Blog

/Blog

மும்மத வேழமாய் இங்கிருந்தான்

மூடிக் கிடந்த குளிர்பெட்டி-அதில் மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே பாடி முடிந்த கீர்த்தனையாய்- எங்கள் பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே மேடுகள் ஏறிய ஜீவநதி -நெடும் மௌனத்தில் தூங்கிய தருணமிது கூடு கிடத்தி சிறகடித்தான் -ஒரு கனல்பறவை கொண்ட மரணமிது மீசை வருடும் இருகரங்கள்-அவன் மார்புக் கூட்டினில் கோர்த்திருக்க வீசும் வெளிச்ச விழியிரண்டும் -ஒரு விடுகதை போலத் துயின்றிருக்க பேசி  உலுக்கிய இதழிரண்டும் -ஒரு பிரளய முடிவென ஓய்ந்திருக்க ஆசைத் தமிழன் ஜெயகாந்தன்- அங்கே  அமைதி பருகிப் படுத்திருந்தான் சந்தடி ...

எழுத்து மட்டுமா எழுத்தாளன்?

ஜெயகாந்தன் எழுதாத நேரங்களிலும் ஓர் எழுத்தாளராய் ஒளிர்ந்தவர்.தொழில் சார்ந்த முழுநேர எழுத்தாளர்கள் பலருண்டு. ஆனால் அவர் நுண்ணுணர்வின் ஓயாச் சுடரால் ஒளிவீசிக் கொண்டேயிருந்தவர். இரவுப் பொழுதுகளில் கதிரவன் நம் கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்கோ ஒளிவீசியதைப் போல் எழுதாத நேரங்களிலும் உள்ளொளி கனல நின்ற காம்பீர்யன் அவர். தன்னைத் தானே சிகரமாய் உயர்த்தி அந்தசி சிகரத்தின் முகட்டில் தன்னையே ஒளியாய் தகதகக்கச் செய்த ஜோதியாய் சுடராய் சூழொளி விளக்காய் நீடு துலங்கும் நிலை வெளிச்சம் அவர். அவருடைய பாத்திரங்களில் ...

குறும்பாவில் சிலம்பு

மாநாய்கன் பெற்றமகள் மலர்ந்தாள் மாசாத்து வான்மகனை மணந்தாள் மானாய் மருண்டாள் மதுரைநடந்தாள் கோனவன் பிழைசெய்ய கண்ணகியும் கனலாகி எழுந்தாள் சுதிசேர்த்தாள் மாதவியும் யாழில் சுரம்சேர்த்தாள் பூம்புகாராம் ஊரில் விதிசேர்த்த காரணம்  வல்வினையின் காரியம்  பதிநீத்தான் கோவலனும் பேர்படைத்தாள் பாவிமகள் பாவில் தூங்காத கண்ணகியின் துயரம் தமிழ்கண்ட கற்புக்கோர் உயரம் ஏங்காமல்ஏங்கி இதயவலிதாங்கி ஓங்கி நின்றாள் ஆனாலும் மாதவியும் வயிரம் கலைக்காக மாதவியை சேர்ந்தான் கோவலனும் ஆனந்தமாய் வாழ்ந்தான் விலையறியா காதலில் விளைந்தவொரு ஊடலில் நிலைதவறி தடுமாறி நடந்தவனோ ...

முதுபெரும் தமிழறிஞர் ல.ச. மறைந்தார்

தேர்ந்த தமிழறிஞரும்,ரசிகமணி டி.கே.சி. அவர்களின் அணுக்கச் சீடருமான வித்வான் ல.சண்முகசுந்தரம் சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 94. தன் குருநாதரைப் போலவே மாபெரும் ரசிகராய் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் பல நூல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமிக்காக ரசிகமணி வாழ்வு குறித்து எழுதிய நூல் முக்கியமானது. ரசிகமணி பாணியில் செய்யுட்களை இசையுடன் பாடி விவரிக்கும் இவரின் பாணி வித்தியாசமானது.கோவை திரு.ரவீந்திரன் அவர்கள் ஏழெட்டு ஆண்டுகள் முன்னர் கோவையில் ஓர் ஒலிப்பதிவுக் கூடத்தில் அவரை அழைத்துச் சென்று 7-8 மணி ...

உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு

காடு திருத்திய மானிடர்கள்-ஒரு காலத்தில் நாடுகள் அமைத்தளித்தார் வீடுகள் வீதிகள் சமைத்தவரோ-பல வாழ்க்கை முறைகளும் வகுத்தளித்தார் தேடும் வசதிகள் பெருகியபின்-நல்ல தேசங்கள் வளர்ந்து பொலிகையிலே ஏடு புகழ்ந்திட சிங்கையினை-புகழ் ஏற்றி வளர்த்தார் லீகுவான் இயூ புத்தம் புதிய குடியரசின் -வெகு புகழ்முகம் இவரெனும் வரலாறு நித்தம் அதிசயத் திட்டங்கள்-தரும் நிகரில் வல்லமை பலவாறு தத்தம் கடமைகள் புரிந்தாலே-ஒரு தேசம் துலங்கும் என்பதற்கு வித்தக சான்றாய் விளங்குகிறார்-இந்த வையம் புகழும் லீகுவான் இயூ அடிப்படை வசதிகள் பெருக்குவதில்-பல அறிவியல் ...

தொட்டதுமே பட்டவினை தூள்

(இசைக்கவி ரமணன் , விசாகப்பட்டினம் அருகிலுள்ள பீமுனிப் பட்டினத்தில் பீடம்கொண்டிருக்கும் தன் குருநாதரை தரிசித்த அனுபவங்களைப் படங்களாய் பகிர்ந்திருந்தார்.அந்தப் படங்கள் பார்த்த உவகையில் இந்த வெண்பாக்கள் எழுதினேன்…..பாம்பறியும் பாம்பின் கால்!!!) நெருப்பின் குளுமை நிழலை, இமயப் பொருப்பின் சிகரப் பொலிவை-இருப்பை தவானந்தம் பூத்த தருவைகை கூப்பி சிவானந்த மூர்த்தியென்றே சாற்று காவி இடைமறைக்க காருண்யம் கண்நிறைக்க மேவு முகில்துகிலாய் மேனியிலே-பீமுனிப் பட்டினத்தில் வாழும் பரஞ்சுடரின் பொன்னடிகள் தொட்டதுமே பட்டவினை தூள். கைகட்டும் சீடன் கவிகட்டக் காரணமே பொய்முட்ட ...
More...More...More...More...