Blog

/Blog

ஞானபீடம் சர்ச்சையை முன்வைத்து-3

நிறைவாக….. சற்று ஏறக்குறைய 25 ஆண்டுகள் முன் கவிஞர் வைரமுத்து கவிதைகள் மொத்த தொகுப்பாக வெளிவந்தது. அவருடைய பல்வேறு தொகுப்புகளில் இருந்து இந்த மொத்த தொகுதிக்கான கவிதைகளை தேர்வு செய்யும் குழுவில் இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  திரு அசோகமித்திரன் திரு இந்திரா பார்த்தசாரதி திரு சுஜாதா திரு மாலன் முனைவர் ஔவை நடராசன் திரு காவியா சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள். இந்தக் குழு பலமுறை கூடி கவிதைகளை தேர்வு செய்தது உண்டு இதில் ஒரு பார்வையாளனாக நான் சிலமுறை கலந்து ...

ஞானபீடம் சர்ச்சையை முன்வைத்து -2

ஒருவருக்கு அறிவிக்கப்பட்ட விருதை அந்த தளத்தில் நின்றே விவாதிக்க வேண்டும். தனிப்பட்ட அபிப்பிராய பேதங்கள், கருத்தியல் மோதல்கள், முரண்பாடுகள், தனிப்பட்ட முறையில் பேசப்படும் புகார்கள் ஆகியவை இங்கு விவாதப் பொருள் அல்ல. நவீன இலக்கியம், பின் நவீனத்துவ இலக்கியம் ஆகியவை தமிழ் இலக்கியப் பரப்பின் ஒரு தரப்பு மட்டுமே. அவை மட்டும் தான் இலக்கியங்களா என்றால் இல்லை.தமிழின் மரபிலக்கியம் முழு வல்லமையுடன் இன்றும் உருவாகி வருகிறது. மரபு வடிவத்தில் மட்டுமின்றி புதுக்கவிதையில் கூட மரபார்ந்த கருதுகோள்களுடன் வெளிப்படைத் ...

ஞானபீடம் சர்ச்சையை முன் வைத்து..1.

திரு சீமானுக்கு திரு.ஜெயமோகன் எழுதிய கடிதத்தில் தனக்கு அவர் தரப்பில் இருந்துவரும் வசை மொழிகளை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார். அதில் “இலக்கியம் என்றால் விவாதம் வரும் பூசல் வரும் “என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவரும் சரி மற்றவர்கள் பலரும் சரி இந்த விவாதத்தை இலக்கியப்பூர்வமாக கொண்டு செலுத்தவில்லை. கவிஞர் வைரமுத்து படைப்பாளரே இல்லை என்பது போன்ற சித்திரத்தை நிறுவ முயலும் போதே விமர்சனம் விவாதம் என்பதெல்லாம் வெறும் அவதூறுகளாகத் திரிந்து விட்டன. கவிஞர் வைரமுத்து பற்றிய என்னுடைய ...

சந்தில் எதிர்ப்படும் சங்கிலி பூதம்

  காஞ்சி மகா பெரியவர் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அவர் சென்னையில் நகர்வலம் வந்தபோது பாதயாத்திரையாக பலருடைய இல்லங்களுக்கும் சென்று பூர்ணகும்ப மரியாதையை ஏற்று வெளியே வந்து கொண்டிருந்தாராம். எல்லோரும் ஊர்வலமாக போவதை பார்த்து சின்னஞ்சிறுவன் ஒருவன் அவர்களுடன் சேர்ந்து கொண்டானாம். அவனுக்கு மகா பெரியவர் யார் என்றெல்லாம் தெரியாது. அவரை பலரும் ஆர்வமாக வீட்டுக்குள் அழைத்து வணங்குவதை பார்த்து அவனுக்கும் ஆசை வந்துவிட்டது. நடந்து கொண்டிருந்த மகா பெரியவரிடம் சென்று” சார் சார்! ...

வாழ்த்து வழிப்பறி

ஃபேஸ் புக் இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் பலவற்றிலும் ஓர் உத்தி பின்பற்றப்பட்டு வருகிறது. பார்க்கப் பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் குழந்தைகள் அல்லது அனுதாபத்துக்குரியவர்கள் புகைப்படங்களை போட்டு இவர்களுக்கெல்லாம் ஒரு லைக் கிடைக்காது என்கிற ஆதங்க வரியோடு சில பதிவுகளைப் பார்ப்பீர்கள். அல்லது லைவ் ஷோ நிகழ்ச்சிகளில் நன்றாக பாடக்கூடிய குழந்தைகள் புகைப்படங்களை போட்டு இவருக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே என்கிற வாசகத்தை பார்ப்பீர்கள் யாருக்கெல்லாம் இவருடைய பாடல் பிடிக்கும் ஒரு லைக் போடுங்கள் அல்லது ஒரு ...

மாணவக் கடலின் கரையோரம்…

DG வைஷ்ணவா கல்லூரி என்றால் சென்னையில் மிகவும் பிரசித்தம். அதன் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். தீக்ஷாரம்பம் என்ற பெயரில் நடந்த இந்த விழாவுக்கு முதல் நாள் இரவே கல்லூரி வளாகத்தில் சென்று தங்க நேர்ந்தது. பொதுவாக விழா நடக்கும் வளாகத்தை விட வெளியில் தங்குவதை நான் பெரிதும் விரும்புவேன். ஆனாலும் இந்த முறை அந்த அழைப்பை நான் தவிர்க்க விரும்பவில்லை. ஏனென்றால் கல்லூரியின் முதல்வர் கேப்டன் டாக்டர் சந்தோஷ் பாபு என் கல்லூரி ...
More...More...More...More...