21.உங்கள் முதலீட்டின் பல முகங்கள்
ஒரு நிறுவனத்தைத் தொடங்கும்போது போடும் பணம் மட்டுமே முதலீடு ஆகாது. அது ஓர் ஆரம்பம் மட்டும்தான். ஆனால், அன்றாடப் பணிகளில் நீங்கள் செலவிடும் நேரம், உங்களுக்கிருக்கும் நன்மதிப்பு, சமூக அந்தஸ்து இவையெல்லாமே ஒருவகையில் முதலீடுகள் தான். இப்படி பரவலாக பொதுமைப்படுத்தி சொல்வதை விட கண்ணுக்குத் தெரியாத முதலீடுகளை எப்படி வகைப்படுத்துவது? மூன்று முக்கியமான கண்ணுக்குத் தெரியாத முதலீடுகளை தாமஸ் ஸ்டீபன்ஸ் என்கிற நிர்வாகவியல் அறிஞர் வரையறை செய்கிறார். 1.மனிதவளம் என்கிற முதலீடு 2.கட்டமைப்பு என்கிற முதலீடு 3.வாடிக்கையாளர்கள் ...
20.இது தகவல் யுகம்
தகவல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இன்றைய உலகம் உருள்கிறது. தொழிலுக்கு சில தகவல்கள் தேவைப்பட்ட காலம் போய், தகவல்கள் அடிப்படையிலேயே தொழில்கள் நடைபெறும் காலம் இது. இன்று நிறுவனங்களுக்கு தலைமை தாங்குபவர்களும், தகவல்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறார்கள். எனவே, தகவல்களைக் கையாள்வது பற்றி தெளிந்த அறிவும், சூழ்நிலைக்கேற்ப தானும் மாறி தன் நிறுவனத்தின் செயல்களையும் மாற்றிக் கொள்கிற ஆற்றலும் 21ஆம் நூற்றாண்டின் நிர்வாகவியலில் நிகரற்ற சவால்களாக விளங்குகின்றன. பழைய கோட்பாடுகளை மாற்றி அமைப்பதன் மூலமாகவும், புதிய கோட்பாடுகளை உருவாக்குவதன் ...
19.ஆளுமை மனிதர்கள்
நாம் தொழில் நிர்வாகி என்பதை சிலர் மறப்பதுண்டு. தொழிலகங்களில், ஆளுமைமிக்க தலைவராக ஒரு நிர்வாகி விளங்குவதும், அவரது தாக்கத்தால் தனிமனிதர்கள் தலைநிமிர்வதும் ஆரோக்கியமானவை தான். ஆனால், தாங்கள் தங்கள் தொழிலை நிர்வகிக்க வந்தவர்கள் என்பதை இத்தகைய ஆளுமை மனிதர்கள் மறந்துவிடுகிற ஆபத்தும் அடிக்கடி நிகழ்வதுண்டு. ஆளுமை இருக்குமிடங்களில் அரசியல் தலை தூக்குவது இயல்பு. இயக்கங்களை நிர்வகிக்க அரசியல் அவசியம். தொழில் நிர்வாகத்திற்கு அது தேவை இல்லாத தொந்தரவு. தடை, குறுக்கீடு, நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் மனிதர்கள் ...
18.பணியாளரைப் பார்க்கும் விதம்
வெற்றிகரமான நிறுவனங்கள் பலவற்றில், அவற்றின் வெற்றிக்கென்று ஒரு பொதுக்காரணம் உண்டு. “பணியாளர் ஒத்துழைப்பு” என்கிற மந்திர வார்த்தைதான் அது. பொதுவாகவே நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் நடுவிலான இடைவெளி குறையக் குறையத் தான் ஆக்கபூர்வமான செயல்கள் ஆரம்பமாகும். பல்லாயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட நிறுவனத்தில் நிர்வாகிக்கு ஒவ்வொருவரோடும் தனிப்பட்ட உறவு சாத்தியமில்லைதான். ஆனால், மானசீகமாக, தான் தன் பணியாளர்களுக்கு மிக வேண்டியவர் என்கிற உணர்வை ஏற்படுத்த முடியும். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், திருவாளர் சாம் வால்டனிடம் விசாரித்துப் பாருங்கள். யார் அந்த ...
17.துல்லியமான தொடர்புகள்
நிர்வாகத்தில் எத்தனையோ அம்சங்களை முறைப்படுத்தி வைத்திருந்தாலும், அடிப்படையான தேவைகளில் ஒன்று, மனித உறவுகள். மனித உறவுகளைக் கையாளும்போது, அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. 1) அணுகுமுறை 2) உரையாடல் 3) எழுத்து வழியான தொடர்புகள் இவற்றில், முதல் விஷயமாகவும் முக்கிய விஷயமாகவும் இருப்பது அணுகுமுறை. உங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொள்பவர்களிடம் உங்கள் அணுகுமுறை எவ்வாறு உள்ளது? நிறுவனத்தைத் தொடர்பு கொள்பவர்கள் என்றால் வாடிக்கையாளராகத் தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை, உங்கள் நிறுவனத்திற்குக் கூரியர் கொண்டு வருகிற ...
16.சேவைத் துறையின் சூட்சுமங்கள்
சர்வதேச அளவில், நிரிவாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா? உற்பத்தித் துறை என்றுதான் பலருக்கும் சொல்லத் தோன்றும். உண்மையில், சேவையின் தரத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான் மிகவும் கடினம். ஏனென்றால், உற்பத்தியான பொருள், வாடிக்கையாளரைச் சென்று சேர்வதற்கு முன்பாக “பரிசோதனை இடைவெளி” உள்ளது. இதன் காரணமாக, உற்பத்தியில் குறையிருந்தால், அந்த பொருளைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்து ...