Blog

/Blog

மார்கழி 21- திருப்பள்ளியெழுச்சி

சிவபெருமானுக்கு மாணிக்கவாசகர் பாடும் திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவையின் இணைப்பதிகமாக காணப்படுகிறது. வாழ்வின் மூல முதலே சிவன் எனும் பொருளில் “போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று தொடங்குகிறார்.உயிரின் சிறப்பே அதற்குள் இருக்கும் இறைத்தன்மை. தனக்குள் இருக்கும் இறைத்தன்மையை எழுப்புவதும் அதனை எட்டுவதுமே உயிரின் மாண்பு.”வாழ்முதல் ஆகிய பொருளே” என்னும் விளி உயிரின் தன்மையில் உறைந்திருக்கும் சிவத்தை நோக்கியது. பொழுது புலர்கையில் சிவபெருமானுக்கு மலரருச்சனை புரிய மலர்ந்த தாமரைகளை மாணிக்கவாசகர் கொண்டு வருகிறார். எங்கோ மலர்ந்த மலருமல்ல.ஏனோதானோ என பறித்ததுமல்ல. ...

மார்கழி 20- திருவடித் திளைப்பு

சைவத்தின் உயிர்நாடி சிவப்பரம்பொருளின் செங்கழல் இணைகளில் சென்று சேரும் நற்கதி. உயிரின் கடைத்தேற்றத்தை சிவபெருமான் திருவடிகள் எவ்வாறெல்லாம் நிகழ்த்துகின்றன என்பதை நிரல்படச் சொல்கிறார். அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் அமையும் திருவடிகளே,உயிர்களைத் தோற்றுவிக்கின்றன.உயிர்க்குரிய போகங்களையும் அருள்கின்றன.உயிர்களின் எல்லையாகவும் திகழ்கின்றன.மாலும் அயனும் காணவொண்ணா திருவடிகள் அடியவர்கள் உய்யும் விதமாய் வந்து ஆட்கொள்கின்றன. அந்தத் திருவடிகளில் திளைக்கும் பாவனையில் மார்கழி நீராடுகிறோம் என்கின்றனர் பெண்கள். போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா ...

மார்கழி-19 இல்லறம் வழியே இறையறம்

தன் தந்தை மாமனாராகும் தருணம் குறித்த கேலிச்சொல் அக்காலத்துப் பெண்கள் மத்தியில் இருந்திருக்குமோ என்னும் யூகத்தை இப்பாடல் கிளப்பி விடுகிறது. இப்படி வைத்துக் கொள்வோம்.ஒரு தந்தைக்கு இரண்டு பெண்கள். முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தார். மகளை மணமகன் வசம் ஒப்படைக்கும் போது  பெருமிதமும் உவகையும் அழுகையுமாய் கலவை உணர்ச்சிகளில் அவர் சொன்ன சொல் “உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்”. அந்தக் குடும்பமே அந்நொடியில் ஆடிப் போனது. பின்னாளில் இளைய மகள் மனதில் கம்பீரமான  தன் தந்தை கசிந்து ...

மார்கழி18 ஒளி பெருக உயிர் பெருகும்

மூட இருள் மூடிய உயிர் பேதங்கள் வகுக்கிறது. பூமியை விண்ணை பெண்ணை ஆணை அலியை வெவ்வேறாய் பார்க்கிறது.ஆனால் இறையருள் என்னும் ஒளி பரவும் போது படைப்பென்னும் அற்புதத்தில் அனைத்துமே அங்கங்கள் என்னும் தெளிவு பிறக்கிறது. தானெனும் தன்மையை அனைத்திலும் ஊடாட விட்டு அவற்றை தன்னிலிருந்து தனியாகவும் காட்டுகிறான் இறைவன். அதுமட்டுமா?அனைத்திலும் தன் இருப்பை காட்டவும் செய்கிறான்.கண்ணாரக் காணும்படி காட்டுகிறான். ஒளிபொருந்திய மகுடங்களை சூடிய தேவர்கள் சிவபெருமானின் திருவடிகளைப் பணிய நெருங்கும் போது, அவன் திருவடிகளின் பேரொளியில் இவர்களின் ...

தருவாயா….

ஒளியின் ஸ்வரங்கள் ஒலிக்கிற நேரம் வெளிச்சத் தந்தியில் விரல்தொடுவாயா? களியின் மயக்கம்  கவிதரும் நேரம் குயிலே குயிலே குரல்தருவாயா வெளிச்சம் இசையாய் வருகிற நேரம் வந்துன் அழகால் நிறம் தருவாயா கிளிகள் கொத்தும் கனியின் சுவையாய் கனிந்த அன்பின் வரம்தருவாயா தூரத்து நிலவைத் துரத்தும் முகில்நான் தங்கித் தவழ மலை தருவாயா தீபத்தின் ஒளியை மலர்த்தும் அகல்நான் தீராக் காதலின் திரி தருவாயா மாதவி சிலம்பின் மௌனப் பரல்நான் மகர யாழே மொழிதருவாயா நேசக் குளிரில் நடுங்கும் ...

மார்கழி 17 வந்தவர் நடுவே வந்தவன் சிவன்

இந்தப் பாடலில் ஒரு குட்டு வெளிப்படுகிறது.ஆங்கிலத்தில் the cat is out என்பார்கள்.தோழிகள்,அதுவும் தினமும் பழகுபவர்கள்,மறுநாள் காலை வருவதாக முன்னறிவிப்பு தந்தவர்கள்,தெருவில் சிவநாமத்தைப் பாடி வருகையில் படுக்கையில் துடித்துப் புரள்வதும் மூர்ச்சையாவதும் சமாதி நிலைக்குப் போவதும் ஏன்நிகழ்கிறது?சிவநாமம் ஏற்படுத்தும் அதிர்வுகளைப்போலவே இன்னொரு சக்தி மிக்க அனுபவமும் இப்பெண்களுக்கு நேர்ந்துள்ளது. பிரம்ம முகூர்த்தப் பொழுதில், சிவநாம சங்கமத்தில் சிவனுடைய இருப்பை சூட்சுமமாக உணர்ந்திருக்கின்றனர். அந்த தன்மையின் வீச்சைத் தாங்க மாட்டாமல் மூர்ச்சித்து விழுதலும் சமாதிநிலை அடைதலும்நிகழ்ந்திருக்கின்றன. இங்கு நம் ...
More...More...More...More...