
31
வண்ணக் குமரனும் வள்ளி அவள்முன்னே
தொண்டு கிழவனாய்த் தோன்றினான் _வண்டுவிழி
மொய்க்கும் மலர்முகத்தை
மூத்த சருகாக்கும்
பொய்யன் போல் மெய்யுண்டோ பேசு
32
கண்ணன் மருமகன் காதல் நிறைவேற
அண்ணன் துணையை அழைத்தானே_
பெண்ணரசி
வேழத்துக் கஞ்சி வடிவேலன் காதலெனும்
ஆழத்தில் வீழ்ந்த அழகு
33
தாகம் எனக்கென்றான்: தண்ணீர் கொடுத்தாலோ
மோகம் எனக்கென்றான் மெல்லவே_வேக
சினம்கொண்ட மான்மகள் சீறியும் அன்னாள்
மனம் கொண்ட வேலவன் மாண்பு
34
வேடன் உருவில் விருத்தன் வடிவத்தில்
தேடிவந்த வேலவன் தன்மையை_ஏடுகள்
வள்ளிசந் தானமென வித்தகத் தத்துவமாய்
உள்ளுவதை நெஞ்சே உணர்.
35
தன்னை அறியாரை தான்தேடி ஆட்கொள்ளும்
அன்பின் பெருக்கமே ஆறுமுகம்_மன்னவனை
உள்ளம் மறந்தும் உயிர்மறந்து போகாது
வள்ளல் கழல்கள் வணங்கு.
36
காய்க்கும் தினைப்புனம் காக்கும் வனம்தனில்
வாய்க்கும் முருகன் வரவென்றால் _ஏய்க்கும்
வினைப்புனம் காக்கிற வாழ்விலும் வந்தே
எனைக்காக்க வேண்டும் இனி.




