காற்று வீசுது
காற்று வீசுது உன் பக்கம் – நீ கண்கள் மூடிக் கிடக்காதே! நேற்றின் தோல்விகள் போகட்டும் -இந் நாளை இழந்து தவிக்காதே! பொறுமைத் தவங்கள் முடிகையிலே – நீ புதிய வரங்களை வாங்கிவிடு! உரிமை உள்ளது, அதனாலே – உன் உழைப்புக்கு ஊதியம் கேட்டுப்பெறு! வாள்முனைத் தழும்புகள் இல்லாமல் – ஒரு வீரனின் தோள்களில் அழகில்லை தோல்வியின் சுவடுகள் இல்லாமல் – உன்னைத் தொடுகிறவெற்றியில் சுகமில்லை! கானல் நீரை மறந்துவிடு – உன் கைகளில் தண்ணீர்க் குவளையெடு ...
நானொரு வழிப்போக்கன்
நானொரு வழிப்போக்கன்- ஆமாம்! நானொரு வழிப்போக்கன் வாழ்வின் நீண்ட வெளிகளை எனது பாதங்கள் அளந்து வரும் பாதையில் மாறிடும் பருவங்களால் ஒரு பக்குவம் கனிந்து வரும். பக்குவம் கனிந்து வருவதனால் ஒரு இலட்சியம் பிறந்து விடும்! இலட்சியம் பிறந்த காரணத்தால் – இனி நிச்சயம் விடிந்து விடும்! யாதும் ஊரே என்றொரு புலவன் பாடிய மொழி கேட்டேன். சாதனை யூருக்குப் போவது எப்படி? அவனிடம் வழி கேட்டேன்-! தீதும் நன்மையும் நாமே புரிவது தெரிந்தால் நலமென்றான். நீதான் ...
ஒளி பரப்பு!
நேற்றைய மழைத்துளி காயவில்லை – அது தாவர வேர்களில் நுழைந்திருக்கும் நேற்றைய கதிரொளி போகவில்லை – அது நேற்றின் செயல்களில் நிறைந்திருக்கும் நேற்றைய சருகுகள் மறையவில்லை – அவை நிச்சயம் பூமியில் கலந்திருக்கும் நேற்றைய கனவுகள் மறையவில்லை – அவை நாளைய செயல்களில் மலர்ந்திருக்கும் பேசிய வார்த்தைகள் மறைவதில்லை – அவை பழியோ புகழோ கொண்டுதரும் வீசிய விதைகளும் அழிவதில்லை – அவை விளைந்து வளர்ந்து வடிவம்பெறும் ஊசியில் ஒட்டகம் நுழைவதில்லை – நம் உயர்ந்த இலட்சியம் ...
தாங்கிக்கொள்
பூக்கும் வரையில் அரும்பின் நறுமணம் பூமிக்குத் தெரியாது! ஊக்கம்கொண்டவன் உன்மனக் கனவுகள் ஊருக்குப் புரியாது! கருவறைக்குள்ளே குழந்தை வளர்வது கடவுளின் ரகசியம்தான்! தருணம் வரும்வரை பொறுமை காப்பது கனவுக்கும் அவசியம்தான்! எத்தனை காலம் பிடிக்கும் என்பதை எழுதிப் பார்த்துக்கொள்! எத்தனை இகழ்ச்சி! எத்தனை ஏளனம்! எல்லாம் தாங்கிக்கொள்! உன்னைக் காலம் உயர்த்திப் பிடிக்க ஒருநாள் விடிந்துவிடும்! பொன்னை வாட்டிய நெருப்பும் ஓய்ந்திட புத்தொளி பிறந்துவிடும்! நீயா என்று ஊரே வியந்திடும் நாளுக்கு காத்திருநீ! நீயார் என்று நீயே ...
பறந்துவிடு
வானவெளியில் பறவைக்கு வேலை எதுவும் கிடையாது! ஆன பொழுதும் பறக்கிறதே அது போல் நமக்கேன் முடியாது? கூடு இருப்பது மரக்கிளையில் கொள்ளும் தானியம் சமவெளியில் பாடித் திரிந்து பறப்பதெல்லாம் பரந்து கிடக்கிற வான்வெளியில்! வாழ்க்கை பூமியில் நிகழ்ந்தாலும்& வான்வரை நீளுக உன் இலக்கு! தாழ்ந்த எண்ணங்கள் துரத்திவிடு திசைகள் எட்டும் இனிஉனக்கு! சின்னக் கவலைகள் மறந்துவிடு சிறகுகள் வீசிப் பறந்துவிடு! உன்னை நீயே கடந்துவிடு உயரம் தொட்டபின் கரைந்துவிடு! ...
மனம்தான்…
மூளை தலைமைச் செயலகம் என்றால் மனம்தான் கருவூலம்! நாளைய வரவும் நாளைய செலவும் இன்றே முடிவாகும்! கண்கள் உளவுத் துறையாய் ஆனால் மனம்தான் காவல்துறை! எண்ணங்கள் நடுவே தீமைகள் புகுந்தால் எழட்டும் அடக்குமுறை! தோள்கள் இரண்டும் இராணுவம் என்றால் மனம்தான் ஆணையிடும்! வாள்கள் உருவிய விநாடியில் உனக்குள் விவேகம் வேகம் பெறும்! கால்கள் நடையிடும் காலத்தில் எல்லாம் மனம்தான் வழிகாட்டும்! போகும் இடமெது பாதை இனியெது அதுதான் திசைகாட்டும்! மனிதா நீயரு கணையென்று சொன்னால் மனம்தான் அம்பாகும் ...