Blog

/Blog

வாழ்த்து வழிப்பறி

ஃபேஸ் புக் இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் பலவற்றிலும் ஓர் உத்தி பின்பற்றப்பட்டு வருகிறது. பார்க்கப் பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் குழந்தைகள் அல்லது அனுதாபத்துக்குரியவர்கள் புகைப்படங்களை போட்டு இவர்களுக்கெல்லாம் ஒரு லைக் கிடைக்காது என்கிற ஆதங்க வரியோடு சில பதிவுகளைப் பார்ப்பீர்கள். அல்லது லைவ் ஷோ நிகழ்ச்சிகளில் நன்றாக பாடக்கூடிய குழந்தைகள் புகைப்படங்களை போட்டு இவருக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே என்கிற வாசகத்தை பார்ப்பீர்கள் யாருக்கெல்லாம் இவருடைய பாடல் பிடிக்கும் ஒரு லைக் போடுங்கள் அல்லது ஒரு ...

மாணவக் கடலின் கரையோரம்…

DG வைஷ்ணவா கல்லூரி என்றால் சென்னையில் மிகவும் பிரசித்தம். அதன் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். தீக்ஷாரம்பம் என்ற பெயரில் நடந்த இந்த விழாவுக்கு முதல் நாள் இரவே கல்லூரி வளாகத்தில் சென்று தங்க நேர்ந்தது. பொதுவாக விழா நடக்கும் வளாகத்தை விட வெளியில் தங்குவதை நான் பெரிதும் விரும்புவேன். ஆனாலும் இந்த முறை அந்த அழைப்பை நான் தவிர்க்க விரும்பவில்லை. ஏனென்றால் கல்லூரியின் முதல்வர் கேப்டன் டாக்டர் சந்தோஷ் பாபு என் கல்லூரி ...

இந்திரசித்தனும் இந்திய இளைஞனும்

மரபின் மைந்தன் முத்தையா(18.07.2024 அன்று புதுக்கோட்டை கம்பன் விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்) 32 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருவி மணியன் அவர்கள் கம்பன் காட்டும் இந்திரசித்தன் என்கிற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின் பின்னட்டையில் பதிப்பிப்பதற்காக என்னிடம் ஒரு கவிதை கேட்டிருந்தார். பொதுவாக தாயும் தந்தையும் வாழ்கிற காதல் வாழ்வின் விளைவாக ஒரு மகன் பிறப்பான். ஆனால் தந்தை ராவணன் கொண்ட பொருந்தாத காமத்தால் இந்திரசித்தன் இறந்தான்.ஒரு சிப்பி கிழிந்து முத்து வெளிப்படும். ஆனால் இந்திரசித்தன் ...

ஏமாறும் கலை- யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகரின் சிறுகதைத் தொகுப்பாகிய “ஏமாறும் கலை” வாசித்துக் கொண்டிருந்தேன்.   சுவாரசியமான சிறுகதைகள். நுட்பமான சித்தரிப்புகள். சில இடங்களில் வெடித்துச் சிரிக்க வைக்கும் சம்பவங்கள். இறந்தவர்களின் ஆன்மா இறங்கும் மீடியமாக மீடியம் என்கிற சொல் புழங்காத ஒரு பகுதியில் குப்பம்மா என்கிற பெண் இதில் காட்டப்படுகிறார். எம்ஜிஆர் புதிதாக தொடங்கிய கட்சி சார்பாக மாயத்தேவர் தேர்தலில் நிற்கும் போது எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ய புறப்படுகிறார்கள். அந்த சைக்கிள் பேரணியை எதிர்கொண்டு ...

சிவபுரம் ஆன விஷ்ணுபுரம்

கோவை பகுதியில் அஜிதன் திருமணத்திற்கு அழைப்பிதழ் தர போன இடங்களில் எல்லாம் நண்பர் நடராஜன் அனைவரையும் கைகூப்பி அழைத்ததாகவும் தான் வெறுமனே வழிமொழிந்ததாகவும் ஜெயமோகன் எழுதியிருந்தார். ஆனால் எங்கள் அலுவலகம் வந்த போது கூடுதலாக ஒன்றைச் செய்தார். விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு சைவத் திருமுறைகள் வகுப்புகள் எடுக்க அழைப்பு விடுத்தார். ‘ஈரோட்டுக்கு பக்கத்துல ஒரு இடம் இருக்கு இல்ல… அங்கதான் நடக்க போகுது” என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னார். அப்போது நான் அப்பாவியாய் நம்பி விட்டேன். அவருடைய அகராதியில் ...

ஒரு துளி ஞானம்- விஷ்ணுபுரம் விழாவில் ஒரு விவாதம்

தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த கூடுகை கொண்டாட்டம் கருத்தோட்டம் என எத்தனை சொன்னாலும் அத்தனைக்கும் பொருந்துகிற திருவிழாவாக வளர்ந்து நிற்கிறது விஷ்ணுபுரம் விருது விழா. தனக்காக கூடும் வாசகர்களை தமிழ் இலக்கியத்தின் முன்னைப் பெருமைக்கும் பின்னைச் சிறப்புக்கும் ஆளாக்கும் அரிய பணியை ஜெயமோகன் தொடர்ந்து செய்து வருகிறார். 2023ல் விருது பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான யுவன் சந்திரசேகர் விருது பெறுவதற்கு முன்பு வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டார். விதவிதமான கேள்விகள் அரங்கில் எல்லா பகுதிகளில் இருந்தும் மேடை நோக்கி ...
More...More...More...More...