எப்படி இருந்தாலும் ...

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்வின் சில சூழல்கள் போராடும்படி இருக்கும் அதை வைத்து வாழ்க்கையே போராட்டம் என் அலுத்துக் கொள்பவர்கள் வாழ்க்கையின் சுவாரசியத்தை தவறவிடுகிறார்கள். கோடை வெய்யிலில், மதியம் பத்துப்பேருக்கு திடீரென்று விருந்து சமைக்கும் நிர்ப்பந்தம் ஓர் இல்லத்தரசிக்கு உருவாகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். வெய்யில் சூடும், அடுப்புச் சூடும் வாட்ட, உஷ்ணத்துடன் போராடிக் கொண்டே சமைத்துப் போ-டுவார். அந்த உணவில் நான்கு பேர் சாப்பிடப் போகிறார்கள் என்ற உணர்வு சமைத்து முடித்தபின் ஜெயித்த உணர்வை ...

பற்றிக் கொள்ளுங்கள்! விட்டும் செல்லுங்கள்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு. பாவம் மனிதனென்று!” கவியரசு கண்ணதாசனின் இந்தப் பாடல் மனித மனத்தின் இயல்பைக் கேலி செய்கிறது. சிறைவாசம் இருந்தவனுக்குக் கூட விடுதலையாகும் கடைசி நாளில் மனம் கனக்கும் என்றால் அதுதான் மனதின் விசித்திர இயல்பு. ஒன்றைப் பற்றிக் கொள்வது பெரிதல்ல. விட்டுவிட வேண்டிய நேரத்தில் விட முடியாமல் தவிப்பதுதான் தவறு. பெஞ்சும் பலகையும் பிடித்து போன பள்ளி மாணவன், அடுத்த வகுப்புக்குப் போக ...

நீங்கள் நிஜமல்ல! நிஜமே நீங்கள்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித வாழ்க்கையை மாயை என்று பார்ப்பது ஒருவகைப் பார்வை. அதுகூட உண்மையைத் தேடுகிற உள்நோக்கம் கொண்டது. வாழ்க்கை மாயையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் நிஜம். உங்களைப் பொறுத்தவரை உலகம் என்பது உங்களில் தொடங்குகிறது. உங்களில் முடிகிறது. உங்கள் உடம்பின் ஆயுள் நூறாண்டுகள் மட்டும் என்றே இருக்கட்டும். அதனாலென்ன? உங்கள் செயலின் ஆயுள் ஆயிரமாயிரம் ஆண்டுகள். பலரும் தங்களின் சம்பாதிக்கும் திறமையும் சுவாசிக்கும் திறமையும்தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ...

அடக்கம் அழகானது! அகந்தை இயல்பானது!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பாசாங்கான அடக்கம் ஆபாசம். அடங்காத அகந்தை இயல்பு. மனதில் எழுகிற அகந்தையை இயல்பானதென ஏற்கும் போதுதான் உங்களால் அதைத் தாண்டி வரமுடியும். எனக்கு அகந்தை இருக்கிறதே என்று பதட்டம் கொள்வதால் பயன் கிடையாது. அது இயல்பானது. ஆனால் அதைத் தாண்டி வரவேண்டும். இதற்கு முதல்படி, நம்மைவிட பலமடங்கு பெரிதாக சாதித்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வது. அவர்களுடன் ஒப்பிடும் போது நம் செயல் சாதாரணம் என்பதை நாமே உணரமுடியும். அப்போது அகந்தை ...

கோலங்கள் மாறும்! கோபங்கள் தீரும்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனிதர்கள் மீதான நம் அபிப்பிராயங்களுக்கு சில சம்பவங்களே அடிப்படை. எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சாதகமான சூழ்நிலை இருப்பதில்லை. சூழ்நிலையின் வெளிப்பாடே சம்பவம். குறிப்பிட்ட காரணத்தால் இன்று நம் மனதில் கசக்கக் கூடிய ஒருவரின் பக்குவம் நாளை கனியலாம். ஆனால் அவர் பற்றி நமக்கு தொடக்கத்தில் எழுந்த அதே அபிப்பிராயத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் அவரின் நல்ல அம்சங்களைத் தவற விடுவோம். உறவுகள் பகையாவதும், பகைவர்கள் உறவாவதும் இயல்பானது. பார்த்த முதல் ...
More...More...More...More...