அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 3
“சுபரமண்யா சுப்ரமண்யா சற்றே பாரப்பா ஒப்பில்லாத தவசீலா நடந்ததைக் கேளப்பா” உற்றவர் அழுததில் மெல்ல விழித்ததும் ஊரார் கதைசொன்னார் கொற்றவன் வந்ததை கேள்வியும் கேட்டதை ஒவ்வொன்றாய் சொன்னார் முற்றிய தவத்தில் கனிந்தவர் மெதுவாய் முறுவல் செய்தாராம் சக்தியின் லீலை நடப்பதை உணர்ந்தவர் திருமுகம் மலர்ந்தாராம் “ஆவது ஆகட்டும் அன்னையின் ஆணை ஏதென நானறியேன் வாழ்வின் பொருளை விளங்கிடச் செய்யும் வித்தகம் நானறியேன் பவுர்ணமி போலப் பொன்முகம் காட்டிய காரணம் நானறியேன் கணமும் கணமும் அவளது திருமுகம் வேறொன்றும் ...
அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 2
அருளே வடிவாம் அபிராமிக்கு அர்ச்சனை செய்யும் மரபினிலே அமிர்தலிங்கரின் மகனாய் உதித்தார் சுப்ரமணியனும் உலகினிலே மருளைத் துடைக்கும் மாதவச் செல்வி மலரடி தனிலே மனதுவைத்தார் இரவும் பகலும் அம்பிகை வடிவை இதயத்தில் பதித்தே தவமிருந்தார்… “ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும் உண்மை அபிராமி ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி காலனை உதைத்த கால்களும் சிவக்கும் நடனம் அபிராமி ...
அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 1
விநாயகர் வாழ்த்து (தொகையறா) தொடரும் துணையாய் துலங்கும் பூரணம் இடர்கள் களையும் ஏக நாயகம் கடலின் அமுதம் கவரும் சாகசம் கடவூர் வாழும் கள்ள வாரணம்-திருக் கடவூர் வாழும் கள்ள வாரணம் கள்ள வாரணம்…. பல்லவி காக்கும் விநாயகன் கழலிணை சரணம் ஆக்கும் பனுவலில் அவன் பதம் பதியும் நோக்கும் வேளையில் நம்வினை அகலும் ஏக்கம்..போக்கும்…. இணையடி சரணம்…… சரணம் ஆதிகடவூர் அமர்ந்தவனாம்-எங்கள் அமுதகடேசன் திருமைந்தன் நீதி நிலைபெற வருபவனாம்-எங்கள் நெஞ்சில் நிறையும் கணநாதன் ஜோதி வடிவாம் ...
நீங்கள் நினைப்பது என்ன?
கால்கள் பதித்தோம் வாழ்வின் தடத்தில் தடைகள் வரலாம் ஒருசில இடத்தில் தாண்டி நடக்கப் போகின்றோமா தயங்கி நிற்கப் போகின்றோமா…. நீங்கள் நினைப்பது என்ன? பத்திரமானது சராசரி வாழ்க்கை பரவசமானது சாகச வாழ்க்கை பொத்தி வைத்தே போய்விடலாமா புதையல் எடுத்து ஜெயித்திடலாமா….. நீங்கள் நினைப்பது என்ன? சலனம் சபலம் சுகமாய் தோன்றும் செயல்கள் கடமைகள் சுமையாய் தோன்றும் சிலநொடி சுகத்தில் சாய்ந்திடலாமா செயல்கள் வழியே வாழ்ந்திடலாமா…. நீங்கள் நினைப்பது என்ன? மகிழ்ச்சியை நோக்கியே மண்ணில் சிலபேர் மலர்ச்சியை நோக்கியே ...
சாகித்ய அகாதமி-ஆளுக்கா?நூலுக்கா?
ஆ.மாதவன் தமிழில் முக்கியமான படைப்பாளி. அவருக்கு தரப்பட்டுள்ள சாகித்ய அகாதெமி விருது காலந்தாழ்ந்து தரப்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதேநேரம், அவருக்கு தரப்பட்டுள்ள விருது, அவருடைய விமர்சன நூல் ஒன்றுக்காக என்பதுதான் விநோதம். அந்த ஆண்டின் சாகித்ய அகாதெமி விருதுக்கென வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் வெளியான நூல்கள்தாம் பரிசீலிக்கப்படும் என்ற முறையில் ஆ.மாதவனின் இந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,அடிப்படையில் ஆ.மாதவன்,புனைவு எழுத்தாளர். அவருக்கு விருது தாமதமாகிக் கொண்டே போவதை குழுவில் ஒருவர் வலியுறுத்த அவரது விமர்சனக் கட்டுரைகள் ...
மூடர் கூடம்
ஓராசிரியர் பள்ளியிலே ஓட்டமில்லே ஆட்டமில்லே யாராயிருந்தாலும் எப்போதும் அச்சத்திலே! சார்வாளின் இருமலிலும் சங்கீதக் கார்வையின்னு வாய்பாடு படிப்பதன்றி வேலையங்கே ஏதுமில்லே வச்சதுதான் சட்டமவர் வகுத்ததுதான் பாடமுன்னு உச்சியிலே கிறுக்கேறி ஊர்பகைக்கக் கெடந்தாலும் லச்சையெதும் இல்லாத லட்சணத்த என்னசொல்ல: கச்சைகட்டி மோதுகிற கிருத்துருவம் கொஞ்சமல்ல பெட்டிக்கடை வாசலிலும் ரொட்டிக்கடை வாசலிலும் வட்டிக்கடை வாசலிலும் வர்றவங்க போறவங்க தட்டுக்கெட்ட பிள்ளைகளைத் தன்போக்கில் ஆட்டுவிக்கும் கெட்டிக்கார வாத்தியார குத்திக்குத்திப் பேசுறாக கால்வாசி தமிழ்படிச்சு குப்பைகளை அள்ளிவச்சு மேல்மாடி நெரப்புறதே மேதாவித் தனமுன்னு ...