உருவா அருவா அருவுருவா உண்மையில் யார்தான் பராசக்தி? அருளா சினமா ஆதரவா அண்மையில் நிற்பாள் பராசக்தி; ஒருவாய் உணவின் ஊட்டமுடன் ஒவ்வாமையும்தான் பராசக்தி; இருளா ஒளியா இடைநிழலா எல்லாம் எல்லாம் பராசக்தி! வேம்பின் கொழுந்தாய் முளைவிடுவாள் வீசும் காற்றாய் வருடிடுவாள் தேம்பும் மகவாய் தெரிந்திடுவாள் தேசுடைக் கதிராய் எழுந்திடுவாள் பாம்பின் படத்தினில் பீடமிடும் பராபரை வடிவுகள் கொஞ்சமல்ல; சாம்ப சதாசிவன் இறைஞ்சுகிற சாம்பவி எங்கள் பராசக்தி! திரிபுரை கரத்தினில் திரிசூலம் திருமுகம் தன்னில் திரிநேத்ரம் பரிபுரை படைத்தாள் முக்காலம் பரிந்தருள் செய்தால் பொற்காலம் எரிதழல் அவளது வடிவாகும் எண்திசை அவளின் உருவாகும் சரிவுகள் நீங்கி நிமிர வைப்பாள்…
செவ்வண்ணக் கமலமென சிவந்திருக்கும் வதனம் ஸ்ரீமாயன் கழல்வருடி சிவந்த கரக் கமலம் எவ்வண்ணம் விழுந்தாலும் ஏற்றிவிடும் அபயம் எம்மன்னை மஹாலக்ஷ்மி எழில்பதங்கள் சரணம்! கருணைக்கே ஊற்றுக்கண் கமலைமலர்க் கண்கள் கவலையெலாம் துடைக்கிற களிநகையோ மின்னல்…
தோன்றும் கலைகளின் தொடக்கமவள் – அவை துலங்கித் தொடரும் விளக்கமிவள்; சான்றவர் இதயச் சந்நிதியில் – நின்று சகல கலைகளும் ஆளுபவள்! வெண்ணிறக் கமலத்தில் வீற்றிருப்பாள் – அவள் விதம்விதமாய்க் கவி சாற்றிநிற்பாள்; பண்ணிறை…
வீதியெல்லாம் நின்றிருப்பாள் வேப்பிலைக்காரி-பல விளையாட்டு நடத்துகிற வேடிக்கைக்காரி; ஆதிக்கெல்லாம் ஆதியான அம்பிகையாமே- இவள் அன்னாடங் காச்சிகளின் குடித்தனக்காரி! சாலையோரக் கோவிலெல்லாம் சக்திபீடமே – ஏழை சம்சாரி வந்துவிழும் பக்தி பீடமே! காலையிலே எப்போதோ கோயில்…
சூட்சுமக் காட்சிகள் ஏற்படுத்தும் – அந்த சுந்தரி சேட்டைகள் கொஞ்சமில்லை; ஆட்சி புரிகிற அன்னையின் கோவிலில் ஆனந்தப் பாட்டுக்கு பஞ்சமில்லை! கைகள் பத்திலும் காத்துநிற்கும் எங்கள் காருண்ய நாயகி கண்ணுதலாள் பைரவி லிங்கரூபிணி –…
சடசடக்கும் நெய்விளக்கில் சிரிப்பொலி காட்டி – அந்த சரவிளக்கின் அசைவினிலே சிலம்பொலி காட்டி படபடக்கும் மனதினுக்கு பக்குவம் தந்தாள் – எங்கள் பராசக்தி அபிராமி தரிசனம் தந்தாள்! நமசிவாயன் மேனியிலே பாதியை வென்றாள் –…
வரும்பகை கடிவாள் வாராஹி – தினம் வெற்றிகள் தருவாள் கருமாரி; திருவடி தொழுதிட திரள்பவர் மனங்களின் தயக்கங்கள் துடைப்பாள் ஶ்ரீகாளி! ஆயுதம் ஏந்தும் திருக்கரமும் – நல்ல அபயம் அளித்திடும் மலர்க்கரமும் மாயையை விலக்கும்…
வித்தில் முளையாகும் வித்தகி இல்லையேல் பத்தில் பதினொன்றாய் போயிருப்பேன் – தத்துவம் ஏதும் அறியாமல் ஏங்குகையில் வாழ்வளிக்க மாதரசி கொண்டாள் மனம். கற்கும் மொழியானாள்; கட்டும் கவியானாள் நிற்கும் சொல் சொல்கின்ற நாவானாள் –…
மழைமுகில் வண்ணம் அவள்வண்ணம் மழைதரும் கருணை அவள்வண்ணம் பிழைகள் பொறுப்பாள் பரிந்திடுவாள் பற்பல அற்புதம் புரிந்திடுவாள் குழையணி காதர் காதலிலே குதூகலம் காணும் மஹேஸ்வரியாள் விழைவுகள் யாவும் அருளிடுவாள் வித்தகி திருப்பதம் பரவிடுவோம்! மின்னலை…
விருந்தினர்களை முகமலர்ந்து வரவேற்பதற்கு குழந்தைகளை நாம் பழக்குவோமேயானால் அவர்கள் சமூக உணர்வு மிக்கவர்களாக வாழ்வார்கள் என்பதை நம் சமூகம் காலம் காலமாகக் கண்டிருக்கிறது. வீட்டிற்குள் வருபவர்களைப் பார்த்துக் கூச்சமின்றி உரையாட குழந்தைகள் பழகிவிட்டால் வெளியிடங்களுக்குச்…




