Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உருகும் பக்குவம் அம்பிகையினுடைய திருவடிகளில் ஈடுபட்டதனாலே தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த இடத்தில் அபிராமி பட்டர் சொல்கிறார். பதத்தே உருகி என்றால் தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியும். சமைக்கிறபோது ஒரு பதம் வந்துவிட்டதா என்று நாம் பார்ப்போம். நீங்கள் வீட்டில் மைசூர்பாகு செய்தால் பதத்தில் அது இறுகும். ஆனால் இந்த மனம் பதத்தில் உருகும். அதுதான் வித்தியாசம். பக்குவம் வந்தபிறகு உள்ளம் உருகிக் கொண்டே இருக்கும். எதைப் பார்த்தாலும் உள்ளம் உருகும். எதையும் ஏற்காமல் இறுக்கமாக இருந்தால் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உயர்ந்த பதவிகள் அவள் தருவாள்! அம்பிகையை வணங்கினால் என்ன கிடைக்கும் என்று நிறைய இடங்களில் அபிராமி பட்டர் சொல்லிவிட்டார். இப்போது இவையெல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் அம்பிகையை வணங்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்றார். மெல்லிய இடை கொண்டவள், மின்னல் போன்றவள், யோகாப்பியாசம் செய்யக்கூடியவர்களுக்கு மின்னல்போல் தோற்றம் தரக்கூடியவள் அம்பிகை. மெல்லிய திருமுலைகள் கொண்டவள், தங்கம் போன்றவள், அவளைத்தான் சிவபெருமான் அணைத்தான். வேதங்கள் எப்படியெல்லாம் முறையாக அம்பிகையை வழிபடுகிறதோ அப்படியெல்லாம் வழிபடக்கூடிய அடியவர்கள் உள்ளனர். அந்த அடியவர்களை ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உன்னுடைய வீடு உள்ளே வா இன்றைக்கும் நாம் உட்கார்ந்து அபிராமி அபிராமி என்று பேசுகிறோம் என்றால் அது இன்றைக்கு வந்ததல்ல, பல பிறவிகளாக அவளுடைய திருவடிகளை நினைத்து, அவளுடைய நாமத்தை ஒரு முறை சொல்லுகிற புண்ணியம் கிடைக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார் பட்டர். ஏற்கனவே இந்த உயிரில் இருந்தவள்தான் அவள், நம்முடைய கர்ம வினைகள் காரணமாக நாம் மறுபடியும் பிறந்திருக்கின்றோம். அவள் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இந்த உயிருக்கு எப்படியாவது உய்வு தந்துவிடுவதென்று நேரம் பார்த்து நம்முடைய ...
இணைவெளி-மரபின் மைந்தன் முத்தையாவின் 60ஆவது புத்தகம்- மலேசியாவில் வெளியீட்டுவிழா

இணைவெளி-மரபின் மைந்தன் முத்தையாவின் 60ஆவது புத்தகம்- மலேசியாவில் வெளியீட்டுவிழா

ஏன்னுடைய 60ஆவது புத்தகம் 23.05.2016 அன்று மலேசியாவில் வெளியிடப்படுகிறது. கவிதை வாழ்க்கை வரலாறு ஆன்மீகம் இலக்கியம் மொழிபெயர்ப்பு திறனாய்வு,சுய முன்னேற்றம் உட்பட பல்வேறு துறைகளில் இதுவரை 59 நூல்கள் வெளிவந்துள்ளன. 60 ஆவது புத்தகமாக ” இணைவெளி” எனும் தலைப்பில் கவிதைநூல் வெளிவருகிறது. இந்நூலில் அந்தரங்கம், பகிரங்கம், அமரத்துவம்,தெய்வீகம் ஆகிய நான்கு பகுதிகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இதனை மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் ம.இ.கா. தலைமையகத்தில் உள்ள நேதாஜி அரங்கில் மலேசிய அரசின் இளைஞர் நலம் மற்றும் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அவரும் உடன்வருவார் கடவுளுக்கும் நமக்குமான உறவில் இரண்டு நிலைகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று உலகில் ஏற்படுகிற நிலை. இன்னொன்று அந்தரங்கமான நிலை. தனிப்பட்ட நிலையில் ஓர் உயிருக்கும் இறைவனுக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை. இந்தப் பாடலில் சொல்கிறார். எங்கெல்லாம் தாமரை இருக்கிறதோ அங்கெல்லாம் அம்பிகை இருக்கிறாள். அவளுடைய ஞானசக்தி கலைமகளாகச் செயல்படுகிறது. அவளுடைய சுபிட்ச சக்தி மகாலெஷ்மியாக இயங்குகிறது. யோக மரபில் மனித உடலில் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான சக்கரங்கள் தாமரை மலர்களாய் இருக்கின்றன. அத்தனை தாமரைகளிலும் அவள் வீற்றிருக்கிறாள். ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

மனிதன் சில கருவிகளை வைத்துக்கொண்டுதான் இயங்குகிறான். ஒன்று அவனுடைய நினைவு, இன்னொன்று அவனுடைய மொழி, நீங்கள் பிறந்ததிலிருந்து ஆயிரம் முறை அபிராமியை தரிசனம் செய்திருக்கலாம். வீட்டில் உட்கார்ந்து கற்பனை செய்தால் அந்த உருவம் முழுமையாக நமது மனதில் வருகின்ற பக்குவம் படிந்திருக்காது. நினைவுக்கு அவள் எட்டுவதில்லை. மொழியில் எவ்வளவு சொல்லமுடியும். அவளை தரிசித்தேன் எப்படி இருந்தது தெரியுமா என்று நீங்கள் ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். அப்போது கூட அந்த நினைவு வராது. இசைக் கச்சேரிகளில் பார்த்தால் ஓர் ...
More...More...More...More...