அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
என்னதான் படித்திருந்தாலும் பொருளாதாரம் இருந்தாலும் ஒரு காலத்தில் மனதில் விரக்தி வருகிறது. இன்றைக்கு சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களிடம் உள்ள அளவிற்கு பணம் யாரிடமும் கிடையாது. ஆனால் அங்கே தற்கொலை எண்ணிக்கை அதிகம். அதீத கல்வி, அதீத பணம் சிலர் மனங்களை மிகவும் பலவீணமாக்கி விடுகிறது. மன அழுத்தம் உடையவர்களாக மாற்றி விடுகிறது. நாம் தேடிப்பெற்ற செல்வங்களே நமக்கு எதிரியாக மாறாமல் அதைக் கையாளுகிற ஆற்றலை அபிராமி நமக்குத் தருகிறாள். நிறைய பணம் வைத்திருப்பவர்களை முதலாளி என்றும் வேலை ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
இந்த பாடலில் ஐந்து பூதங்களைச் சொல்லத் தொடங்குகிறார் அபிராமி பட்டர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். வெங்கால் என்றால் வெப்பமான காற்று. இந்த ஐம்பூதங்களிலும் பரவும் மணமாகவும் சுவையாகவும் ஒளியாகவும் அபிராமி நிற்கிறாள். நிலத்தில் அழகு தோன்றுகிறது. தண்ணீரில் சுவையும் இருக்கிறது. சுவை மிக்க பொருட்கள் விளைய நிலமும் தண்ணீரும் ஆதாரம். கனலில் ஒளி இருக்கிறது. இந்த அம்சங்கள் ஆகாயத்திலும் படர்கின்றன. ஆகாயத்திலிருந்தும் தண்ணீர் தரைக்கு வருகிறது. கதிரொளியும் நிலவொளியும் கண்ணுக் கழகாய் தெரிகின்றன. முதன் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
தனங்களெல்லாம் தருவாள்! அம்பிகையை தோத்திரம் செய்யாதவர்கள், அம்பிகையை வணங்காதவர்கள், அம்பிகையின் தோற்றத்தை ஒரு மாத்திரை அளவாவது மனதிலே வைக்காதவர்கள் பெரிய வள்ளல் பரம்பரையில் பிறந்திருந்தாலும், நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும், நிறைய படித்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும் அவையெல்லாம் பயனில்லாமல் குன்றிவிடும். அவர்கள் பிச்சை எடுக்க நேரும் என்கிறார் அபிராமி பட்டர். சிலருக்கு வறுமையிருக்கிறதென்றால் அவன் தவம் செய்யவில்லை. அதுதான் காரணம் என்கிறார் திருவள்ளுவர். “இலர் பலர் ஆகிய காரணம் நோற்றார் சிலர் பலர் நோவா தவர்” ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
தன்னை எவ்வளவு தூரம் தாழ்த்திக்கொண்டு அம்பிகையின் திருவடிகளிலே விண்ணப்பிக்கிறார் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்த அடையாளம். அபிராமியைப் பார்த்து பட்டர் கூறுகிறார், “தங்க மலையாகிய மேருவை சிவபெருமான் வில்லாக வளைத்துக்கொண்டு சென்றாலும் உடனிருப்பவள் நீ. உன் திருவடிகளின் துணையில்லாமல் எந்தத் துணையும் இல்லாத மிகச்சிறியவன் நான். உன்னைப் பற்றி கர்ம வினைகளின் பிடியில் உள்ள நான் எழுதிய பாடல் மிகவும் தாழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும்கூட உன் திரு நாமங்கள் இந்தப்பாடலில், இருப்பதால் இதனை நீ ஏற்கலாம். தவறில்லை” ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
இறக்கும் முன்பா எரிப்பது? சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த லோகம் பார்க்க, வானம் பார்க்க, மேலுலகம் பார்க்க எரித்தார். சர்வ லோகங்களின் சாட்சியாக சம்ஹாரம் நடந்தது. இதில் ஒரு சிறிய வேடிக்கை செய்கிறார் அபிராமி பட்டர். தவமே வடிவாகிய பெருமான் மன்மதனை தகனம் செய்தார். பொதுவாக ஒரு ஆள் செத்த பிறகுதான் தகனம் செய்வார்கள். இவர் அம்பு போட வந்தபோதே எரித்துவிட்டார். அங்கத்தை எரித்தார்; அவன் அரூபமாகப் போனான். “தகனம் முன்செய்த தவப்பெருமான்” என்கிறார் அபிராமி பட்டர். ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
தெய்வங்களின் தலைவி! கால்நடைகளைப் பிணைப்பதற்கு மரக் கட்டைகளை தறி செய்து தரையில் அடித்து வைப்பார்கள். அதில் மாடுகளைக் கட்டி வைப்பார்கள். அந்தத் தறியைக் கொண்டு போய் மலையில் வைத்து அடித்தால் இறங்குமா? மரக்கட்டை மலைக்குள் இறங்காது. ஒரு நல்ல பாதையை வீணான ஆட்களுக்குச் சொல்வது என்பது மலையிலே போய் இந்தத் தறியை அடிப்பதுபோல் என்கிறார் பட்டர். பசுக்களை பிணைக்ககூடிய நடு தறியை சிவனாக வழிபடுவது வழக்கம். நடு தறி அப்பர் என்றே பெருமான் இருக்கிறார். இந்த உயிராகிய ...