Blog

/Blog

கோவை கண்ணதாசன் கழகம் கண்டன எதிரொலி: ஸ்லீப்வெல் நிறுவனம் முதல்கட்ட நடவடிக்கை

      கவியரசு கண்ணதாசனின் ‘மலர்ந்தும் மலராத பாதிமலர்போல’’ எனும் பாடலை ஸ்லீப்வெல் படுக்கை விளம்பரத்திற்கு தவறான பொருளில் பயன்படுத்தியதைக் கண்டித்து கோவை கண்ணதாசன் கழகம் நடத்திய கண்ணதாசன் விழாவில் மரபின்மைந்தன் முத்தையா கண்டனம் தெரிவித்தார். இது குறித்த விரிவான செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்தது.     இந்தக் கண்டனத்திற்கு ஆதரவாக சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் புவியரசு, திரைப்படத் திறனாய்வுக்காக தேசிய விருது பெற்ற திரு.ஜீவானந்தம்,கலைக்களஞ்சியம் உருவாக்கிய பேராசிரியர் சுப்பிரமணியம் ...

நாதமே எங்கும் நிறை

 மறையா மறைபொருளே; மாதவமே; என்றும் குறையா கருணைக் கடலே- நிறைந்தாயோ! பொன்மேனி தன்னை பழஞ்சட்டை போலுதறி நின்றாயோ எங்கும் நிலைத்து. ஒப்பில் உயர்ஞான உத்தமனே; உண்மைகள் செப்பவே வந்தனை செம்மலே-கப்பலாய் மூட்டைவினை யேற்றி மனிதர் சுமைநீக்கி ஓட்டினையோ சாகரத்தின் உள் மோன சிவானந்த மூர்த்தி! உயிரொளியால் வானளந்த வாமன வள்ளலே-ஊனுதறி தானாய் கரைந்த தயாபரனே ! ஞானத்தின் தேனாய் உயிரில் திகழ். கயிலாய வெற்பில் குளிர்முகிலா னாயோ; ஒயிலான  கங்கையொளிந் தாயோ- வெயிலான ஆதவனின் பொற்கிரணம் ஆனாயோ; ...

ஒருசொல்

ஒருசொல் ஒலித்திடும் சந்நிதியில்-அதை உண்மையில் அவள்தான் சொல்வாள் ஒருபூ உதிர்ந்திடும் பீடந்தனில்-அந்த உன்னதம் அவள்தான் செய்வாள் ஒருவில் தெரியும் செங்கரும்பில்-அதில் ஒருகணை அவள்தான் எய்வாள் ஒருகண் தெரியும் திருநுதலில்-அதில் உறுகனல் வினைமேல் பெய்வாள் குவியும் மாலைகள் நடுவினிலே-அவள் குளிர்முகம் குறும்பாய் சிரிக்கும் தவங்கள் எத்தனை செய்தோமோ-அவள் திருமுன் எல்லாம் பலிக்கும் கவலைக் குமிழ்கள் எல்லாமே- அவள் கடைவிழி பட்டுத் தெறிக்கும் சிவனின் கண்டம் பதிந்தவிரல்-வரும் ஜென்மத் தொடர்ச்சிகள் அறுக்கும் கடவூர் வீதிகள் அனைத்திலுமே -அவள் கால்கள் பதித்து ...

ஏகலைவம்

( இதுவும் முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் எழுதியதன் தொகுப்புதான்) ஏவிய அம்பை எதிர்கொள்ளும் போது பீஷ்மர் கொஞ்சம் பதறிப் போனார் உதறித் திரியும் துரியோதனர்க்காய் பதறும் விதுரன் பண்ணுவதென்ன.. வார்ப்படம் செய்தது தருமனைப் படைக்க வார்த்தபின் சகுனி வந்து தொலைக்க… திருதிராஷ்டிரனுக்கு காட்சிகள் இல்லை சஞ்சயன் சொல்லுக்கு சாட்சிகள் இல்லை குருஷேத் திரத்தில் குவிந்த படைகள் விஜயன் கேள்விக்கு விதியின் விடைகள் மோதத் துடிப்பவர் மூர்க்கத்தில் இருந்தே கீதையின் முதல் சொல் கண்ணன் புனைந்தான் அர்ச்சுனன் மனதை ...

+2 தேர்வு முடிவுகள்: வந்ததும் செய்ய வேண்டியதென்ன….?

+2 தேர்வு  முடிவுகள் வெளிவந்ததுமே பெற்றோர்களும் மணவர்களும் கூட்டணி அமைத்து உடனடியாக செய்ய வேண்டிய செயல்கள் சில உண்டு. 1) வருகிற தேர்வு முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.மிக மிக அரிதாக,மறு மதிப்பீட்டுக்கு தேவையான சூழல் ஏற்படக்கூடிய மிகச்சிலரைத் தவிர மற்றவர்கள் “இப்படி வந்திருக்கலாமே,அப்படி வந்திருக்கலாமே” என்பது போன்ற வீண் விவாதங்களையும் பதட்டங்களையும் தவிர்த்து விடுங்கள். 2) குடும்பத்துடன் அமர்ந்து சில நிமிடங்கள் கண்மூடி பிரார்த்தனை செய்யுங்கள். முன்னதாகவே கல்லூரி விண்ணப்பங்களை வாங்கி வைத்திருப்பீர்கள். இப்போது மதிப்பெண்கள் ...

கிருஷ்ண காந்தம்

(முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் கண்ணனைப் பற்றி எழுதிக் கொண்டே வந்த வரிகள் கைகோர்த்து கவிதையாயின) வெண்ணெய் கனவில் கண்ணன் புரள கண்ணன் நினைவில் குழலும் உருள எழுந்த சங்கீதம் எவர்செய் ததுவோ கண்ணன் செவ்வாய் உண்ட பின்னை மண்ணும் வெண்ணெய்; அறியாள் அன்னை உரலில் கட்டிய யசோதையை விடவும் குரலில் கட்டிய மீரா பெரியவள் கண்ணனை ஒருத்தி கள்வன் என்கிறாள் கள்வனை ஒருத்தி கண்ணன் என்கிறாள் ஆலிங்கனத்தில் அகப்பட மாட்டான் காளிங்கனுக்கு பயப்பட மாட்டான் கோபியர் மடிமேல் ...
More...More...More...More...