Blog

/Blog

யமுனா நதிக்கரையில்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… இத்தனை உயரமா பிரிவின் துயரம்! அன்பின் பரப்புதான் எத்தனை அகலம்! இரண்டு மனங்களில் எழுந்த காதல் இன்னோர் இமயம் எழுப்பி முடித்ததே! காதலிக்காக ஷாஜஹான் வடித்த கண்ணீர் இங்கே கல்லாய்ச் சமைந்ததே! மனசை இழைத்து மாடங்கள் சமைத்தான்! வயசைத் தொலைத்த விந்தை படைத்தான்! கல்லை முதல் உளி முத்தமிட்டதுமே கல்லறைக்குள் அவள் கண்கள் விழித்தாள்; பார்வையில் தாஜ்மஹால் பருகியபடியே ஈர நிலாவுக்குள் இருக்கிறாள் மும்தாஜ்; யமுனா நதியின் மௌனப் பிரவாகம், அனாதை ...

சிகர வெளிகளில்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… தலை தடவும் மேகம்; தொடுந்தொலைவில் வானம்; மலைகளெங்கும் மோனம்; மனம் முழுதும் ஞானம்; கண்கள் மெல்ல மயங்கும், கனவுகளின் மடியில்; விண்ணளந்த மனமோ கவிதைகளின் பிடியில்; உலகிலிதுதானே உயரமான உறவு சிகரம் சென்று காணும் துறவு என்ன துறவு? மைகுழைத்த வானம் மௌனமொழி சொல்லும் கையசைத்துக் கொண்டே கதிர் உறங்கச் செல்லும்; பூமலரும் விசையில், பனியிறங்கும் தரையில்; பூமியெங்கும் நிறையும், வான்மறையும் வரையில்; அம்புலி நிலாவில் வரும் அந்த பனிக்காற்று கம்பளியைத் ...

கனவுகள்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… பிடிக்கக் கூடிய தொலைவில் ரயிலை விட்டு விட்டதாய் வருகிற கனவுகள்; உணர்ச்சிப் பிழம்பாய் உரையன்று நிகழ்த்த மைக் பிடிக்கும் முன் முடிகிற கனவுகள்; இனம்புரியாத ஏதோ ஒரு கனம் பலம்கொண்ட மட்டும் பாறையாய் நசுக்க கலவரம் முற்றிக் கத்தும் முன் – இது கனவென்று புரிந்து கலையும் கனவுகள்; கனவில் மலம் வந்தால் பணம் வரும் என்று கண்ணதாசன் சொன்னது போலவே அடுத்த நாளின் ஆதாயத்தை அறிவிக்க வருகிற அசுத்தக் கனவுகள்; ...

கடைசித் தகவல்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சில்வண்டுகளின் சிணுங்கலில் உள்ளது கடவுள் அனுப்பிய கடைசித் தகவல்! நீங்களும் நானும் உறங்கும் பொழுதில் நிசப்தம் அதனை உற்றுக் கேட்கும்; தகவலினூடே தெறிக்கும் குறும்பில் ககனம் சிரிக்கும் கண்கள் மினுங்க; “ரீட் ரீட் ரீட்” எனும் சங்கேதத்தில் தாவரங்களுக்குத் தரும் குறிப்புகளில் மறுநாள் விடியல் நிர்ணயமாகும்! பூமி வழியாய் ஒவ்வொரு நாளும் பயணமாகிப் போகும் இரவின் பாதை சரியென உறுதி செய்யவே கேட்கும் இந்தச் சில்வண்டுச் சத்தம். உறங்காதிருக்கும் முனிவர்களுக்கு அர்த்த ...

வேறு கூடாரம்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சர்க்கஸ் வந்தாலே யானைகள்தான் என் நினைவில் வந்து நெஞ்சைப் பிழியும்; ஆகிருதிக்குப் பொருந்தி வராத செய்கைகள் புரிபவை சர்க்கஸ் யானைகள்; பிளிறல் மறந்த சதை எந்திரமாய் வரிசையில் வந்து வணக்கம் சொல்லும்; கைக்குக் கிடைத்த மரங்களை இழுத்துத் துவம்சம் செய்யும் துதிக்கை சுருக்கி, ஹாண்டில் பாரைப் பற்றிக் கொண்டு அவஸ்தை அவஸ்தையாய் சைக்கிள் ஓட்டும்; தயாராய் இருக்கும் சிவலிங்கம் மேல் தும்பிக்கையால் தண்ணீர் தெளிக்கையில் குன்றினில் பாயும் அருவியில் குளித்த கன்றுப் ...

இசைபட வாழ்தல்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… பிசகாத இசையின் பிரசவ அறைக்குள் அலையும் காற்றுக்கு அனுமதியில்லை; குழலில் இருந்து குதிக்கும் நதியை வீணையிலிருந்து வெளிவரும் அருவியைக் கைது செய்த கருவியின் கர்வங்கள் விசையை அழுத்தும் விநாடி வரைதான்; கிராம போன்களின் காலம் தொடங்கி குறுந்தகடுகளின் காலம் வரையில் மாயச் சுழலில் மையம் கொண்டுதான் பூமியை அளக்கப் புறப்படும் இசை; மெல்லிய முள்ளின் துல்லியக் கீறலில் அபூர்வ கணங்கள் ஆரம்பமாகும்; சுழலத் தொடங்கிய சிற்சில நொடிகளில் சிறகு விரித்துக் காற்றில் ...
More...More...More...More...