25
பாயும் திறத்தில் பகை வெல்லும் வீரத்தில்
ஆயுதம் வேல்போலே ஆகுமோ_சேயவன்
வண்ணக் கரத்தில் வதியும் சுடர்வேலை
எண்ணக் கெடுமே இடர்.

26
தாருகன் வீழத் தனிமலையும் தூளாக
வாரிக் கடல்குடித்த வெற்றிவேல்_சூரனின்
யாக்கை கிழித்தும் இறவாப் பெருநிலை
ஆக்கும் அருளாய வேல்

27
புலவர் சிறை மீட்கப் பாய்ந்தவேல் தீயோர்
குலமழியக் காய்ந்தவேல் கந்தன்_சிலையாகத்
தோன்றாத் தலத்திலும் தான்தோன்றி நின்றவேல்
ஆன்றவிந்தோர் போற்றுமயில் வேல்

28
முருகா எனவழைத்தால் முந்தி வரும் வேல்
ஒருகாவல் ஆகும் உயிர்வேல் _இருகால்கள்
பற்றி முருகன் பணிஎன்று வாழ்வோர்க்கு
சுற்றமாய் நின்றசுடர் வேல்.

29
சித்தர் உறுதியும் செய்கிரியை ஊக்கமும்
பக்தர் குழைவும் பொருந்தியே_முக்தி
தரவல்ல சாதனமாய் தானிருக்கும் வேலே
வரமெல்லாம் நல்குவடி வேல் .

30
கந்தன் திருவுளத்தே கொள்ளும் கருத்தறிந்து
அந்த நொடியினில் ஆக்கும்வேல் -வந்தனை
செய்வார் வழிஎங்கும் செல்லுந் துணையாகி
உய்ய வழி காட்டுமொளி வேல்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *