அதுவே போதும்
( திருமதி சித்ரா மகேஷ் கேட்டுக் கொண்டபடி அமெரிக்க நண்பர்கள் வெளியிடும் திருவள்ளுவர் மலருக்கு அனுப்பிய கவிதை) என்னென்ன ஐயங்கள் எழுந்த போதும் எதிர்பாரா நிகழ்வுகளில் அதிர்ந்த போதும் தன்னிலையே அறியாமல் துவண்ட போதும் தயக்கங்கள் மனதுக்குள் திரண்ட போதும் பொன்னென்றும் மண்ணென்றும் பதைத்த போதும் பொறுப்புகளில் போராட்டம் பிறந்த போதும் என்னருகே வள்ளுவரே நீங்கள் என்றோ எழுதிவைத்த குறளிருந்தால்…அதுவே போதும்!! இத்தனையும் ஒருமனிதன் எழுத்தா என்றே எந்நாளும் மனிதகுலம் வியந்து பார்க்கும் தத்துவமா? அரசியலா? தனிப்பண்பாடா? ...
ராஜநாயகம்-மீசல்வண்ணக் களஞ்சியப் புலவர்
மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரின் ராஜநாயகம்.19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டு 58 ஆண்டுகளுக்குப் பின் அச்சு வடிவம் கண்ட இந்த நூல் இப்போது உரையுடன் வெளிவந்துள்ளது. தமிழ் செழித்த திருப்பனந்தாளில் பிறந்து 1954ல் மலேசியாவில் வந்து குடியேறிய முதுபெரும் புலவர் ப.மு.அன்வர் அவர்கள் உரையெழுதியுள்ளார்கள். கடவுள் வாழ்த்தும் 45 படலங்களும் கொண்ட இந்நூல் வண்ணக்களஞ்சியப் புலவரின் விரிந்த வாசிப்பறிவையும் செறிந்த புனைவுத் திறனையும் வெளிப்படுத்துகிறது. விருத்தப் பாடல்களும் வண்ணப் பாடல்களும் விரவி வருகிற இந்த அரிய படைப்பு ...
முதியோர் வாழ்வின் சிக்கல்கள்
ஐயா வணக்கம்.இன்றைய முதியோர் இல்லங்கள் பற்றிய கேள்விக்கு உங்கள் பதிலை வாசித்தேன்.நம் நாட்டில் முதியோர்களுக்காக தனி மருத்துவம் உள்ளிட்ட துறைகள் உண்டா?இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த புரிதல்கள் இன்மை இன்றைய உலகத்திலிருந்து வயதானவர்களை அந்நியப்படுத்துகிறதா? மேலைநாடுகளில் முதியோர்கள் வாழ்வியல் குறித்து தனி துறையே அமைத்து அவர்களின் உடல்நலம்,உளநலம் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஜெரன்டாலஜி என்ற பெயரில் தனியான துறையே இயங்குகிறது.அத்தகைய தனித்தன்மை வாய்ந்த துறைகள் நம் தேசத்திலும் இப்போது வளர்ந்து வருகின்றன.சென்னையில் மருத்துவர் நடராஜன் என்னும் பத்மஶ்ரீ விருதாளர் ...
களத்தின் சூட்சுமம்
எனக்குள் இருக்கிற நிர்வாகி எழுந்து பார்க்கிற நேரத்தில் கணக்குகள் நிரல்கள் திட்டங்கள் கண்ணைக் கட்டும் காலத்தில் தனக்குள் திட்டம் பலதீட்டி தாளில் கணினியில் அதைக்காட்டி கனக்கும் இமைகள் கசக்குகையில் களத்தின் சூட்சுமம் விரிகிறது கேடயம் கவசம் துணையின்றி கத்தியை எடுப்பது வீரமல்ல பாடம் இதிலே புரிகிறது புதிதாய் வியூகம் அமைகிறது மூடிக் கிடக்கும் திசைதிறந்து முன்னே முன்னே நடைநடந்து தேடலைத் தொடர்தல் வாழ்வென்னும் திடமும் அதிலே வளர்கிறது சீறும் அலைகள் சவால்களெனில் செய்யும் தொழிலே ஒருபடகு மாறும் ...
எதிர்த்துச் சொல்வதா? ஏற்றுக் கொள்வதா?
இந்தக் கேள்வி,வாழ்வின் எத்தனையோ தருணங்களில் தலைகாட்டியிருக்கிறது.நம்மால் ஏற்க முடியாத கருத்துக்களையோ,உடன்பட முடியாத யோசனைகளையோ யாரேனும் சொல்லும்போது, சில சமயங்களில் மறுத்திருக்கிறோம்.பல சமயங்களில் மென்று முழுங்கியிருக்கிறோம்.ஏன் மென்று முழுங்குகிறோம்? விவாதங்களை,தெரிந்து கொள்வதற்கும் திருத்திக் கொள்வதற்குமான சந்தர்ப்பங்களாய் சிந்திக்காமல்,சர்ச்சைக்கான வாசல்களாய்ப் பார்ப்பவர்கள் மாற்றுக் கருத்துச் சொல்ல மணிக்கணக்கில் யோசிப்பார்கள். இது பொதுவான கருத்து. இதையும் தாண்டிப் பார்த்தால் சில அடிப்படைக் காரணங்கள் உண்டு. சின்னஞ்சிறிய வயது முதல் நமக்குப் போதிக்கப்பட்டுள்ள பால பாடங்களில் ஒன்று,”எதிர்த்துப் பேசாதே” என்பது.பெற்றோர்,ஆசிரியர்,மூத்தவர்கள் என்று எல்லோரோடும் ...
காதில் கேட்ட பாட்டு
வானத்தில் எழுந்தகுரல் வாசகமா? இல்லை! வாழ்க்கையினை உணர்த்துமொரு வார்த்தைகூட இல்லை! ஞானத்தின் பாதைதரும் மந்திரமா ? இல்லை! நாளையினை உணர்த்துமொரு ஜோதிடமும் இல்லை! ஏதோவொரு பாட்டிசைக்க இறைவனுக்கு விருப்பம் என்செவியில் முணுமுணுப்பு கேட்டதுதான் திருப்பம் பாதிச்சொல் பாடியவன் பார்த்துவிட்டுத் திகைத்தான் பார்த்துவிட்டு வெட்கமுடன் பரம்பொருளும் சிரித்தான் நாதத்தால் இறைவனைப்போய் நாமடைய முயல்வோம் நாதத்தை அடைவதற்கே நாயகனும் முயல்வான் கீதத்தின் லயங்களுக்குக் காலமெல்லாம் பிரியன் பாதங்கள் அசைத்தாடும் பெருங்கொண்ட வெறியன் ஆட்டங்கள் ஆடுவதில் அவன்பெரிய மேதை ஆடவிட்டுப் பார்ப்பதிலோ ...