Blog

/Blog

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவை-ஓர் அறிமுகம்-3

தமிழ்ச் சமுதாயத்தின் தொல்மரபுகளையெல்லாம் மீட்டெடுத்த களஞ்சியம் தைப்பாவை. கண்ணனைச் சொல்லும் போது “கதிர்மதியம் போல் முகத்தான்” என்றாள் ஆண்டாள். இதனை உளவாங்கிய கவிஞரோ ” எங்கள் சமுதாயம் ஏழாயிரம் ஆண்டு திங்கள் போல் வாழ்ந்து செங்கதிர்போல் ஒளிவீசும்” என்றெழுதுகிறார். சங்க இலக்கியத்தில் போர்நிமித்தமாய் தலைவன் பிரிந்து செல்ல, தலைவி துயருற்றிருப்பது குறித்து நிறைய பாடல்கள் உண்டு.அந்த சாயலில் தைப்பாவையில் ஒரு பாடல்.வாளேந்தும் வீரன் பெண்ணைத் தொடும்நேரம் பார்த்து போர்முகம் வரச்சொல்லி ஓலை வருகிறது.இவள்தனிமையில் துயர்ப்படுகிறாள். “வாளைத் தொடு ...

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவை-ஒர் அறிமுகம்-2

கவியரசர் அனாயசமான ஓசையழகுடன் எழுதியுள்ள தைப்பாவையில் ஒரு காட்சி ஒழுங்கும் தானாகவே அமைந்துவிடுவதுதான் ஆச்சரியம். தைமாதம் முதல்நாளில் உழவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே எழும் ஓசைகள் வழியே உணர்த்துகிறார் கவிஞர். காளை மணியோசை களத்துமணி நெல்லோசை வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய் வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய் (மேழியர்-உழவர்) ...

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவை-ஒர் அறிமுகம்-1

கவியரசு கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த வேளையில் எழுதிய நூல் தைப்பாவை. சமயப்பற்றுள்ள குடும்பத்தில் பிறப்பு,சமய நூல்களில் லயிப்பு ஆகியன அவரிடம் திருப்பாவை,திருவெம்பாவை ஆகிய நூல்களைக் கொண்டு சேர்த்திருந்தது. அவற்றின் யாப்பழகும் ஓசைச் செப்பமும் அவர் மனதில் இடம் பிடித்ததன் விளைவாக எழுந்த நூல் தைப்பாவை. திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் பாவை வடிவமொன்றைச் செய்து அதனை முன்னிலைப்படுத்தி பாவாய் என அழைத்து தோழியர் பாடுவதாக அமைந்திருக்கும். ஆனால் தைப்பாவையில் கவியரசு கண்ணதாசன் தைமகளையே தைப்பாவாய் என அழைத்துப் பாடியிருப்பார். ...

மார்கழி – மண்ணினில் பிறந்தார் பெறும் பயன்

திருமாலுக்கும் நான்முகனுக்கும் சிவபெருமானை நேரில் பார்த்து ஆக வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உண்டு. கயிலாயத்திற்குப் போகும் போதெல்லாம் அவர் இருந்தால் தானே! 64 திருவிளையாடல்கள் செய்ய ஓயாமல் மதுரைக்குப் போவது, நாயன்மார்கள் அறுபத்து மூவரை ஆட்கொள்ள அடிக்கடி கிளம்பிப் போவது, சித்தர்கள் அழைத்தார்கள் என்று போவது, பக்தர்கள் அழைத்தார்கள் என்று போவது, இதே வேலைதான் சிவபெருமானுக்கு. கயிலாயத்திற்கு அடிக்கடி சென்று பார்த்து ஏமாந்து திரும்புவதே வழக்கமாகிவிட்ட திருமாலுக்கும் நான்முகனுக்கும், “நாமும் பூமியிலேயே பிறந்திருக்கலாமோ” என்று தோன்றிவிட்டது. அதுவும் ...

மார்கழி 29 பூமிக்கு வரச்செய்த புண்ணியன்

இறைவன் தன் அடியவர்களை நெருங்கி வர அனுமதிக்கும் இடம் பூமிதான்.வானகத்தில் தேவர்களுக்குஅவனை நெருங்கக் கூட துணிவு கிடையாது. தன் அடியார்களுடன் தான் நெருங்கிப் பழக வேண்டும் என்பதற்காகவே அவர்களை மண்ணில் வந்து வாழச் செய்தானாம் சிவபெருமான்.”பாரில் நின்னை சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே” என்கிறார் அபிராமி பட்டர். அவனுடைய அருளின் வள்ளன்மை திருப்பெருந்துறையில் காட்சி தந்த கருணையில் வெளிப்படுகிறது. அடியவர்கள் கண்களில் இனித்து களிப்பு தருகிற தேனாக இருக்கிறான். கடலில் கடைந்த அமுதாய் கரும்பாய் அடியாரின் எண்ணத்தில் ...

மார்கழி 28 குருவாக வந்த சிவன்

மூவராலும் தேவராலும் அறிய முடியாத சிவபெருமான் தன் பாகம்பிரியாளோடு தன்னடியார்களின் மன வீடுகளில் தொடர்ந்து எழுந்தருள்கிறார். இந்த எளிவந்த தன்மையைப் பாடும் போதே சிவபெருமான் குருவடிவாய் திருமேனி கொண்டு வந்ததையும் ,திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்டதையும்,குருவடிவு காட்டியதையும் நினைந்து உருகுகிறார் மாணிக்கவாசகர் முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் ! பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே ! செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் ...
More...More...More...More...