Blog

/Blog

தொட்டதுமே பட்டவினை தூள்

(இசைக்கவி ரமணன் , விசாகப்பட்டினம் அருகிலுள்ள பீமுனிப் பட்டினத்தில் பீடம்கொண்டிருக்கும் தன் குருநாதரை தரிசித்த அனுபவங்களைப் படங்களாய் பகிர்ந்திருந்தார்.அந்தப் படங்கள் பார்த்த உவகையில் இந்த வெண்பாக்கள் எழுதினேன்…..பாம்பறியும் பாம்பின் கால்!!!) நெருப்பின் குளுமை நிழலை, இமயப் பொருப்பின் சிகரப் பொலிவை-இருப்பை தவானந்தம் பூத்த தருவைகை கூப்பி சிவானந்த மூர்த்தியென்றே சாற்று காவி இடைமறைக்க காருண்யம் கண்நிறைக்க மேவு முகில்துகிலாய் மேனியிலே-பீமுனிப் பட்டினத்தில் வாழும் பரஞ்சுடரின் பொன்னடிகள் தொட்டதுமே பட்டவினை தூள். கைகட்டும் சீடன் கவிகட்டக் காரணமே பொய்முட்ட ...

ஈஷாவில் இருக்கின்ற மாயம்

இல்லாது போதெலெனும் பொல்லாத போதைதான் ஈஷாவில் இருக்கின்ற மாயம் நில்லாத வினைகளெலாம் செல்லாது போக குரு நாதனவன் நிகழ்த்துகிற ஜாலம் சொல்லாத வலிகளையும் கிள்ளாமல் கிள்ளிவிட சுட்டுவிரல் கட்டைவிரல் சேரும் கல்லாத கல்வியினைஎல்லாரும் அடைந்திடவே குன்றின்கீழ் ஒளிர்கின்ற கூடம் வார்த்துவைத்த மாதிரிகள் வாழ்க்கையினை ஆக்ரமிக்க வாட்டத்தின் வலிகனிந்த பிறகு பார்த்துவந்த மானிடர்கள் சேர்த்தளித்த சுமையிறக்க பரமநிழல்தேடுகிற பொழுது தீர்த்தத்தில் தலைமுழுகி தீர்ப்புக்குத் தலைவணங்கி திரும்புகையில் முளைக்குமிரு சிறகு வேர்த்தநடை தகிப்பாற வேண்டிநின்ற கனல்மேவ வைத்திருந்த அகந்தையெலாம் விறகு ...

குறும்பாய் சில குறும்பாக்கள்

(ஆங்கில வடிவமான லிமரிக்கின் தமிழ் வடிவம் குறும்பா.அதனாலோ என்னவோ ஆங்கிலச் சொற்களுக்கு அனுமதி உண்டு..) காலையில நடக்குறாரு அப்பன் கேழ்வரகு இட்டிலிதான் டிப்பன் வேலைக்கு இடையே வச்சுதின்ன வடையே மூலையில முடக்கிடுச்சே சுப்பன் பன்றிக்கும் பறவைக்கும் போட்டி பரவுகிறகாய்ச்சலின்பேர் சூட்டி இவ்வுலகை வாட்டி இன்றுவரை லூட்டி அன்றைக்கே மருந்துதந்தாள் பாட்டி கோழிக்குஞ்சு தேடிவந்த கோபாலா குருமா உன் பொண்டாட்டி செய்வாளா ஏழுகிலோ எடைகூடி இடுப்பு பெருத்துதுன்னு ஆழாக்கு அரிசியில சஃபோலா வாட்ஸப்பில் வந்ததொரு தகவல் விநாயகர் பேரில்நல்ல ...

மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்-யாழி

கைரேகை படிந்த கல்வழியே அறிமுகமான கவிஞர் யாழி,கவிதையின் ரேகை படிந்த தேநீர்க் கோப்பைகளுடன் வந்திருக்கிறார்.பத்துத் தலை கொண்டவன் இராவணன் என்பார்கள்.இன்று நவீன கவிதைக்கு பலநூறு முகங்கள்.யாழியின் இந்தக் கவிதைகளில் நான் காணும் முகம், மரபின் ஆழத்தில் வேரூன்றி நிற்கும் நவீன கவிதைகளின் முகம். பல்லாயிரம் ஆண்டுகள் பின்புலம் கொண்ட தொன்மத்தில் ஊடாடி உருண்டோடி வரும் சொற்கள் நவீன கவிதைகளை மேலும் நவீனமாக்குகின்றன என்பதே அதிசயமான உண்மை. யாழியின் கவிமனம் அத்தகைய தொன்மங்களில் ஊடாடியும் வாழ்வியலின் புத்தம் புதிய ...

பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-5 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)

சக்தி ஜோதியின் கவியுலகம் முழுவதுமே பெண்ணின் அகவுலகம் சார்ந்ததுதானா எனில்,இல்லை. சங்க இலக்கிய வாசிப்பின் வழி அவர் புனைந்து கொண்ட அகவுலகம் ஒரு பகுதியெனில், நிகழ்காலத்தின் கனலாக நிற்கும் பெண்ணியம் சார் புறவுலகம் மற்றுமொரு பகுதி. சக்திஜோதியின் அகவுலகில் சிறகடிக்கும் பறவை, வனத்தையும் வானம் முதலாகிய ஐம்பூதங்களையும் அளாவிப் பறக்கிற அசுணமா எனில் புறவுலகம் சார்ந்த அவரின் பறவை நகர நெரிசலில் தத்திப் பறக்கும் குஞ்சுக் கிளியாய் கூண்டுக் கிளியாய், வாயாடிக் கிளியாய், ஊமைக் கிளியாய் ஆங்காங்கே ...

பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-4 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)

ஒரு பறவையின் சிறகு துளிர்விடும் நாளுக்கு மௌன சாட்சியாய்   பஞ்ச பூதங்களும்   நிற்கின்றன. தன்னிலிருந்து உந்தியெழ ஆசீர்வதிக்கிறது பூமி. தன்னை நோக்கித் தாவ அழைக்கிறது ஆகாயம். சிறகுகளைக் கோதுகிறது காற்று. சிறகு தாழ்த்தித் தேடினால் தாகம் தணிக்க உத்திரவாதம் தருகிறது நீர். வனமெங்கும் பரவும்பொழுதும் தன் நாவுகளைத் தாண்டிப் பறக்க அவகாசம் அளிக்கிறது நெருப்பு. சங்கத் தமிழ்மனம் காட்டும் பெண்ணுக்கு இயற்கையே தாய்வீடு. நெருங்கின பந்தங்களை விடவும் நேசத்துடன் இயற்கையோடு சொந்தம் கொண்டாடும் மனங்களை சங்க இலக்கியங்களில் ...
More...More...More...More...