9. நிர்வாகவியல் புரட்சி
நிர்வாக அணுகுமுறைகளில் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிற காலம் இது. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கணக்கிலும் பணிபுரிபவர்கள் மத்தியில் நிறுவனம் பற்றிய ஒருமித்த அடிப்படை அபிப்பிராயம் ஏற்படுத்துவதற்கென்று சில உத்திகள், பெரிய நிறுவனங்களில் பின்பற்றப்படுகின்றன. இதில் முக்கியமானது என்னவென்றால், அதே உத்திகள், சிறிய நிறுவனங்களுக்கும் ஏற்புடையவை என்பதுதான். உங்கள் நிறுவனத்தில் 20 பேர் பணிபுரிந்தாலும்கூட, 2000 பேர் பணிபுரியும் நிறுவனங்களின் சில பொது உத்திகளை நீங்கள் பின்பற்ற முடியும். இருபத்தோராம் நூற்றாண்டின் நிர்வாகவியல் புரட்சி இதனை சாத்தியம் ஆக்கியிருக்கிறது. பணியாளர்கள் ...
8. வெளியே சில மாற்றங்கள்!
தொழிலுலகத்தின் எல்லா அம்சங்களிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிற நேரமிது. உலகமயமாக்கல் காரணமாய் சர்வதேசப் போட்டிகள், நுகர்வோர்களின் நுட்பமான தேவைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கங்கள் என்று விதவிதமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. மாற்றங்கள் நிகழும் சூழ்நிலையைக் கையாள்வதில் யார் ஜெயிக்கிறார்கள், யார் தோற்கிறார்கள் என்று கேட்டால் ஒரே வரியில் பதில் சொல்லிவிடலாம். பக்குவமான நிர்வாகம் ஜெயிக்கிறது. பதற்றமான நிர்வாகம் தோற்கிறது. நம் கையை மீறி வெளி சக்திகள் சில மாற்றங்களை ஏற்படுத்தும்போது பதறாமல் இருக்க முடியுமா? இது ...
7. யாருக்குத் தோல்வி வரும்?
ஒருபுறம் புதிய புதிய தொழிலகங்கள் தொடங்கப்படுகின்றன. மறுபுறம் சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இதற்கு என்னதான் வெளிச்சூழல்கள் காரணமாக இருந்தாலும், அந்தத் தோல்விக்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டியது, அதன் நிர்வாகம்தான். நிர்வாகக் குறைபாடுகள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டு ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. பொதுவாக, ஒரு நிறுவனம் வீழ்ச்சியடைவதற்கு என்னவிதமான நிர்வாகம் காரணமாக இருக்கும் என்று தெரிந்துகொள்வது அவசியம். புத்தாயிரத்தின் ஆரம்பத்தில் பல தொழில் வல்லுநர்கள் கூடி இந்த நூற்றாண்டுக்கான நிர்வாக மறுமலர்ச்சி பற்றி விபரமாக ...
6. உயர்த்தும் உறவுகள்
எந்த ஒரு நிறுவனத்திலும் தொழில் நுட்பச் சிக்கல்களைக் கையாள்வதைவிட முக்கியம் மனித உறவுகளைக் கையாள்வது என்றார் லீ இயகோகா. பணிபுரியும் இடங்கில் மனித உறவுகள் என்பவை இருவகை. பணியிடத்தில் உள்ள சக பணியாளர்களுடனான உறவு, வாடிக்கையாளர்களுடனான உறவு. இதில் சக பணியாளர்களுடனான உறவு சிதைந்தாலும் சீர் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் உடனான உறவு சிதைந்தால் அவரை இழக்க வேண்டியதுதான். அதனால்தான் பொறியாளரான லீ இயகோகா தொழில் நுட்பச் சிக்கல்களைக் காட்டிலும் மனித உறவுகள் இடையிலான சிக்கல்தான் சீர் ...
5. பங்குதாரர்களின் பங்கு
பங்குதாரர்கள் பலரும் சேர்ந்து நடத்தும் நிறுவனங்களில், அவரவர் ‘பங்கு’ என்பது பணத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஓட்டப் பந்தய வீரரின் உடலுள்ள ஒவ்வோர் உறுப்பும் ஓடுவதற்கு உதவுவதை கவனித்திருப்பீர்கள். ஓடுவது கால்களின் வேலை என்று கைகள் சும்மாயிருப்பதில்லை. அவை மடங்கி, முறுக்கோடு காற்றைக் கிழித்து விசையைக் கூட்டுகின்றன. கண்கள் இலக்கு நோக்கிக் குவிகின்றன. இந்தப் பங்கேற்பு மனோநிலை பங்குதாரர்களுக்கு மிகவும் முக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை இருந்தாலும் முழுமையான வளர்ச்சிக்காக ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டியது அவசியம். பங்குதாரர்கள் கூட்டம் ...
4. கூட்டாக செயல்படுங்கள்!
தொழிலதிபர்களின் கூட்டமைப்பு, தொழில் முனைவோரின் கூட்டமைப்பு போன்றவையெல்லாம் உலகுக்குப் புதியதல்ல. இந்தியாவிலும் இத்தகைய அமைப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், ஒரு தேசத்தில் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கிற சக்தியுடனும் செயல்திறனுடனும் செயல்பட்டன. அவை தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அந்த தேசத்தின் தொழிலுகத்தையும் அதன் போக்கையுமே தீர்மானித்தன எனலாம். இது நிகழ்ந்த நாடு எதுவென்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஆம்! ஜப்பான்தான். இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பு உருவான அந்தக் கூட்டமைப்புக்கு ஸைய்பட்சு என்று பெயர். மிடசூயி, சுமிடோமோ, மிட்சுபூஷி, யசுடா போன்றவை ...