Blog

/Blog

15. உங்கள் பணியாளர்களுக்கு உற்சாகம் ஊட்ட…

ஒரு நிறுவனத்தின் வெற்றி, கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதில் இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களின் பின்னடைவுக்கு, இந்தக் கூட்டுச் செயல்பாட்டில் ஏற்படும் குளறுபடிகளும் கருத்து வேற்றுமைகளுமே முக்கியக் காரணம். மனமுதிர்ச்சியும், ஒத்திசைவும் உள்ள நல்ல குழுக்கள் இயங்கும் விதம் குறித்து, சர்வதேச அளவிலான சில பொது கணிப்புகளை நிர்வாகவியல் அறிஞர்கள் வெளியிட்டுள்ளார்கள். நம்பிக்கையூட்டும் அத்தகைய குழுக்களுக்கென்று உள்ள குணங்கள் என்ன தெரியுமா? 1. ஒவ்வோர் உறுப்பினரும் தங்கள் சக உறுப்பினர்களின் கடமைகள், பொறுப்புகள், சிறப்பம்சங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். ...

14. எதற்காக வேலைக்கு வருகிறார்கள்?

நிறுவனங்களின் நிர்வாக மேலாண்மையை வரையறுக்கும் போக்கில் மேக்ஸ் வெபர் போன்றவர்களின் கோட்பாடுகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து முன்பு விரிவாக சிந்தித்தோம். இதில் மேஸ்லோ ஐந்தடுக்குக் கோட்பாடு ஒன்றை நிறுவினார். அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வருபவர்களுக்கு ஐந்து தேவைகள் இருக்கின்றன என்றார் அவர். 1. அடிப்படைத் தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம் 2. பாதுகாப்புத் தேவைகள்: இயற்கை, பணியிடம், எதிரிகள் ஆகியவற்றிலிருந்து… 3. அன்புத் தேவைகள்: குடும்பம், அலுவலகம், சமுதாயம் ஆகியவற்றிலிருந்து… 4. சுய மரியாதைத் தேவைகள்: ...

13. பொறுப்புகளைப் பகிர்ந்து தருகிறீர்களா?

ஒரு நிறுவனம் எத்தனை பேரை பணிக்கு வைத்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் இரண்டு விதங்களில்தான் அமையும். ஒன்று, அதிகாரங்களின் வைப்பு முறை. இன்னொன்று, பொறுப்புகளின் பகிர்வு முறை. ஒரு தனி மனிதர், இன்னொருவரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதுமே ஒரு நிறுவனம் உருவாகி விடுகிறது. புதிதாக வந்த ஒருவர், முதலாவதாக உள்ளவரின் கீழ் பணியாளராகச் சேர்ந்தால் அங்கே அதிகாரங்களின் வைப்புமுறை உருவாகிறது. அதற்குப் பதிலாக, பஙகுதாராக, சமநிலையில் இருப்பாரென்றால் அங்கே பொறுப்புகளின் பகிர்வு முறை உருவாகிறது. நிறுவனம், வளர ...

12. நிதி நிர்வாகம்

உங்கள் நிறுவனத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதத்தில் மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் கூட்டத் தொடர்களில் நிதிநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமுமே வருகிற நிதியாண்டுக்கான தம் பட்ஜெட்டை உருவாக்கி முடித்திருக்கும் நேரமிது. அரசாங்கத்தின் பட்ஜெட் ஆகட்டும், நிறுவனங்களின் அடிப்படை பட்ஜெட் ஆகட்டும்., அவை கீழ்க்கண்ட அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன. 1) போதிய நிதி ஆதாரங்கள் உள்ளனவா? 2) நிதி ஒதுக்கீடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா? 3) நடப்பிலுள்ள நிதி ஆதாரங்களை இன்னும் சிறப்பாக எப்படிக் கையாள ...

11. வளர்ச்சி வேண்டுமெனில் மாறுங்கள்!

சில நிறுவனங்களின் வளர்ச்சிப் பாதையை கவனித்தால் விசித்திரமாக இருக்கும். ஒரு தேக்க நிலை ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்போது அந்த நிறுவனமே புதிதாகப் பிறந்தது போன்ற பொலிவுடன் இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிதியாண்டுமே புதிதாகப் பிறப்பதுபோலத் தான். புதிய இலக்குகள் திட்டங்கள் போன்றவற்றை எட்ட வேண்டுமென்றால் நிறுவனத்தின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தத் தயங்கக்கூடாது. உணவுப் பொருட்களின் சூடு ஆறாமல் பாதுகாக்கும் “தெர்மோ” பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ...

10. உங்கள் நிறுவனத்தின் பணிச்சூழல்

ஒரு நிறுவனத்தில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள் என்பதல்ல, வளர்ச்சியின் அளவுகோல். எவ்வளவு பேர் திறமையாக வேலை பார்க்கிறார்கள் என்பதே சரியான அளவுகோல். நிறுவனத்துக்குள் இருக்கும் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள், மனிதவள மேம்பாட்டுக்கான அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் பணிபுரிகிறவர்கள் திறமை முழுமையாக வெளிப்படுகிறது. இந்தியப் பணிச்சூழலில், நிறைய பணியாளர்கள், தங்கள் செயல்திறன் வெளிப்படாமலேயே பணிபுரிகிறார்கள். இது மிகவும் விசித்திரமான விஷயம். ஏனென்றால், வரையறுக்கப்பட்ட கடமைகளைத் தாண்டி அவர்கள் வெளியே வருவதில்லை. பெரும்பாலும் அத்தகைய வாய்ப்புகளைப் பல நிறுவனங்கள் தருவதில்லை. ...
More...More...More...More...