Blog

/Blog

இணையதளம்

திரைப்படம் என்பது கனவுகளின் கட்டமைப்பு. இதையே வேறுவிதமாய் சொல்வதெனில், திரைப்படம் என்பது கனவுகளின் கட்டமைப்பு. ஒரே திரைப்படத்திற்கு எத்தனையோ வடிவங்கள் உண்டு. திரைக்கதை உருவாகிறபோது அதற்கொரு வடிவம். பின்னர் வசனங்கள் எழுதப்படும் போது வசனகர்த்தாவின் மனதில் அதற்கொரு வடிவம் இயக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு வடிவம். இசையமைப்பாளர்களின் பின்னணி இசைச் சேர்ப்பில் ஒரு வடிவம். திரைப்படத்தை எடிட் செய்யும் மேசையில் ஒரு வடிவம். குரல்களைச் சேர்க்கும் ஒலிக்கலவையில் ஒரு வடிவம். இதில் விஷயம் என்னவென்றால், இத்தனைக் கலைஞர்கள் ...

இணையதளம்

நான் முழுதாய் பங்கேற்கும் முதல்படம் இந்தப் படத்தின் தலைப்புப் பாடலை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். இணையம் என்னும் வசீகர வாய்ப்பு வானளவு வளர்வதற்கும் துணையாகிறது வேலையைக் கெடுத்து, பொழுது விரயமாக்கவும் காரணமாகிறது. இது அவரவர் மனப்பாங்கு சார்ந்தது. எனவே, தலைப்புப் பாடலில், இணையத்தின் நிறைகளையும் குறைகளையும் சமமாகப் பட்டியலிட்டிருப்பேன். “சுருங்கிப் போனது பூகோளம் சுறுசுறுப்பானது பூலோகம் விரல்களின் நுனிகளில் வையகம் முழுவதும் அடங்கிவிடும் அரசியல் சினிமா சங்கீதம் அரட்டை அசிங்கம் ஆன்மீகம் எல்லாம் ...

இணையதளம்

நான் முழுதாய் பங்கேற்கும் முதல் படம் இளம் வயதிலேயே புகழ்ப்பாதையில் வளர்ந்து வரும் இளைஞர் அரோல் கரோலி, படத்திற்கு இசையமைக்கிறார் என்பதை இயக்குநர் சங்கர் சொல்லியிருந்தார். பிசாசு படம் வண்ணத்திரையுலகில் அவர் மேல் வெளிச்சம் பாய்ச்சியிருந்தது. அருள்முருகன் என்ற பெயர் அரோல் கரோலி ஆகியிருந்தது. மிகச்சிறந்த வயலின் கலைஞர் என்றும் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன். மலேசியாவில் வெளியான என் 60 வது நூலாகிய “இணைவெளி” கவிதைத் தொகுப்புக்கு சிஸ்மான்டெக் திரு.வெங்டேஷ், வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாவட்டச் செயலாளர் ...

இணையதளம்

(நான் முழுதாய் பங்கேற்கும் முதல் படம்) இணையதளம் திரைப்படத்தில், காதல் உண்டு, நகைச்சுவை உண்டு, அதிரடி சண்டைக் காட்சிகள் உண்டு. குற்றங்கள் நடைபெறுவதும், குற்றவாளிகளைக் கண்டறிவதுமான உத்திகள் உண்டு. ஆனால், உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் இது முற்றிலும் புதுமையான படம். இந்தப் படத்திற்கு யார் கதாநாயகன்? யார் கதாநாயகி? என்று நண்பர்கள் கேட்டபோது சொன்னேன். “இந்தப் படத்தில் முதன்மைப் பாத்திரங்கள் உண்டு. கதைதான் கதாநாயகன். கதைதான் கதாநாயகி”. தொடக்கவிழா பூஜையையட்டி சில காட்சிகள் எடுக்கப்பட்ட பின்னர், ஒரு மாத ...

இணையதளம்

நான் முழுமையாய் பங்கேற்கும் முதல்படம்!! கனவுத் தொழிற்சாலையின் கரையோரம் நின்று பார்த்த அனுபவம் நிறைய உண்டு. கஸ்தூரிமான் திரைப்படத்தில் நடித்து, “காமரா முன்னால் கூட நடிக்கத் தெரியாத அளவு நல்ல மனிதர்” என்று பெயர் வாங்கிய பெருமையும் உண்டு. வேறு சூழல்களுக்கு எழுதிய பாடல்கள், “இன்னிசைக் காவலன்” திரைப்படத்திலும், பிறகு “கரிசல் மண்” என்ற படத்திலும் இடம்பெற்ற பிறகு திரை அனுபவம் ஏதும் பெரிதாய் ஏற்படவில்லை. அது ஒரு தனி உலகம். அதற்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் பலர். ...

மனிதன் சமூக விலங்கென்றால்…சமூக ஊடகங்கள் மிருகக் காட்சி சாலைகளா-?

பிறரால் கவனிக்கப்படவேண்டும் என்னும் எண்ணம் எல்லோருக்குமே உண்டு. பிறந்த குழந்தையின் முதல் அழுகை கூட “இங்கே நான் இருக்கிறேன்” என்னும் கவன ஈர்ப்புத் தீர்மானம் தானே! இந்த உந்துதல் எல்லோருக்கும் இருக்கும் என்றாலும் கூட ஃபேஸ்புக் வாட்ஸப் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் உருவான பிறகு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விருப்பம் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது. ஃபேஸ்புக் வட்ஸப் டிவிட்டர் போன்றவை சமூக வலைத்தளங்கள் என்று சொல்லப்பட்டாலும் அவை இன்று தனிமனிதர்களின் தகவல் சாதனங்களாகத்தான் உள்ளன. ...
More...More...More...More...