மார்கழி 28 குருவாக வந்த சிவன்
மூவராலும் தேவராலும் அறிய முடியாத சிவபெருமான் தன் பாகம்பிரியாளோடு தன்னடியார்களின் மன வீடுகளில் தொடர்ந்து எழுந்தருள்கிறார். இந்த எளிவந்த தன்மையைப் பாடும் போதே சிவபெருமான் குருவடிவாய் திருமேனி கொண்டு வந்ததையும் ,திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்டதையும்,குருவடிவு காட்டியதையும் நினைந்து உருகுகிறார் மாணிக்கவாசகர் முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் ! பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே ! செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் ...
மார்கழி 27_கருணைக்கென்ன கைம்மாறு?
தேவர்கள் அமுதத்தை அறிந்தவர்கள். அதன் சுவையை அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் ஒரு பழத்தின் சுவையை அறிந்தவர்களில்லை என எள்ளல் தொனிபடப் பாடுகிறார் மாணிக்கவாசகர். எந்தப் பழம் அது? திருமூலர் சொன்ன பழம்தான். ”ஒன்று கண்டீர் இவ்வுலகுக்கொரு கனி நன்று கண்டீர் அது நமசிவாயக் கனி மென்று கண்டால் அது மெத்தென்றிருக்கும் தின்று கண்டால் அது தித்திக்கும் தானே” என்றார் திருமூலர். சிவக்கனி எவ்வளவு அருமையானது,எவ்வளவு சுவையானது என்பதையோ, சிவனின் திருவுரு எத்தகையது என்பதையோ தேவர்களும் அறிய மாட்டார்கள். ...
மார்கழி 26-தேடலின் உறுதி
தேர்வில் வெல்ல விரும்பும் மாணவர்களைப் பாருங்கள்.பொழுது போக்குகள்,கேளிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் படிப்பிலேயே கவனமாயிருப்பார்கள். இவர்களே இப்படியென்றால் முக்தியை நினைக்கும் அடியார்கள் எப்படி இருப்பார்கள்? “பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்” என்கிறார் மாணிக்கவாசகர். “பப்பற” என்றால் மனதை வேறெங்கும் செலுத்தாமல் என்று பொருள். அவர்கள், ஒரு பெண் தன்காதலன் மேல் எவ்வளவு அர்ப்பணிப்புணர்வுடனிருப்பாளோ அது போன்ற இயல்பில் இருக்கிறார்கள்.அவ்வளவு தீவிரமாக இறைத்தேடலை வகுத்துக் கொண்டவர்கள் போல் தவமோ உறுதியோ இல்லையென்றாலும்,என் பிறவி நோயை அறுத்து ஆட்கொள்ளும் பெருமானே ...
மார்கழி 25-தகுதி வேண்டாத பதவி
சிற்சில பதவிகளுக்கென்று சில தகுதிகள் உண்டு.ஆனால் முன் தகுதி எதுவுமே இன்றி இருந்தாலும் பக்தி இருந்தால் இறைவனுடைய கருணை ஆட்கொண்டு விடுகிறது.”சிவன் பஞ்ச பூதங்களிலும் நிறைந்து நிற்கிறான்.அவன் எங்கும் இருப்பவன் என்பதால் செல்வதோ வருவதோ இல்லை’ என்பதை பாடல்களாகக் கேட்டதன்றி இறைவனைக் கண்டறிந்தவர் பற்றிக் கேட்டறியக்கூட இல்லை. தகுதிகள் இவ்வளவு குறைவாய் இருப்பினும் மிகுதியான கருணை கொன்ட இறைவன், தம்மை அறிந்தவர்களைக் கூட அறியாதார் முன்பு தாமாக வெளிப்பட்டு ,அவர்தம் குறைகளைக் களைந்து தாமாக ஆட்கொள்கிறான் எனில் ...
மார்கழி 24-சிறியவராய் உணர்பவரே பெரியவர்கள்
பக்தி கனிகையில் வருகிற பணிவு, அற்புதமானது. மனிதன் ஓர் எல்லை வரையில் தான் எவ்வளவு பெரியவன் என்பதை நிறுவவே முற்படுகிறான்.ஆனால் அவன் பக்குவம் அடைகிற போது தன்னினும் மேம்பட்ட இறையடியார்கள் பலரும் இருப்பதைக் கண்டு அவர் தம் பெருந்தொண்டுகளுக்குத் தலைவணங்குகிறான். சிவசந்நிதியில் பல்வகை அடியார்களையும் கண்டு மணிவாசகர் மனம் உருகிப் பாடுகிறார். இசைக்கருவிகளை இசைப்பவர்கள், ரிக் வேதம் ஓதுபவர்கள், தோத்திரப் பாடல்களை பாடுபவர்கள், தொழுபவர்கள்,அழுபவர்கள்,பக்திப் பெருக்கில் துவண்டு விழுபவர்கள்,தலைக்கும் மேல் கைகூப்பி உருகி நிற்பவர்கள்..இவர்கள் ம்த்தியில் என்னையும் ...
மார்கழி 23-எல்லோருக்கும் அரியன்! எமக்கெளியன்!
இந்தப் பாடலுக்கான மரபான உரைகளில் ஒன்று, பக்தியின் பரிணாமத்தை சுட்டுவதை பள்ளி மாணவனாக இருந்த போது வாசித்தேன். மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் உரை அது. “கூவின பூங்குயில்” என்று பாடல்தொடங்குகிறது.பொழுது புலர்வதற்கு முன் கூவக் கூடியது கோழி என்பார்கள். மாணிக்கவாசகரே திருவெம்பாவை8 ஆம் பாடலில். “கோழி சிலம்ப,சிலம்பும் குருகெங்கும்” என்பார்.ஆனால் இங்கு முதலில் குயிலை யும் பின்னர் கோழியையும் மூன்றாவதாக குருகையும் நான்காவதாக வெண்சங்கையும் சொல்கிறார். இவை பறவைகளைக் குறிப்பன அல்ல, உயிரைக் குறிப்பவை என்பது பழைய ...