Blog

/Blog

சிவவாக்கியர் 4

சிவவாக்கியர் அடிப்படையில் சிறந்த யோகி. யோக சூட்சுமங்கள் பலவற்றையும் அனாயசமாகப் பாடிச் செல்கிறார்.அவருடைய பாடல்கள் யோக ரகசியங்களும் யோகப் பயிற்சியினால் கிடைக்கக் கூடிய பலன்களையும் விரிவாகப் பேசக் கூடியவை. .மனித உடலில் தச வாயுக்கள் உள்ளன.குழந்தை கருவில் இருக்கும் போதே உடனிருக்கும் வாயுவாகிய தனஞ்செயன் மூலாதாரத்தில் ஒடுங்குகிறது. அந்த மனிதர் வாழ்வு முழுவதும் ஆன்மீக அறிமுகமின்றி வாழ்வாரேயானால்,மூலாதாரத்திலேயே ஒடுங்கிக் கிடக்கும் அந்த வாயு, உயிர் பிரிந்த மூன்றாம் நாள், சடலத்தை அழுக வைத்து கபாலம் வழி வெளியேறுகிறது. ...

சிவாவாக்கியர்-3

கடந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், அடையாளங்களை அழிப்பதே சிவவாக்கியரின் பாடல்கள் என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு மனிதனும் சுமக்கும் விதம் விதமான அடையாளங்கள்,எத்தனையோ மனத்தடைகளை ஏற்படுத்துகின்றன.மற்றவர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் எத்தனையோ விசித்திரமான காரணங்களால் வருகிறது. மெத்தப் படித்தவர்கள் தங்களை உயர்வாகக் கருதிக் கொள்கிறார்கள் .அவர்களிடம் “சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே வேர்ப்பு வந்திளைத்த போது சாத்திரம் உதவுமோ” என்று கேட்கிறார். சிலர் எச்சில் கூட தீட்டு என எண்ணுவார்கள்.அவர்களிடம் “ஓதுகின்ற வேதம் எச்சில்,உள்ள மந்திரங்கள் எச்சில் ...

சிவவாக்கியர்-2

ஒரு மனிதர் வெவ்வேறு நிலைகளில் தனக்கென்று திரட்டிக் கொள்ளும் அடையாளங்களை சுமந்து சுமந்து காலப்போக்கில் அந்த அடையாளங்கள்தான் தானென எண்ணத் தலைப்பட்டு விடுகிறார்.இதன் விளைவாக தன்னை ஓர் உயிராக மட்டுமே எண்ணும் வாய்ப்பை இழக்கிறார்.உள்ளே இத்தனை அடைசல்கள் இருக்கும் போது இறைத்தன்மை உள்ளே நுழைய வழிவிடுவதில்லை.ஒரு மனிதரின் அபிப்பிராயங்களைக் கட்டமைக்கக் கூடியவை அடையாளங்கள். சந்நியாசப் பாதையில் போகிறவர்களுக்கு குரு புதிய பெயர் சூட்டுவது இந்த அடையாளங்களை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான். மாணிக்கவாசகர் இப்படி ஒவ்வோர் அடையாளமாக ...

சிவவாக்கியர் 1

(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நடத்தும் எப்போ வருவாரோ உரைத்தொடர் வரிசையில் 2016 தொடரின் நிறைவு நாளான 10.01.2016 அன்று சிவவாக்கியர் குறித்து உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சில பகுதிகள்) ஆன்மீகப் பாதையில் முன்னேறும்போது சில சக்திகள் திறமைகள் கைகூடும்.அவற்றை சித்திகள் என்பார்கள்.சிலர் அந்த சக்திகளிலேயே தேங்கிப் போய் விடுவதுண்டு.அவர்கள் சித்து வேலை செய்பவர்கள் என்னும் பெயரைப் பெறுகிறார்கள்.ஆனால் அந்த சித்திகளையும் கடந்து போகிறவர்கள் சித்தர்கள். அவர்கள் ஆன்மீகப் பாதையில் ஆகச்சிறந்த வைராக்கியத்துடன் வளர்ந்தவர்கள்.தம் ...

வெள்ளியங்கிரி ஆண்டவ்ர் திருப்பள்ளியெழுச்சி

வெள்ளிமலை காண்கின்ற விருப்பமுடன் செங்கதிரும் எழுகின்றதே புள்ளினங்கள்இசைபாடப்பொன்காலைப் பொழுதொன்று புலர்கின்றதே உள்ளமெலாம் நெக்குருக உமைபாகா உன்வாசல் தேடிவந்தோம் வெள்ளியங்கிரி ஆளும் வேதாசலா பள்ளி எழுந்தருளாயே தென்கைலா யமென்னும் வெள்ளியங்கிரி ஆளும் தேவதேவா உன்பாதம் சரணென்னும் அடியார்கள் முகங்காண நீயும்வாவா வெண்மேகம் அலைபாயும் மலையேறி வருகின்றோம்எங்கள்நாதா இன்னமுதே வெள்ளியங்கிரிவாசா பள்ளி எழுந்தருளாயே சித்தர்களும் யோகிகளும் சிவஞான முனிவர்களும் சேர்ந்துநாளும் பத்தியுடன் தொழுதேத்தும் பரமேசா இளங்காலை புலர்கின்றதே முத்திதரும் அருளாளா மூலமென நிற்கின்ற ஆதிமூர்த்தி வித்தகனே வெள்ளியங்கிரிநாதா பள்ளி எழுந்தருளாயே ...

எது? எது? எது?

எது உங்கள் பாத்திரம்? எதிர்மறை நேர்மறை போட்டி எப்போதும் இருக்கிறது.”எனக்கு நேர்மறை எண்ணங்கள் இருந்தாலும் என்னைச்சுற்றி இருப்பவர்கள்எதிர்மறை அதிர்வுகளுடன் இருக்கிறார்களே”என்கிற கேள்வியை எத்தனையோ பேர் எழுப்புவதுண்டு. உங்கள் நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு திடமாக இருக்கின்றன என்பதைப் பயிற்சி செய்து பார்க்கும் வாய்ப்புதான் இந்தச் சூழல். மற்றவர்கள் எதிர்மறை அதிர்வுகளுடன் இருப்பதை மாற்றுவது என்பது நீண்டகாலத் தீர்வு.எதிர்மறை அதிர்வுகள் உங்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்வதே உடனடித் தீர்வு. எத்தகைய சூழல்களில்,எத்தகைய மனிதர்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதன் அடிப்படையிலேயே உங்கள் தாங்கும் ...
More...More...More...More...