Blog

/Blog

4. கூட்டாக செயல்படுங்கள்!

தொழிலதிபர்களின் கூட்டமைப்பு, தொழில் முனைவோரின் கூட்டமைப்பு போன்றவையெல்லாம் உலகுக்குப் புதியதல்ல. இந்தியாவிலும் இத்தகைய அமைப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், ஒரு தேசத்தில் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கிற சக்தியுடனும் செயல்திறனுடனும் செயல்பட்டன. அவை தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அந்த தேசத்தின் தொழிலுகத்தையும் அதன் போக்கையுமே தீர்மானித்தன எனலாம். இது நிகழ்ந்த நாடு எதுவென்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஆம்! ஜப்பான்தான். இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பு உருவான அந்தக் கூட்டமைப்புக்கு ஸைய்பட்சு என்று பெயர். மிடசூயி, சுமிடோமோ, மிட்சுபூஷி, யசுடா போன்றவை ...

3. எது நல்ல நிர்வாகம்?

நவீன மாற்றங்கள் எல்லாம் நிர்வாகத்தின் பரப்பளவை வளர்த்துக்கொண்டே போகிற யுகத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு நிர்வாகிக்கு, பன்முக ஆற்றல் இருந்தால் மட்டுமே, அவரும் நிறுவனமும் நீடிக்க முடியும். நிர்வாகிக்கு வேண்டிய ஆற்றல் என்னவென்று யாரையாவது கேட்டால், “நிர்வாகத் திறமை” என்று ஒரே வார்த்தையில் சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, “தனக்குத் தெரியாத துறைகளையும் நிர்வகிப்பதே நல்ல நிர்வாகம்.” அதற்கு அர்த்தம், தன் அலுவலகத்தில் எல்லாப் பிரிவுகள் குறித்தும் அவருக்கு ஏதாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக, வரவு ...

2.விருப்ப ஓய்வு – சில விபரங்கள்

இந்தியாவில், இது வி.ஆர்.எஸ். காலம். அரசு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் நாடெங்கும் விருப்ப ஓய்வு அமலுக்கு வந்திருக்கிறது. நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பு ஓய்வு பெறும் அலுவலர்கள் மற்றும் வேறு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் அலுவலர்கள் அனைவரும் சில குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும். விருப்ப ஓய்வுக்குப் பிறகு வேலைக்குப் போவது என்று நீங்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஏன் வேலைக்குப் போக விரும்புகிறீர்கள் என்பதை ஒரு காகிகத்தில் எழுதுங்கள். அ) பொருளாதாரத் தேவைகளுக்கு ஆ) சும்மா ...

1. முக்கிய முடிவுகள் எடுப்பது எப்படி?

நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், முடிவுகள் எடுப்பதுதான். நிறுவனத்தின் வணிக நிலை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் சில யூகங்களை செய்து நிர்வாகி தனிமனிதராக சில சமயம் முடிவுகள் எடுப்பதுண்டு. இது மிகவும் பழைய முறை. நிறுவனம் பெரிதாக வளர வளர பலரும் சேர்ந்து கூட்டு முடிவுகளை எடுக்கும் சூழல் ஏற்படுவதுண்டு. இதற்கென்று சில நவீன அணுகுமுறைகள் ஏற்பட்டன. அ) ஒவ்வொரு துறையின் தலைவரும், தங்கள் துறையின் உத்தேசமான செயல்திட்டத்தை முன்கூட்டியே வழங்குவது இந்த உத்தேச செயல் ...

38. ஏன் வேண்டும் உற்சாகம்?

வாழ்வில் உற்சாகமாய் இருங்கள் என்று சுய முன்னேற்ற நூல்கள் சொல்கின்றன. சூப்பர் வைஸரும் சொல்லுகிறார். நண்பர்களும் சொல்கிறார்கள். நடிகர்களும் சொல்கிறார்கள். யார் சொல்கிறார்களோ இல்லையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் தவறாமல் சொல்கிறார்கள். சொல்பவர்கள் சொல்லட்டும். முதலில் நீங்கள் முடிவெடுங்கள். நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டியது யாருக்காக? உங்கள் ஊக்கத்தை தூக்கி நிறுத்துவது யாருக்காக? நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஆதாயத்திற்காகவா? உற்சாகமாய் நீங்கள் சொல்லும் ஜோக்குகளால் உங்களுடன் இருப்பவர்களுக்கு செலவில்லாமல் பொழுதுபோகவா? உங்கள் உற்சாகம் யாருக்காக? ...

37. கடவுளும் நீங்களும்

1. கடவுளுக்கும் உங்களுக்கும் நடுவே இடைவெளி விழுந்ததாய்க் கருதுகிறீர்களா? அப்படியானால் ஒன்று மட்டும் உறுதி. நகர்ந்து போனது நீங்களாகத்தான் இருக்கும். 2. காரியங்களைச் செய்ய கடவுளின் துணையைக் கேளுங்கள். ஆனால் அவரே எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்று எண்ணாதீர்கள். 3. அடிப்படை விஷயங்களில்கூட அலட்சியமாய் இருந்துவிட்டு, பிறகு கடவுளின் மீது பழி போடாதீர்கள். கடவுளை நம்புங்கள். ஆனால் கார்க் கதவைப் பூட்டுங்கள். 4. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அது கடவுள் உங்களுக்குத் தந்த பரிசு. நீங்கள் என்னவாக ஆகிறீர்களோ, ...
More...More...More...More...