Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எட்டாத அற்புதம் எளிதில் வெளிப்படும் திரும்பத் திரும்ப அம்பிகையினுடைய திருவுருவத்தை நம் மனதிலே அவர் எழுதிக் கொண்டே வருகிறார். எந்தத் திருவுவை எல்லா இடங்களிலும் அவர் காண்கிறாரோ அதைத்தான் தேவரும், மூவரும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். தேவர்களுக்கும், மூவர்களுக்கும் தென்படாதது பக்தர்களுக்கு பளிச்சென்று தென்படுகிறது. சங்காலே செய்யப்பட்ட வளையல்களுக்கு சூடகம் என்று பெயர். அம்பிகையின் கைகள்தான் நமக்கு முதலில் தெரிகிறது. அம்மா கடைத்தெருவிற்குப் போய்விட்டு வந்தால் குழந்தை அம்மாவின் முகத்தைப் பார்க்காது. கைகளைத்தான் பார்க்கும். அம்மாவின் காலடிச் ...

நம்நாடு நம்தேர்தல்-மரபின்மைந்தன்முத்தையா

பழைய கதை..அரசாட்சியில் அன்று!! ———————————————————- அத்தனை குடிமக்களையும் ஓர் அரசர், பொதுவில் வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஒரு குவளை பாலூற்றச் சொன்னாராம். “யாருக்குத் தெரியப் போகிறது என்றொரு குடிமகன் ஒரு குவளை தண்ணீரை ஊற்றினானாம். அப்படியே அனைத்து குடிமக்களும் நினைக்க அண்டா முழுவதும் தண்ணீர் மட்டுமே இருந்ததாம். புதிய கதை….குடியாட்சியில் இன்று!! ————————————————————- தேர்தல் என்னும் திறந்த பாத்திரத்தில் வாக்குகள் என்னும் பாலை வார்க்க பாரத மாதா அழைத்தாள். பலரும் சோம்பலிலோ அலட்சியத்திலோ அழைப்பை புறக்கணித்தனர். உடனே தீயவர் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எங்கெங்கும் அவள் காட்சி காசைக் கரியாக்குவது என்றால் அது பட்டாசு வெடிப்பதும் வாணவேடிக்கை விடுவதும் என்று சிலர் சொல்வார்கள். தெரிந்து தான் செய்கிறோம், நாம் விடும் வாணங்கள் நிலையாக ஆகாயத்தில் நட்சத்திரமாக இருக்கப் போவதும் கிடையாது. ஒரு சில விநாடிகள் ஆகாயத்திலே மின்னி மறையக்கூடிய வாண வேடிக்கையை பார்த்துவிட்டுப் பின் கண்களை மூடினால் உள்ளே அது மின்னிக்கொண்டு இருக்கிறது. அப்படியிருக்கிறபோது ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தோடு தோன்றுகிற அம்பிகையை ஆகாயத்தில் பார்த்தவர் அபிராமி பட்டர். அவளுடைய திவ்ய ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

என்ன செயல் செய்தாலும் மனதில் ஒரு நிறைவு இருக்க வேண்டும். ஒரு தொழில் செய்தாலும், சமையல் செய்தாலும், வாசலில் ஒரு கோலம் போட்டாலும் நிறைவு இருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையின் உச்சகட்டமான நிறைவு எது என்றால் அம்பிகை வழிபாடு. அம்பிகையைத் தொடர்ந்து வழிபடுவதால் ஏற்படும் நிறைவு எத்தகையது என உணர்த்துவது இந்தப் பாடல். பாடல், உடையானை என்று தொடங்குகிறது. அவள் தான் உடையவள் நாமெல்லாம் உடைமைகள், எப்போதுமே உடையவர்களுக்குத்தான் உடமைகள் மீதான கவனம் இருந்துகொண்டே இருக்கும். சராசரியாக ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பிறவா வரம் பெறுங்கள்! இன்றைக்கு நாம் கோவிலுக்குப் போகிறோம் என்றால் பூஜைக்குத் தேவையான எல்லாமே உடனடியாக கிடைக்கிறது. கோவில் வாசலிலேயே அர்ச்சனைத் தட்டு கிடைக்கிறது. முன்பே கட்டிவைத்த பூமாலை காத்திருக்கிறது. ஏன் புதுப்பூ கொண்டு வரவில்லையென்று கடவுள் நம்மிடம் கேட்கப்போவதும் இல்லை. கேட்டால் நாம் பதில் சொல்லப் போவதுமில்லை. வழிபாட்டில் மிகவும் முக்கியமான அம்சம் சிரத்தை. சிரத்தையுடன் செய்கிற பக்தியில் உருக்கமும் நெகிழ்ச்சியும் பெருக்கெடுக்கும். “விரவும் புதுமலர் இட்டுநின்பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல்லார்” சிரத்தையுடன் புதிய ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

மறக்கவும் முடியுமோ? அபிராமி சமயம் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தருகிற பாடல் இது. இன்றைக்கும் உங்களுக்கு ஒரு பொம்மை தேவைபடுகிறதா. ஒரு பாடம் தேவைப்படுகிறதா.ஒரு உருவம் தேவைப்படுகிறதா, எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கிற பக்குவம் உங்களுக்கு வர வில்லையா என்று உருவ வழிபாடு செய்பவர்களைப் பார்த்து சிலர் பேசுவார்கள். சக்கரங்களாகிய தாமரை மலரில் வீற்றிருக்ககூடிய அபிராமி தேவியே, நான் உலகத்தில் எந்தப் பிரபஞ்சத்தைப் பார்த்தாலும் நான் பார்த்துக் கொண்டிருப்பது அம்பிகையின் திருவுருவம். அவளுடைய ஜடா மகுடத்தினை ...
More...More...More...More...