வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

மற்றவர்களை சந்திப்பதற்காகவே ஒவ்வொரு தடவையும் உங்களை தயாரித்துக் கொள்கிறீர்களே, உங்களை நீங்கள் சந்திக்கத் தயாரா?

உங்களுக்குப் பிடித்த நீங்கள், உங்களால் ரசிக்கப்படுகிற நீங்கள் என்பதையெல்லாம் தாண்டி நீங்கள் அறியாத ஒருவர் உங்களுக்குள் இருக்கிறார். அவரைச் சந்திக்க நீங்கள் தயாரா?

உங்களை விமர்சிக்கிற, உங்களைக் கேள்வி கேட்கிற, முதல் தடவை தெரியாமல் செய்த தவறை மறுமுறை தெரிந்து செய்கையில் உங்களை முறைக்கிற அந்த மனிதரை உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் காரியங்களை எளிதில் முடிக்க முடிந்தாலும் உங்களால் கட்டிப் போடப்பட்டிருக்கும் அவரைச் சந்தியுங்கள்.

அவரை உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் அவராகிய உங்களைத்தான் உலகம் எதிர்பார்க்கிறது. நீங்கள் சற்றே அனுமதித்தால் உங்களை இன்னும் உயர்த்தக்கூடிய அந்தப் பிரியமான எதிரி உங்களுக்குள் தான் இருக்கிறார். அவரை உடனே சந்தியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *