Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

திருமந்திரம் என்ற மாத்திரத்தில் பெரும்பாலானவர்களுக்கும் தெரிந்தபாடல்களில் ஒன்று மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல்பூதம் எங்கும் அபிராமியின் அருட்கோலத்தைக் காணுகிற பேரனுபவம் வாய்த்ததில் அபிராமி பட்டருக்கு அளவிட முடியாத ஆனந்தம். ஞானத்தில் வருகிற போதையின் அழகே அதிலிருக்கும் மிதமிஞ்சிய தெளிவுதான்.வேறுவகை மயக்கங்களில் வருகிற போதையில் தெளிவின் சுவடே இருக்காது. சீதை குறித்துக் கேள்விப்பட்டதில் கூட போதையேறி சீதையின் உருவெளித் தோற்றம் இராவணனுக்குத் தெரிந்தது.ஆனால் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பலருடைய வீடுகளிலும் திருமணக் கோலத்தில் தம்பதிகளின் புகைப்படங்கள் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும். அந்த மங்கலமான தோற்றம் பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியை உண்டாக்கும்.அபிராமி பட்டரோ தன்னுடைய இதயமாகிய சுவரில் அம்பிகையும் சிவபெருமானும் திருமணத் திருக்கோலத்தில் காட்சிதரும் தோற்றத்தை நிரந்தரமாகப் பதித்து வைத்திருக்கிறார் தன் அடியவர்களின் உயிரைக் குறிவைத்து காலன் வந்தால் ஆட்கொண்ட திருப்பாதஹ்த்டை முன்வைத்து அம்பிகை அப்பனுடன் முன்தோன்றி எமபயம் விலக்கி முக்தியைக் கொடுத்தருள்வாளாம். உரிய காலத்தில்ஆட்கொள்ள வசதியாக முக்திக்கான தகுதியையும் முன்கூட்டியே அம்பிகை தந்தும் வைத்திருக்கிறாளாம். முக்திக்கான ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

காண அரிதான பேரழகும் ஒருவகை அதிசயம்தான். வாஞ்சையும் வாத்சல்யமும் பொங்கும் திருவுருவும் அதிசயம்தான். அம்பிகை அத்தகைய அழகு. அம்பிகையின் திருவுருவைக் கண்டுதான் “கறுப்பே அழகு”என்ற முடிவுக்கு உலகம் வந்தது. “அதிசயமான வடிவுடையாள்”என்று ஆனந்திக்கிறார் அபிராமி பட்டர். “அரவிந்தம் எல்லாம் துதிசெய ஆனன சுந்தரவல்லி”. மலர்களிலேயே மிக அழகானது தாமரை.அந்தத் தாமரை மலர்களில் செந்தாமரைகளின் தலைவி திருமகள். வெண்தாமரைகளின் தலைவி கலைமகள். அபிராமியை அலைமகளாம் திருமகளும் கலைமகளும் துதிப்பதாலேயே அம்பிகையின் அழகில் மயங்கி தாமரைகள் எல்லாம்துதி செய்யும் பேரழகி ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

ஒலியும் அவளே ஒளியும் அவளே அழகும் குரலினிமையும் வாய்ந்த கிளி நாம் சொல்வதைத் திரும்பச் சொல்கிறது. நாம் சொன்ன வார்த்தைகளைக் கிளி பேசினால் நமக்கு எவ்வளவோ மகிழ்ச்சி.ஏன் தெரியுமா?கிளி நாம் சொன்னதைப்பேசுகிறது என்பது மட்டுமல்ல.அது நமக்காகப் பேசுகிறது. ஒரு குழந்தையிடம் அதன் தாய் பேசுவதைப்பாருங்கள்…! அந்தத் தாய் எவ்வளவு தேர்ந்த அறிஞராக இருந்தாலும் குழந்தையின் மழலை உச்சரிப்பைத்தான் தன் குரலில் பேசுவாள். சரியான சொற்களைத் தேர்ந்த உச்சரிப்பில் சொல்ல அவளுக்குத் தெரியும்.ஆனால் அன்னை தன்னைப்போலவே பேசுகையில் குழந்தை ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

ஒரு குழந்தையிடம் பத்து இலட்சம் ரூபாய்களைக் காட்டி “இதை வைத்துக் கொண்டு என்ன செய்வே?”என்று கேளுங்கள்.”நெறய்ய ஐஸ்க்ரீம் வாங்குவேன்” என்று சொல்லும்.இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, உலகத்திலேயே ஐஸ்க்ரீம்தான் உயர்ந்தது என்கிற அதன் அபிப்பிராயம். இரண்டாவது பத்து இலட்சம் ரூபாய்கள் என்றால் எவ்வளவு உயர்ந்தது என்று குழந்தைக்குத் தெரியாது. அம்பிகையின் பேரருள் எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியாத மனிதர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.தேவர்களுக்கே உரிமையான நிலையான பல இன்பங்களையும் அதனினும் மேம்பட்டதான முக்தியையுமே தரவல்லது அம்பிகையின் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

ஒரு பெரிய மனிதர் இருக்கிறாரென்றால் அவரைக்காண வெவ்வேறு நோக்கங்களுடன் வெவ்வேறு விதமான ஆட்கள் வருவார்கள்.அந்தப் பெரிய மனிதருக்கு சொந்தமாக சில ஆலைகள் இருக்கலாம், கடைகள் இருக்கலாம்.அவர் தன் பெற்றோர் நினைவாக ஓர் அனாதை இல்லமும் நடத்திக் கொண்டிருக்கலாம். அவருடைய தொழிற்சாலைகளில் வணிக வாய்ப்பு தேடி சிலர் சந்திக்க வருவார்கள்.அவருடைய நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகள் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமென்று வருவார்கள்.அவரோ நாளின் பெரும்பகுதியை அனாதைக்குழந்தைகளுக்கான விடுதியில்தான் கழிப்பது வழக்கம்.அங்கே அவருக்கு செலவுதான்.மற்ற இடங்கள் வருமானம் தருகிற இடங்கள்.அவற்றையெல்லாம் ...
More...More...More...More...