காற்றில் ஏறும் குளிரழகு
காலை வானத்தின் நிறமழகு
நேற்றைய வாழ்வின் வலியழகு
நாளையின் நம்பிக்கை ஒளியழகு

வெய்யில் பருகும் குளமழகு
வியர்வை பருகும் நிலமழகு
வையம் வழங்கும் வாய்ப்பழகு
வெல்லும் நேரத்தில் பணிவழகு

நீரில் அலையும் கயலழகு
நீளும் பாதையின் வளைவழகு
நேரில் சவால்கள் நல்லழகு
நேர்மையின் வெற்றி நிலையழகு

பார்த்தன் வில்லின் கணையழகு
பாரதி மீசையின் முனையழகு
மூத்தவர் அனுபவச் சொல்லழகு
முயற்சியின் தீவிரம் மிக அழகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *