Blog

/Blog

மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்

முகிலை முகிலே என அழைக்காமல்,மழையே என்றழைத்துப் பேசுகிறார் மாணிக்கவாசகர். ஆண்டாளும் ஆழி மழைக்கண்ணா என்று திருப்பாவையில் பாடுவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். முகில் கண்ணன் திருவுருவை ஒத்திருப்பதாக ஆண்டாள் பாடுவதும், முகில் அம்பிகை திருவுருவை ஒத்திருப்பதாக மாணிக்கவாசகர் பாடுவதும் ஒரே உத்திதானா என்றால், இல்லையென்றே தோன்றுகிறது. ஏனெனில் இங்கே நிறத்தால் மட்டும் முகிலானது அம்பிகையை ஒத்ததாக இல்லை.அது உருக்கொள்ளும் போதே அம்பிகையின் அருட்செயலுடன் ஒப்புநோக்கத்தக்க செயலொன்றை செய்கிறது. “முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து” முகிலானது கடல் நீரை முகந்து ...

மார்கழி-15-ஆண்டவனைப் பாடுவதா? அடியவரைப் பாடுவதா?

இறையடியாரின் இயல்பு இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது. சிவசிந்தையில் தம்மையே பறிகொடுத்தவர்கள் பற்றிய வர்ணனை திருவாசகத்தில் பல இடங்களில் காணப்படுகிற ஒன்றுதான்.அடியவர் தனியே இருக்கையில் என்னுடைய இறைவனென்று சொல்லி மகிழ்வதும், அடியார் திருக்கூட்டத்தின் நடுவே இருக்கையில் ‘நம்பெருமான்’என்பதும் இயற்கை. முதல்நிலை உரிமை பற்றிய நிலை.இரண்டாம் நிலை,உறவு பற்றிய நிலை. தனிமையிலும் தொண்டர் குழாத்திலும் மாறி மாறி இறைவன் பெருமையையே வாய் ஓயாமல் பேசுகிற இயல்பு கொண்ட இப்பெண்,ஒவ்வொரு முறை இறைவன் திருநாமத்தை சொல்லும் போதும்,அவள் கண்களில் நீர் பெருகிய ...

மார்கழி 14-அவள் அருளாலே அவன் தாள் வணங்கி

மாணிக்கவாசகர் சொல்லும் இறையனுபவத்தின் அடையாளங்களில் ஒன்று,”மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்தல்”.மார்கழியில் குளிர்ந்த நீர்நிலையில் இறங்கினாலே மெய் நடுங்குகிறது.சிவசக்தியின் கருணையாகிய பொய்கையில் இறங்கினால் !! இன்றளவும் இறையனுபவத்திற்கு ஆட்படுபவர்கள் உடலில் அத்தகைய விதிர்விதிர்ப்புகளை நாம் காணலாம். இறையனுபவத்தில் ஊறித் திளைக்கும் பரவசப் பெருக்கத்தில், சிவனருளுக்கு இவ்வுயிரை அருகதை உடையதாய் ஆக்கும் பொருட்டு அதன் மலங்களை நீக்கி தகவுடைய உயிராக்கிய அம்பிகையின் திருவடிகளையும் அப்பனின் திருவடிகளையும் வணங்கி இப்பெண்கள் மகிழ்கின்றனர். ஒருபாத்திரம் சேற்றில் விழுந்தால் பெண்கள் பணியாளர்களை விட்டு எடுக்கச் சொல்வார்கள். ...

மார்கழி13- வினை நீக்கும் வழிபாடு

எந்தவொன்றை மிகுதியாக சிந்திக்கின்றோமோ அதுவே எங்கும் புலப்படுவது இயல்பு. இறைசிந்தையிலேயே இதயம் தோய்ந்த இப்பெண்கள்,நீராடப் போய்ச்சேர்ந்த பொய்கையிலும் அம்மையப்பனையே காண்கிறார்கள். குவளை மலரின் கருமை நிறம்,அம்மையை நினைவூட்டுகிறது. செந்தாமரை சிவப்பரம்பொருளை குறிக்கிறது.வினை நீக்கும் உடல் குறுகி பணிவு காட்டும் அடியார்கள் மந்திரங்கள் உச்சரித்த வண்ணம் வலம் வருவது போல்,வண்டுகள் பொய்கையை சூழ்கின்றன. சிவசக்தியின் பெருங்கருணையே பொய்கையாய் பெருகி நிற்க, அந்தக் கருணையின் பெருக்கில் திளைத்தாடி,அணிகலன்கள் தாண்டி, உடலையும் தாண்டி உள்நிலையில் ஊடுருவும் திருவருளில் திளைப்போம் என்பது இப்பாடலின் ...

மார்கழி 12- பொய்கையா? சுனையா?

முந்தைய பாடலின் நீட்சியாகவும் சிவானந்தம் என்னும் அற்புதத்தில் ஆழ்ந்து திளைக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடாகவும் இப்பாடல் அமைகிறது.சிவமாகிய தீர்த்தத்தில் நீந்திக் களித்து விளையாடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை. தானே தீர்த்தனாய் வினைகளை தீர்ப்பவனாய் விளங்கும் இறைவன் சிற்றம்பலத்தில் அனலேந்தி ஆடுகிற கூத்தனாய் திகழ்கிறான். பிரபஞ்சம் முழுவதையும் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்கிறான். அவன் புகழ்பாடும் வார்த்தைகள் பாடி கைவளை குலுங்க ஆடை அணிகள் ஆர்த்து ஒலியெழுப்ப,கூந்தலின் மேலே வண்டுகள் ஆர்க்க,பூக்கள் கொண்டபொய்கையில் குடைந்தாடி,உடையவனாம் சிவனுடைய திருவடிகளைப் ...

மார்கழி 11- சிவப்பொய்கை! தவக்குளியல்!

சிவத்தின் பெருங்கருணையே ஒரு பொய்கையாய் பெருகி நிற்கிறது.அதுவும் வண்டுகள் மொய்க்கும் பொய்கை. அதாவது பொய்கையை வண்டுகள் மொய்க்கக் காரணம் அதில் பூத்திருக்கும் தாமரைகள். சிவப்பொய்கையில் குதிக்கும் இந்த மனித வண்டுகள் அவனுடைய திருவ்டித் தாமரைகளைத் தேடி கைகளால் குடைகின்றன. வழிவழியாய் சிவனை வழிபடும் தவம் செய்த இவ்வுயிர்கள் ,தழல்போல் சிவந்து திருநீறு பூசிய சிவனை, சிற்றிடையும் தடங்கண்களும் கொண்ட உமையம்மையின் மணவாளனை உருகிப் பாடி உபாசிக்கிறார்கள். இறையருளுக்குப் பாத்திரமானவர்கள் வாழ்க்கை அற்புதங்களும் அதிசயங்களும் நிரம்பிய வாழ்க்கை.அவற்றுக்கு நீங்கள் ...
More...More...More...More...