கிருஷ்ண காந்தம்
(முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் கண்ணனைப் பற்றி எழுதிக் கொண்டே வந்த வரிகள் கைகோர்த்து கவிதையாயின) வெண்ணெய் கனவில் கண்ணன் புரள கண்ணன் நினைவில் குழலும் உருள எழுந்த சங்கீதம் எவர்செய் ததுவோ கண்ணன் செவ்வாய் உண்ட பின்னை மண்ணும் வெண்ணெய்; அறியாள் அன்னை உரலில் கட்டிய யசோதையை விடவும் குரலில் கட்டிய மீரா பெரியவள் கண்ணனை ஒருத்தி கள்வன் என்கிறாள் கள்வனை ஒருத்தி கண்ணன் என்கிறாள் ஆலிங்கனத்தில் அகப்பட மாட்டான் காளிங்கனுக்கு பயப்பட மாட்டான் கோபியர் மடிமேல் ...
தனித்தனி இல்லை
பெரிதாய் எதையும் சொல்வதற்கில்லை பெரிதென எதையும் சொல்வதுமில்லை சிறிதாய் எதுவும் தோன்றவுமில்லை சிறுமையும் பெருமையும் அவரவர் எல்லை பொதுவாய் எதையும் சொல்வதற்கில்லை பொதுவெனசொல்பவை பொதுவும் இல்லை நதிநிலம் கடலெதும்நமக்கென இல்லை நாமில்லாமலும் நதிநிலம் இல்லை விரல்களுக்குள்ளே வித்தைகள் இல்லை வித்தையில்லாத விரல்களும் இல்லை நிரல்களை நம்பி நிமிடங்கள் இல்லை நிகழ்கணம் இருக்கையில் நிமிடங்கள் இல்லை எவரும் எதையும் மாற்றுவ தில்லை எவருக்கும் எதுவும் மாறுவ தில்லை தவறோ சரியோ தொடருவதில்லை தவறும் சரியும் தனித்தனி இல்லை ...
காது கொடுத்துக் கேளுங்கள்
“வீணைகள்” என்னும்சொல்லில் தொடங்கும் விடுகதைகள் எழுதிக் குவிக்கிறேன் ராவண குணத்தின் உருவகமாய் ராட்சச அதிர்வின் எதிரொலியாய் ஆணவத்தால் கயிலாயத்தை அசைத்தவன் சிக்கிய அழுகையாய் மாளிகை தன்னில் மண்டோதரியின் மஞ்சத்தில் எழுகிற விசும்பலாய் அபசுரம் கூட அழகாய் ஒலிக்கும் அசுர சாதக அதிர்ச்சியாய் தபத்தில் கிடைத்த தனிப்பெரும் வரத்தால் தருக்கித் திரியும் தலைக்கனமாய் விபத்துப் போல வீசிய காற்றில் விதிர்க்கும் நரம்பில் வரும் இசையாய் கனத்த மகுடத்தைகழற்ற மறுத்து சயனத்தில் தவிக்கும் சங்கடமாய் மாயமான்களின் உற்பத்திச் சாலையில் மாரீசன்களின் ...
அந்தப் புதிர்
திரளும் முகில்கள் தயங்கி நடக்கும் உருளும் தேர்களாய் உயரே அசையும். எந்தப் பரப்பில் எந்த நொடியில் விழுவதென்றே வியூகம் அமைக்கும். சொந்த முடிவா?சந்தர்ப்ப வசமா? எந்த வகையிலோ இறங்கத் தவிக்கும். எம்மழை எவ்விடம்…என்பது எவர்வசம் அந்தப் புதிர்தான் ஆதிப் பரவசம். ...
ஜெயகாந்தன் – வைரமுத்து சர்ச்சை!-என் யூகம் சரிதான்
குமுதம் வார இதழில் ‘வைரமுத்து சிறுகதைகள்’ எனும் நெடுந்தொடரைப் பாராட்டி ஜெயகாந்தன் அவர்களின் பெயரிலான கடிதம் வெளிவந்தது தொடர்பான சர்ச்சையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். நான் ஜெ.கே. மீது வழிபாட்டுணர்வு கொண்ட அபிமானி என்பதும் கவிஞர் வைரமுத்துவுக்கு வேண்டியவன் என்பதும் என் இலக்கிய முன்னோடிகளும் நண்பர்களும் நன்கறிந்த விஷயம். ஜேகே யின் ஓரிரு நூல்களைப் படித்தவர்களுக்குக் கூட அந்தக் கடிதம் அவரின் எழுத்துப் பாணியில் இல்லை என்பது நன்றாகத் தெரியும் .எனவே செய்தி ...
ஆதலால் அருமை நெஞ்சே
முழக்கங்கள் முனகலாகும் முனகலும் ஓய்ந்து போகும் விளக்கங்கள் விவாதமாகும் விவாதமும் மறந்து போகும் கலக்கங்கள் தெளியலாகும் கேள்விகள் தோன்றும் போகும் நிலைக்கொள விரும்பும் நெஞ்சே நித்தியன் பெயரைப் பாடு மகுடங்கள் களவு போகும் மகிமைகள் மறந்து போகும் தகுதிகள் பழையதாகும் தலைமுறைத் தேவை மாறும் யுகங்களும் உருண்டு போகும் யுக்திகள் ஒருநாள் வீழும் புகையெனப் பிறவி தீரும் புண்ணியன் பாதம் தேடு சாதனை செய்தி யாகும் செய்தியின் வியப்பும் ஓயும் வேதனை சேரும் மாறும் வந்தவை விலகிப் ...