வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

பலருக்குத் தெரிந்த ஒரே தியானம், மத்தியானம். பொதுப்புத்தியில் யோகா என்றால் நோய் குணமாக என்றும் தியானம் என்றால் வயதானவர்கள் செய்ய வேண்டியதென்றும் பதிவாகி இருக்கிறது.

உடலும், மனமும் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் இருக்கும் மற்ற அம்சங்களும் புதிதுபோல் உயிர்ப்புடன் இருக்கவே யோகாவும் தியானமும்!

நோய் குணமாவதற்கல்ல யோகா. நோயேவராமல் இருப்பதற்குத்தான் யோகா வயதான பின் செய்வதற்கல்ல தியானம். மனதுக்கு வயதாகாமல் இருப்பதற்கே தியானம்.

வாழ்க்கைப் பயணத்தில் பாதை எப்படி இருந்தாலும் பயணம் சமமாக இருக்க யோகாவும் தியானமுமே இணையற்ற வழிகள்.

வாழ்க்கை என்பதற்கு நம்வசம் இருக்கும் குறுகிய வரையறைகளையும் விளக்கங்களையும் தகர்த்திடுங்கள். பிரம்மாண்டமான பிரபஞ்சத்துடன் உங்களை இணைக்கும் உன்னதங்களை நழுவ விடாதீர்கள்.

தியானம் யோகா ஆகியவை உங்கள் அன்றாட வாழ்வின் அசைக்க முடியாத அம்சங்களாய் ஆகட்டும்! விளைவுகளை நீங்களே பாருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *