வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

கருத்து வேறுபாடு கொண்டவர்களெல்லாம் எதிரிகளல்லர். உங்களை வீழ்த்த நினைப்பவர்களே எதிரிகள். உங்கள் தனித்தன்மையோ திறமையோ அவர்களின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதாய் எண்ணுவதாலேயே உங்களுக்கு அவர்கள் எதிரிகள் ஆனார்கள்.

அவர்கள் உங்களை வீழ்த்தாமல் அவரவர் திறமையிலேயே வெல்ல முடியும் என்கிற உண்மை தெரியாததால் அவர்கள் உங்கள் எதிரிகள்.

தங்களை வளர்த்துக்கொள்ளும் சின்னஞ்சிறு வழி அவர்களுக்குத் தெரிந்தாலும் அவர்கள் உங்களை எதிர்ப்பதை விட்டு விட்டு, தங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள்.

உங்களால் முடிந்தால், அவர்கள் சிறிய வெற்றிகள்பெற மறைமுகமாய் உதவுங்கள். சுயமாய் வெற்றியை சுவைத்தவர்கள் அடுத்தவர்களை எதிரியாய் நினைக்கும் மனோபாவத்தை விட்டு வளரத் தொடங்குவார்கள்.

எதிரிகள் வெல்ல இடம் கொடுப்பதன் மூலம், உங்கள் வெற்றியை நீங்கள் உறுதி செய்து கொள்கிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *