அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அடுத்த பாடலில் மறுபடியும் ஊரைப் பார்த்து பிரகடனம் செய்வது போல் சொல்கிறார். என்னைப்போய் துர்தேவதை வழிபாட்டில் ஈடுபடுவன் என்று சொல்லி விட்டீர்களே, என்னைப் போய் வாமாச்சாரம் செய்பவன் என்று சொல்லிவிட்டீர்களே. சின்னச் சின்ன தெய்வங்களை நான் வணங்குகிறேன் என்று சொல்லிவிட்டீர்களே, இப்போது தெரிகிறதா? நீங்கள் சொல்லும் சின்ன தெய்வங்களெல்லாம் அவளுக்கு ஏவல் செய்பவர்கள். நான் அவளுடைய பிள்ளை பார்த்துச் சொல்லாமல் அம்பிகையைப் பார்த்தே விண்ணப்பிக்கிறார். சிலரை வெளிப்படையாகப் பார்த்தால் வஞ்சகர் என்று தெரியாது. ஆனால் நமக்கு தவபலம் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
காட்டுவித்தவள் அவளே நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சின்னச் சின்ன சம்பவங்கள் அவள் நமக்குத் துணையிருக்கிறாள் என்று காண்பிக்கும். அது போதுமா நமக்கு? அவள் எவ்விதத்தில் இருக்கிறாளோ அவளை அந்தவிதமாகவே காணவேண்டும் என்கிற ஆவல்தான் எல்லா பக்தர்களுக்கும் வரும். அதைக் காண்பதற்கான தகுதியையும் அவள்தான் தருகிறாள். மாமா மச்சான் என்று பழகிக்கொண்டிருந்த அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டுகிறபோது அதற்குரிய கண்களை அருளுகிறார் கிருஷ்ண பரமாத்மா. அம்பிகையை உள்ளவண்ணம் அறிந்து கொள்கிற தகுதியையும் அவளே தருகிறாள். அவளுடைய திருவுருவத்தை இதயத்திலே பதிப்பது, ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
வஞ்சகர் கூட்டு வேண்டாம் அதுவரை தன்மேல் இருந்த பழிச் சொற்களுக்கு மறைமுகமாக பதில் சொல்லி வந்த பட்டர் இந்த இடத்தில் நேரடியாகச் சொல்கிறார். அவரை எல்லோரும் வாமபாக வழிபாடு செய்பவர். வாமார்த்தத்திலே ஈடுபடுபவர். துர்தேவதைகளை கும்பிடுபவர் என்று சொன்னார்கள். இந்த விநாடியில் அவர் சொல்கிறார். உனது கண்களைப் பார்க்கும்போது உனக்கும் எனக்கும் இருக்கிற உறவு தெரிகிறது. தாயே உன் விழியால் உன் அருளை நீ சொரிகிறாய். ஆனால் என்னுடைய வழிபாட்டு நெறியை நீ பார்ப்பாயேயானால் உனக்கு வேதம் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
எங்கே நிலவு உருவாகும்? அம்பிகையின் திருவுருவத்தை வரைந்து காட்டுகிற பாடல்கள் ஏராளம். அந்த வரிசையில் இன்னொரு பாடல் அம்பிகையினுடைய திரு முலைகளின் வர்ணனையோடு தொடங்குகிறது. செப்புப் போன்ற திருமுலைகளில் அம்பிகை சந்தனத்தைப் பூசியிருக்கிறாள். அந்தத் தோற்றத்தில் அவள் எப்படியிருக்கிறாள்? நேராக அவள் திருச்செவியை நோக்கி பட்டருடைய வர்ணனை போகிறது. கொப்பு என்பது மேலே அணிகிற தோடு, வைரக்குழை என்பது கீழே அணிவது, தரளக் கொப்பு என்றால் முத்தில் ஆன தோடு என்று அர்த்தம். அம்பிகையின் திருமுலைகளில் இருந்து ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
ஒளிரும் கலா வயிரவி அடுத்த நான்கு பாடல்களில் ஓர் அழகிய வரிசை உள்ளது. இந்தப் பாடல் பதினாறு நாமங்களைக் கொண்ட பாடல். அதற்கடுத்த பாடல் இப்போது நிலவு தோன்றப் போகிறது என்பதை குறிப்பாக அபிராமி பட்டர் உணர்த்துகிற பாடல். அதற்கடுத்து நிலவு தோன்றியதும் அவருக்குள் தோன்றுகிற களிப்பை வெளிப்படுத்துகிற பாடல். தன் பிரார்த்தனைக்கு அம்பிகை அருள் செய்யும் நேரம் வருவதை உணர்ந்து சோடச நாமங்களால் தோத்திரம் செய்கிறார் அபிராமி பட்டர். இன்னொரு சிறப்பு இந்தப் பாடலில் உண்டு. ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அந்த(க)ப் பாதையை அடைத்திடு! முதலில் அம்பிகையின் அழகை வர்ணித்தார். பிறகு தோற்றத்தை எழுதிக் காட்டினார், அதை மனதிலே குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். எப்போதுமே யாராவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களுடைய அனுபவத்தில் அதனால் என்ன நடந்தது என்று கேட்பதற்கு நமக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். இதையெல்லாம் செய்தீர்களே, உங்களுக்கு என்ன கிடைத்தது? என்று அபிராமி பட்டர் இப்போது கேட்கிறார். அம்பிகையின் தோற்றத்தை மனதில் குறித்துக் கொண்டவுடனே இன்னொன்றும் அவருக்கு உள்ளுணர்வில் தோன்றியது. அம்பிகை என்ன விரும்புகிறாளோ ...